புதன், 25 பிப்ரவரி, 2009

கவிதை போல ஏதோ ஒன்று




கவிதை என label குத்தியிருந்தாலும் இதை புத்திசாலித்தனமான ம்ஹ்ம் அதுவுமில்லை அலங்காரமான வார்த்தை கோலங்களாகவே பதிந்துள்ளேன்.
இணையத்தில் இது என் முதல் முயற்சி
இவ்வலங்காரங்களுக்கு பின் இருக்கும் அவலங்கள் உணரப்படின் அது பற்றிய கருத்துக்களை பகிருங்கள்



உலகப் பொருளாதார நெருக்கடி
தெரியுமா இவனுக்கு
சம்பள உயர்வு கேட்கிறான்
சொன்னவனுக்கு தெரியாது
அவன் சுமையும் எங்கள்
முதுகுகளில் கனப்பது




சாதிக்கொரு சாமிகள்
வைத்துக் கொண்டோம்
நம் லயங்களுகிடையே போலவே
இடைவெளி நம் மனதிலும்
எதிரெதிரே காணநேர்ந்தால்
முகம் திருப்பிக் கொண்டோம்
முறுகல் இறுகி நேற்று
நாம் வெட்டிக் கொண்டபோது
வெளியே பேசிக் கொண்டார்கள்
தோட்டக் காட்டான்களுக்குள்
ஏதோ சண்டையாம்



2 கருத்துகள்:

kuma36 சொன்னது…

//உலகப் பொருளாதார நெருக்கடி
தெரியுமா இவனுக்கு
சம்பள உயர்வு கேட்கிறான்
சொன்னவனுக்கு தெரியாது
அவன் சுமையும் எங்கள்
முதுகுகளில் கனப்பது///

காலம் காலமாக நசுக்கப்பட்ட கூட்டமாச்சே!! எமது மக்கள் சுயபுத்தியில் முடிவுகளை எடுக்க வேண்டும் இல்லையேல் சுமந்துகொண்டே இருக்க வேண்டியது தான்

kuma36 சொன்னது…

//சாதிக்கொரு சாமிகள்
வைத்துக் கொண்டோம்
நம் லயங்களுகிடையே போலவே
இடைவெளி நம் மனதிலும்
எதிரெதிரே காணநேர்ந்தால்
முகம் திருப்பிக் கொண்டோம்
முறுகல் இறுகி நேற்று
நாம் வெட்டிக் கொண்டபோது
வெளியே பேசிக் கொண்டார்கள்
தோட்டக் காட்டான்களுக்குள்
ஏதோ சண்டையாம்//

இன்றைய நிலமையில் தமிழர்களின் ஒற்றுமையின்மையே நமக்கு இந்த கதி!!

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails