"அண்ணே என் பேர் பத்திரிகையில் வரணும்னா என்னனே செய்யணும்?" என்று கேட்கும் செந்திலிடம் கவுண்டமணி " ஓன் வீட்டுக்கு பக்கத்துல சின்னக் குழந்த இருக்கா? அதப் புடிச்சி கடிச்சி வச்சிரு" எனச் சொல்வார். இப்படி அசாதாரணமாக ஏதும் செய்தால்தான் என் பெயரும் பத்திரிகையில் வரும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழ்தேவி புண்ணியத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த நானும் இணையத்தில் எழுதும் இலங்கைப் பதிவர்களில் ஒருவன் என்ற வகையில் கடந்த வார நட்ச்ச்திரமாக தினக்குரல் வாரமஞ்சரியில் இணையத்தில் எம்மவர் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன். தினக்குரலுக்கும் யாழ்தேவி தள நிர்வாகிகளுக்கும் நன்றிகள். மிகவும் காலந்தாழ்த்தி நன்றி தெரிவிப்பது பற்றிய நிறைய வருத்தத்துடன். கூடவே இந்த விடயத்தை முதலில் அறியத் தந்த சகோதரப் பதிவர் கனககோபிக்கும் அத்தோடு உடன் பின்னூட்டம் மூலம் வாழ்த்து சொன்ன தங்க முகுந்தன், மதுரகன் ஆகியோருக்கும்.
விருப்பமென்றால் படத்தை கிளிக்கி பெரிதாய் பாருங்கள்
சரி இதற்கான எதிர்வினை ஊரில் எப்படி இருந்தது தெரியுமா? என்னிடம் Individual ஆக கற்கும் மாணவிகள் சிலர் தவிர இதுவரை ஒருவரும் என்னிடம் இதுப்பற்றி கதைக்கவில்லை. அட நம்ம வீட்டில் கூட. நானும் யாரிடமும் சென்று இந்த சண்டே தினக்குரல் பாருங்கள் என்னைப் பத்தி வந்திருக்கு என சொல்லும் ரகம் இல்லையாதலால் இது பற்றி யாருக்கும் தெரியாமலே போய் விட்டது. அதுவும் தினக்குரல் விரைவில் விற்றுத் தீரும் ஒரு பத்திரிகை. எல்லாப் பயலும் வாங்கியிருக்கான் ஆனா வாசிக்கத்தான் இல்ல. எனினும் பண்டாரவளையிலிருந்து ஒரு நண்பன் அலைபேசி வாழ்த்து சொன்னான். மகிழ்வாய் உணர்ந்தேன். எல்லாமே இம்மாதிரியான ஒரு அங்கீகாரத்திற்குதானே
மீள ஒருமுறை நன்றிகள்
13 கருத்துகள்:
வாழ்த்துக்கள். தொடரவும்.
வாழ்த்துகள் நண்பரே.. அந்த தமிழின வரலாற்றுப் பதிவை தொடருங்களேன்?
நன்றி யோகன்
நன்றி நர்சிம்
நன்றி முகிலன் நிச்சயம் தொடர்கிறேன் கொஞ்சம் வேலைப்பளு அத்தோடு சில தகவல்களை நிச்சயப் படுத்திக் கொள்ளவும் வேண்டுமே.
தினக்குரலில் உங்கள் அறிமுகம் அருமையாக, தேர்ந்த எழுத்தாளர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணியில் உள்ளது.. வாழ்த்துகள்.
குறிப்பாக.. கடவுள் ம(வெ)றுப்பு.. காதல் குறித்த பார்வைகள் எல்லாம்.
இப்பத்திக்கு ஆஜர் போட்டுக்கிறேன். அப்புறமா வாறேன். ஸடாக் எடுத்துக்கிட்டு இருக்கிறேன்
நன்றி புபட்டியன்
ஆமா உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராக தெரியவில்லை
நன்றி ஐயா
வாழ்த்துக்கள் தர்ஷன்
Congrats!!!
நன்றி அச்சு
நன்றி கார்த்திகேயன் G
வாழ்த்துக்கள் தர்சன் சார்..
தாமதமாக வாழ்த்தியதற்கு என்னை மன்னிக்கவும்..
இது உங்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்..தொடரட்டும் உங்கள் பணி..
நன்றி கார்த்தி
ரொம்ப மகிழ்ச்சி தர்ஷன்.. உங்களின் வர்ணனையும் அருமை.. தொடர்ந்து கலக்குங்கள்..
எழுத்துகள் மேலும் எழுதப்பட என் வாழ்த்துகள்
கருத்துரையிடுக