Thursday, January 6, 2011

லவ் மூடில் ட்வீட்டியவை

ஏனோத் தெரியவில்லை சில நாட்களாகவே இப்படித்தான். போனைத் தவிர யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. சாப்பாடெல்லாம் அரையுங் குறையுமாய், பகல் நேரத்தில் கூட வெளியே மின்குமிழை ஒளிர விடுகிறேன், குறுந்தொகை, குறளில் குறிப்பாய் மூன்றாம் பால், கண்ணம்மா பாடல்கள் எல்லாம் மீள்வாசிப்பு செய்கிறேன். சினிமாக் காதல் பாடல் வரிகளை facebook இல் Status ஆக இடுகிறேன். விட்டால் தபூ ஷங்கர்தான் தமிழின் ஆகச் சிறந்தக் கவி எனச் சொன்னாலும் சொல்வேன். அப்படியான ஒரு பொழுதில் எக்கச்சக்க லவ் மூடில் ட்வீட்டியவை

துணிக்கடைகளில் தொங்கும் அழகற்ற ஆடைகள் கூட உன் உடல் தழுவிய அடுத்தக் கணமே அழகாகிவிடுகின்றன சீக்கிரம் சொல் நான் எப்போது அழகாவதாம்

காலை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்கிறேன். நேற்றிரவு அலைபேசி வழியே நீ கொடுத்த முத்தத்தின் ஈரத்தை

வழமையிலும் குளிர்வதாய் அங்கலாய்த்தாய் போர்வையால் போர்த்துகிறேன் நீ அணைக்கச் சொல்வது புரியாமல்

கவிதைகளுக்கும் உனக்கும் காததூரமென்றாய் அப்படியென்றால் குறுந்தகவல் எனும் பெயரால் நீ அனுப்புபவைகளுக்கு பெயர் என்ன

ஏதேனும் பரிசாய் தர பிடித்ததைக் கேட்டால் குழந்தைகள் என்கிறாய் நேரில் பார்க்கையில் ஒதுங்கிச் சென்றால் எப்படித் தருவதாம்

கட்டிப்பிடித்துறங்கும் தலையணைக்கு உன் பெயர் வைத்தது தப்பாய் போயிற்று. உறை மாற்றும் போது செல்லமாய் சிணுங்குகிறது

அப்படியே நண்பர்கள் ட்வீட்டரில் என்னைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் இந்த லிங்கை க்ளிக்கி

21 comments:

கார்த்தி said...

ஐயோ பாழ்ங்கிணறுக்குள்ள நீங்களும் விழுந்திட்டிங்களா?

ஜீ... said...

ஏன்? எப்பிடி? என்னாச்சு?

டிலீப் said...

//துணிக்கடைகளில் தொங்கும் அழகற்ற ஆடைகள் கூட உன் உடல் தழுவிய அடுத்தக் கணமே அழகாகிவிடுகின்றன சீக்கிரம் சொல் நான் எப்போது அழகாவதாம்//

ஹி...ஹி... சூப்பர் அண்ணா
தல தளபதி No போட்டி

ம.தி.சுதா said...

/////கட்டிப்பிடித்துறங்கும் தலையணைக்கு உன் பெயர் வைத்தது தப்பாய் போயிற்று. உறை மாற்றும் போது செல்லமாய் சிணுங்குகிறது////
ஆகா யாமாய்க்கிறீங்களே...

Lenard said...

ஆஹா என்ன ஆச்சி.. ??????

தர்ஷன் said...

அடடா என்ன கார்த்தி இப்படி சொல்றீங்க நிச்சயமா பாழுங்கிணறு இல்லை

என்ன ஜி மணிரத்தினம் படத்தில் போல் கேட்கிறீர்கள்

நன்றி திலீப்

நன்றி சுடுசோறு சுதா
தமிழ்மணம் தேர்வின் இறுதிக்கட்டத்திலும் வெல்ல வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

@Lenard
அட எல்லோர்க்கும் ஆவதுதான்

Jana said...

பேஸ்புக்கில் ஒரு புருசோத்மன்(Maruthams), டுவிட்டரின் ஸ்ரீதர்ஷனா?
நடக்கட்டும் நடக்கட்டும்.

தர்ஷன் said...

நன்றி ஜனா அண்ணா

Subankan said...

ரசித்தேன் :)

செழியன் said...

அருமையான வரிகள்//காலை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்கிறேன். நேற்றிரவு அலைபேசி வழியே நீ கொடுத்த முத்தத்தின் ஈரத்தை

வழமையிலும் குளிர்வதாய் அங்கலாய்த்தாய் போர்வையால் போர்த்துகிறேன் நீ அணைக்கச் சொல்வது புரியாமல்//

கன்கொன் || Kangon said...

அருமை....!

Mohan said...

So cute!

தர்ஷன் said...

நன்றி சுபாங்கன்,கோபி,செழியன்,மோகன் அனைவருக்கும்

Bavan said...

அண்ணனுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடிச்சுடோய்..:P
அண்ணே பார்ட்டி எப்ப?

பதிவு நல்லாயிருக்கு, கலக்கல்..:D

கார்க்கி said...

:)))

தர்ஷன் said...

சுருக்கா கொடுத்தடலாம் பவன்

வருகைக்கு நன்றி சகா

யோ வொய்ஸ் (யோகா) said...

காதல் வந்தால்தான் இப்படியெல்லாம் டிவிட்டுவாங்கலாம், உண்மையா தர்ஷன்?

தர்ஷன் said...

May be yo I don't know about it

யாதவன் said...

அஹா வந்திருச்சு அனருக்கு காதல் இனி என்ன கொண்டடம்தான்

valan said...

kavidhai......kavidhai........

Post a Comment

Related Posts with Thumbnails