வெள்ளி, 10 ஏப்ரல், 2009

நானும் என் தேவதையும்


தன் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்தாய் கவிதை என்ற பெயரில் எழுதிய நான்கைந்து வரிகளுக்குள் அடக்கப்பட்ட சில அலங்காரமான வார்த்தைகள் அவ்வளவே

நித்திரையைக் குழப்பிச் செல்லும்
குருவிகளின் பேரிரைச்சல்
இன்று மட்டும் ஏன்
இத்தனை இனிமையாய்

திரை விலக்கி வானும்
கைகளை நீட்டியது
பேரிரைச்சலுடன்
உனக்கு வாழ்த்து சொல்ல

அகராதியில் உன் பெயரை
சேர்த்தால் என்ன
ஒளிவட்டமும் சிறகுகளும்
அற்ற தேவதை என

உன் ஊரில் பெண்கள்
அத்தனை அழகில்லையாம்
பாவம் உன்னோடு
ஒப்பிடப்பட்டதாலே
இந்த அவப்பெயர்

அழகுக்கும் அறிவுக்கும்
எப்போதும் எட்டாப்பொருத்தமாம்
சொன்னவனை திட்டவில்லை
பாவம் அவன் உன்னை
அறிந்திருக்க வில்லை

அதிகமானோர் காதலித்தனராம்
பேரழகியர் பெயர்
சொன்னார்கள் ஆனால்
அதிகமாய்
காதலிக்கப்பட்டவள் நீ
ஒருவனாலேனும்

பிரிவில்தான் அருமை
தெரியுமாம்
அதிகமாகவே உணர்கிறேன்
உன் அருமையை

அருமையிலும் அருமையானவளே
வாழ்த்துக்கள்
அடுத்த முறை காற்றிலேனும்
கலந்து விடுகிறேன்
என் காதல் கலந்த
வாழ்த்துக்களை

12 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நச்-ன்னு இருக்கு

தர்ஷன் சொன்னது…

நன்றி ஞானசேகரன்
வரவுக்கும் கருத்துக்கும்

செ.பொ. கோபிநாத் சொன்னது…

//அகராதியில் உன் பெயரை
சேர்த்தால் என்ன
ஒளிவட்டமும் சிறகுகளும்
அற்ற தேவதை என//

அருமையான வரிகள்...
http://spggobi.blogspot.com/

ஆ.சுதா சொன்னது…

கவிதை நல்லா இருக்கு,
சில வரிகள் இன்னும் யோசித்திருக்கலாம்

தர்ஷன் சொன்னது…

///செ.பொ. கோபிநாத் said...

//அகராதியில் உன் பெயரை
சேர்த்தால் என்ன
ஒளிவட்டமும் சிறகுகளும்
அற்ற தேவதை என//

அருமையான வரிகள்...
http://spggobi.blogspot.com////

நன்றி கோபிநாத்
வரவுக்கும் கருத்துக்கும் உங்கள் கடைப் பக்கம் வந்தேன் அருமையான கவிதைகள்

///ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நல்லா இருக்கு,
சில வரிகள் இன்னும் யோசித்திருக்கலாம்///
நன்றி சார்
வரவுக்கும் கருத்துக்கும்
இனி கொஞ்சம் நிறையவே யோசிக்க முயல்கிறேன்

தவ சஜிதரன் சொன்னது…

வாழ்த்துக்கள் தர்ஷன், நீ ஒரு நித்ய காதலன் என்பதை இங்கு வந்து போகும் வலையுலக வாசிகள் அநேகம் பேர் அறியாமலிருக்கலாம் ;) அதிகமும் புழக்கத்திலுள்ள சொல்லற்றொனியைக் கொண்டிருந்தாலும் ரசிக்கும்படியாய் இருக்கிறது உனது கவிதை.... தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்...

காதல் எப்போதும் கவிதைக்குகந்த பாடுபொருள்தான்.... அதையும் தாண்டிய பார்வைப் பரப்பெல்லைகளுக்குள்ளும் உனது கவிதையின் கரங்கள் நீளவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு...

நட்புடன்
சஜி

வேத்தியன் சொன்னது…

நல்லா இருக்கு...
வாழ்த்துகள்...

தர்ஷன் சொன்னது…

//தவ சஜிதரன் said...

வாழ்த்துக்கள் தர்ஷன், நீ ஒரு நித்ய காதலன் என்பதை இங்கு வந்து போகும் வலையுலக வாசிகள் அநேகம் பேர் அறியாமலிருக்கலாம் ;) அதிகமும் புழக்கத்திலுள்ள சொல்லற்றொனியைக் கொண்டிருந்தாலும் ரசிக்கும்படியாய் இருக்கிறது உனது கவிதை.... தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்...//

நன்றி சஜி,
இது சில வருடங்களுக்கு முன் எழுதியது. இப்போதெல்லாம் கவிதை தொடர்பிலான என் பார்வை மாறியிருக்கிறது. so எனது கவிதை எழுதும் ஆர்வத்தால் கிறுக்கித் தள்ளி வலையுலக நண்பர்களை guinea pigs ஆக மாற்றி சோதிக்க விரும்பவில்லை. இப்போதெல்லாம் நிறைய கவிதைகள் வாசிப்பது மட்டும்தான். எனக்கே திருப்தி ஏற்படும் விதத்தில் எழுதிய பின் பதிவிடலாம் என நினைக்கிறேன்.

தர்ஷன் சொன்னது…

//வேத்தியன் said...

நல்லா இருக்கு...
வாழ்த்துகள்...//


என்ன வேத்தியன் இப்படி மொட்டையா சொல்றீங்க
எது எது நல்லா இருக்குன்னு சொல்லணும் ஓகே
Anyway thankyou

kuma36 சொன்னது…

அட கொஞ்ச வலைப்பக்கம் வரல இவ்வளவு நடக்குதா? ம்ம்ம் ஆகட்டு ஆகட்டும்.!!!!

kuma36 சொன்னது…

///அருமையிலும் அருமையானவளே
வாழ்த்துக்கள்
அடுத்த முறை காற்றிலேனும்
கலந்து விடுகிறேன்
என் காதல் கலந்த
வாழ்த்துக்களை///

வாழ்த்துக்கள்

kuma36 சொன்னது…

///நித்திரையைக் குழப்பிச் செல்லும்
குருவிகளின் பேரிரைச்சல்
இன்று மட்டும் ஏன்
இத்தனை இனிமையாய்///

அழகான ஆரம்பம்!

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails