Monday, March 22, 2010

என்னா கொடுமை இளையத் தளபதி இதெல்லாம்

You are the bows from which your children as living arrows are sent forth. என்றார் கலீல் கிப்ரான். ஆனால் நம் பெற்றோருக்கு இன்னமும் புரியாதது இதுதான். அவர்கள் தமது குழந்தைகளை அப்படியே தனது பிரதிகளாக வார்த்தெடுக்கவோ அல்லது பொருளாதார போட்டிகளில் தப்பிப் பிழைக்கத் தக்க எந்திரங்களாகத் தயார் செய்யவோதான் பிரியப்படுகின்றனர்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் உலகமயமாக்கம் எனும் பெயரால் இன்று மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களின் மூளைவளத்தையும் தமக்கேற்றாற் போல் சுரண்ட வசதியாகவே இந்நாடுகளின் கல்வித் திட்டமும் அமைந்துள்ளது. நம் குழந்தைகள் தாங்கும் சுமை குறித்து எவரும் பெரிதாக கவலைக் கொள்வதில்லை. இதைப் பற்றி எல்லாம் பேசியோ எழுதியோ தீர்த்தவற்றைப் பற்றி யாரும் பெரிதாக அக்கறை படவில்லை.

இதைப் பற்றி மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் நிறைய மசாலா சேர்த்து ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வந்தப் படம் த்ரீ இடியட்ஸ். அமீர்,கரீனா,போமன் ஹிரானி ஆகியோருடன் நம்ம மேடி நடித்தது.

ஆனால் அந்தப் படத்துக்கு வந்த சோதனையைப் பாருங்கள் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகின்றாராம் நம்ம இளையத் தளபதி. வழமையாக அவருக்குத் தோதான கதைகள் ஆந்திராவில்தான் அகப்படும் பெரும்பாலும் மகேஷ் பாபு நடித்தது. இம்முறை இவரிடம் மாட்டியிருப்பது அமீர் கான்.

இயக்குனர்
விஷ்ணுவர்தனாம் சோ அது பிரச்சினையில்லை டெக்னிக்கலி படம் நன்றாகவே இருக்கும் ஒரு ரிச்சான கலரில். அனுவர்தன் விஜயை அழகாக ஒரு காலேஜ் மாணவன் போல நிச்சயம் காட்டி விடுவார் தனது அழகழகான ஆடைத் தெரிவுகளின் மூலம். எல்லாவற்றையும் விட டைட்டிலும் தளபதிக்கு அத்தனை அழகாய் பொருந்துகிறது.

ஆனால்
படத்தில் அவர் அறிவுரை சொல்ல வாய்ப்பு அதிகம் அம்மாதிரியான காட்சிகளில் அவரது ரசிக சிகாமணிகளை திருப்தியுறச் செய்யவென எழுதப்படக் கூடிய வசனங்களையும் அப்போது அவரது நடிப்பையும் கொஞ்சம் கண்ணை மூடி கற்பனை செய்து பாருங்கள். ப்ளீஸ் விஜய் எங்களை விட்டு விடுங்கள். Roland emmerich படக் காட்சிகள் நிஜத்தில் நிகழ்வதை நாம் விரும்பவில்லை. தமிழ் கூறும் நல்லுலகு பிழைத்துப் போகட்டும்.

13 comments:

SShathiesh said...

வணக்கம் தலைவா இப்போதிருக்கும் முன்னணி நடிகர்களில் விஜய் ஒன்றும் இந்த கதாபாத்திரகுத்துக்கு பொருத்தமானவர் இல்லை. உங்களை போன்றவர்கள் என்ன நினைக்க்ன்ரீர்கள் என புரியவில்லை. சிலவேளை இப்படி எழுதினால் ஹிட் ஆகும் என எழுதுகின்றீர்களா? கொஞ்சம் யோசித்து பாருங்கள் சச்சின்,குஷி போன்ற படங்களை. அப்போது தெரியும். அதிரடி அடிக்கவும் அமைதியானா காதலும் விஜய்க்கு வரும் என உங்களுக்கு தெரியாததை நினைக்க வருத்தமாய் இருக்கின்றது.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கொஞ்சம் பயமா தா இருக்கு பார்க்கலாம் ..

நாஞ்சில் பிரதாப் said...

என்ன சாமி இப்படி ஒரு குண்டைத்துக்கிப்போடறீங்க... ஆண்டவா தமிழ்நாட்டை நீதான் காப்பாத்தனும்...கொடுமைங்க இதெல்லாம்...மனிதஉரிமை அமைப்பு சும்மா பார்த்துட்டா இருக்கு...

முகிலன் said...

சரியாய்ச் சொன்னீர்கள்.. நானும் இதை நினைத்து பயந்து கொண்டே இருக்கிறேன்.. :((

தர்ஷன் said...

