சென்ற வருடத்தில் தாம் படித்த பதிவுகளில் பிடித்த ஒன்றாக என் பதிவையும் குறிப்பிட்டிருக்கிறார். பதிவர் வந்தியத்தேவன் அவருக்கு எனது நன்றிகள். ஆனால் கொஞ்சம் அதிகமாகவே ஆணி பிடுங்க வேண்டியிருப்பதால் இந்த வருடம் எத்தனை பதிவுகள் இட முடியுமென்பது சந்தேகம்தான். ஆனால் நேரத்தை சரியாக முகாமைப் படுத்த முடிந்தால் நிறைய பதிவிடல் சாத்தியமே. முயற்சிப்போம்.
தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் சச்சி,யோகராஜை தொடர்ந்து மூத்த அரசியல்வாதி எம்.எஸ்.செல்லச்சாமியும் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தயாராகி விட்டார். எனக்குத் தெரிய இப்போது CWC இல் ஜூனியர் தொண்டாவுடன் முத்து சிவலிங்கம் மட்டுமே இருக்கிறார் என நினைக்கிறேன். மலையக வாக்குகள் அதிகமாக எந்தப் பக்கம் போகும் என்பது தொடர்பில் இப்போது ஒரு முடிவுக்கு வரக்கூடியதாகவே உள்ளது.
யாழ் வன்னி வாக்குகளும் தமிழ் கூட்டமைப்பின் முடிவின் படியே இடப்படும் என நினைக்கிறேன். கிழக்கு தமிழ் வாக்குகள் மட்டுமே மற்றப் பக்கம் போகும் வாய்ப்புண்டு. மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் மாற்றம் ஏதும் தாக்கம் விளைவிக்குமா என்பது தெரியவில்லை.
முஸ்லிம் மக்களின் வாக்குகள் தொடர்பில் என்னால் எதிர்வு கூற முடியவில்லை. வடக்கு கிழக்கு பிரிந்ததில் பெரும் பங்காற்றிய ஜேவிபி மற்றும் இத்தீர்ப்பை வழங்கிய சரத் என் சில்வா போன்றோர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பது, முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் இன்மை என்பன எவ்வாறானத் தாக்கங்களை உருவாக்கும் என்பது தெரியவில்லை.
சிங்களர்களில் நகர்புறத்தினர் மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்க்கினும் கிராம மக்கள் இன்னமும் ஜனாதிபதியை ராஜாதி ராஜனாகவே பார்க்கின்றனர். எப்படியோ தேர்தல் மிகுந்த பரபரப்பான ஒன்றாக இருக்கும்.
7 கருத்துகள்:
Join Poosaram - Sri Lankan Blogger's Directory
பூச்சரம் வெள்ளிமலர் போட்டிக்கு "இலங்கை ஜனாதிபதி தேர்தல்" அரசியில் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.. எதிர்வரும் ஜனவரி கடைசிவரை தொடர்ச்சியான தலைப்பாக இது அமையும்.
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
மிகவும் தெளிவாக ஆராய்ந்துள்ளீர்கள். நான் அரசியல் விடயங்களில் ஒதுங்கியே நிற்பதுண்டு.
தேர்தல் முன்னோட்டம் நன்று..
நன்றி டொக்டர்,
ஆம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருத்தலே நலமாகும்.
நன்றி புலிகேசி
சந்திரிக்கா சரத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவிட்டாரா? இதெப்ப நடந்தது?
பொறுத்திருந்து பார்ப்போம்...
யாழ்ப்பாணத்தில் த.தே.கூ முடிவுக்கு ஆதரவு அதிகமாக இருக்க வாய்ப்புக்கள் இருந்தாலும், வவுனியாவில் அவர்களுக்கு முன்பிருந்து செல்வாக்கு இப்போது இல்லையென்று நம்புகிறேன்...
பார்ப்போம்....
கருத்துரையிடுக