அன்பின் சதீஷ்

விஜய் மீது எனக்கென்ன தனிப்பட்ட விரோதமா
அப்படியெல்லாம் இல்லை நீங்கள் சொன்ன பழையப் படங்களெல்லாம் காதல் படங்கள் அதிலும் அவர் பன்ச் டயலாக் எல்லாம் பேசத்தான் செய்தார். மற்றும் படி அவரது மேடை பேச்சுக்களையோ அல்லது பேட்டிகளையோ பாருங்கள் கொஞ்சமும் முதிர்ச்சியில்லாது இருக்கும். கடைசி பத்து வருடங்களாக அவரது படத் தேர்வுகளும் அத்தனை ரசிக்கும் படியாய் இல்லை. ஆகவே இவர் இந்தக் கதையை சரியாய் உள்வாங்கிக் கொள்வாரா? தமக்கு உவப்பிலாத கல்விமுறை மீது தமக்கிருக்கும் விமர்சனத்தை ஒரு விதமான அலட்சிய மனோபாவத்துடன் கூடிய கல்லூரி வாழ்க்கை முறை மூலம் எதிர்கொண்ட ராஞ்சொவாக மாற இவரால் முடியுமா?
இளைய தளபதியாக அல்லாமல் வெறும் நடிகர் விஜயாக அவர் இதில் நடிப்பாரெனில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு விஜய் ரசிகனாக அவர் அப்படி நடித்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இம்மாதிரி எத்தனை பேரை திருப்தி படுத்த வேண்டியவராக அவர் இருக்கிறார் தெரியுமா?
அதனால்தான் சொல்கிறேன் இந்த படத்தை அவர் விட்டு விடட்டும்.

தர்ஷன் said...

நன்றி ஸ்ரீ கிருஷ்ணா

நன்றி நாஞ்சில் பிரதீப்
உங்கள் முதல் வருகை உங்கள் விருப்ப மலையாளப் படங்களையும் தளபதி ஒரு கை பார்க்க போவதாய் கேள்வி

நன்றி முகிலன்

SShathiesh said...

அந்தக்காதல் படங்களில் பஞ்ச அளவாக இருந்தது. அவர் மாஸ் ஹீரோ ஆகிவிட்டார் எனவே பஞ்ச இல்லாமல் இனி அவர் படம் வரும் என நாம் எதிர்பார்ப்பது தப்பு. அவரின் மேடைப்பேச்சு, பேட்டி போன்றவற்றுக்கும் இந்தப்படத்தில் நடிப்பதுக்கும் என்ன சம்பந்தம். அந்த பத்து வருடத்துள் தான் கில்லி வந்தது. ரசிக்கும் படி இல்லை என சொல்ல முடியாது ரசனை மாறி விட்டது. வேண்டுமானால் உங்களுக்கு மட்டும் பிடிக்கவில்லை என்ற உங்கள் சொந்தக்கருத்தாக வைக்கலாம். நீங்கள் சொன்னதை ஏற்கின்றேன். . ஓவர் அலட்டல் இல்லாமல் அந்தக்கதாபாத்டிரத்துக்கு தேவையானதை மட்டும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் பொருத்தமானவர் என ஷங்கர் சொன்னதை இந்த இடத்தில் நினைவு படுத்துக்கின்றேன்.

இன்னொரு இலங்கை பதிவராக உங்களை இனம்கன்டத்தில் மகிழ்ச்சி. அப்படியே நம் பக்கங்களுக்கும் வந்து செல்லுங்கள்.

ஜகதீஸ்வரன் said...

அய்யயோ விஜயா?

shan said...

only vijay can act comedy type movie. thats the reason for the 3 idiots, . vijay king of kollywood. king of box office

karges said...

SShathiesh தீவிர விஜய் ரசிகர் போல..... விமர்சனங்கள் நியாயமாக இருந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொள்வது நலம்.... விஜய்க்கு என்றில்லை.... கமல், அஜித் என்று யாராயினும் சரி.... ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.... :-)

SShathiesh said...

karges நான் தீவிர விஜய் ரசிகன் தான். நீங்கள் என் கருத்துக்களை முழுமையாக படிக்கவில்லை என நினைக்கின்றேன். அவர் சொன்ன பஞ்ச டயலாக் இல்லா விஜயை தான் இந்த படத்தில் எதிர்பார்க்கின்றோம் என்ற கருத்தை நான் ஏற்றதை நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன்.

Hisham Mohamed - هشام said...

இன்றுதான் உங்கள் தளம் வந்தேன் அருமை, தொடர வாழ்த்துக்கள்.

தர்ஷன் said...

நன்றி ஹிஷாம்

Post a Comment

Related Posts with Thumbnails