Monday, April 13, 2009

அயனுக்கு ஒரு ஞாயம் சிவாஜிக்கு ஒரு ஞாயமா?


கடந்து சென்ற பொங்கல் தினம், தியேட்டர் சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லாம் இப்படி பண்டிகை விடுமுறைகளில்தான் கிடைக்கும். உடனே காலையிலேயே குளித்து உடுத்து நண்பர்களோடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்று இறங்கினால் வாசல் வரை நீளமான வரிசை. டிக்கட் கிடைக்குமென்ற நம்பிக்கை அற்றுப் போனாலும் கூடியிருந்த ஜனத்தை பார்த்து நம்பி மெல்ல அலுவலகத்தை அணுகி விசாரித்தேன்.

"இந்த காட்சிக்கான டிக்கட் எல்லாம் தீர்ந்து அனைவரும் திடேருக்குள் அனுமதிக்கப் பட்டும் விட்டனர்" என புன்னகை மாறாமல் சொன்னார்.

"அடப் பாவிகளா அப்ப எதுக்குடா நிக்கறீங்க " என்ற எண்ணத்தோடு ஒருவரை அணுகி

" அண்ணே house full ஆம்" என்றேன்.

" தெரியும் தம்பி நாங்க நிக்கிறது அடுத்த காட்சிக்கு " என்றார்.

அத்தனை பொறுமையும் அவசியமும் இல்லாத காரணத்தால் நான் நண்பர்களோடு வீடு திரும்பினேன். பின் DVD யில் படம் பார்த்த போது கிரேட் எஸ்கேப் என நினைத்து கொண்டது தனிக் கதை ஆர்வமுள்ளவர்கள் பொங்கல் ரீலிஸ், தப்பித்த உணர்வு என்பவற்றை வைத்து என்னப் படம் எனக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

ஏலவே பெற்ற மேற்படி அனுபவத்தால் இன்று காலையிலேயே படம் பார்க்கப் போனால் ம்ம் அங்கு ஈ காக்காய் கூட இல்லை. படம் ஆரம்பித்த போது மொத்தமே ஒரு 40 பேர் அதிலும் அந்த corner seat ஜோடி படம் பார்க்க வந்ததா எனத் தெரியவில்லை.

அயன் ஏதேனும் விழுமியத்தைக் கற்றுத் தரும் படமோ, அல்லது மனித வாழ்வின் பல பக்கங்களை யதார்த்தம் மாறாது பதிவு செய்த படமோ, இல்லை ஏதேனும் நவீன முறையிலான இலக்கியம் சினிமாவில் பரீட்சிக்கப் பட்டப் படமோ அல்ல. மேற்படி விடயங்களை சிவஜியிலோ குசேலனிலோ தேடிப் பார்த்து நொந்து அதையிட்டு பதிவிட்ட நெஞ்சங்கள் இதையும் பார்க்காமலிருப்பது நலம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சரம் சரமாய் sorry ரீல் ரீலாய் பூ சுற்றுகிறார்கள். ஆனால் வாசனையுடன். இது வரை சொல்லப்படாத கதை இல்லை. ஆனால் சொல்லப் பட்ட விதம் சொல்லப்பட்ட களம் புதுசு.
என்னை கேட்டால் இன்றைய தமிழ் சினிமாவின் no 1 நடிகர் அஜித்தோ விஜயோ இல்லை சூர்யாதான். ஹரி,கௌதம், K.V.ஆனந்த் என முற்றாய் வேறுப்பட்ட இயக்குனர்களின் படங்களில் இவரால் தன்னைப் பொருத்திக் கொள்ள முடிகிறது.
தமன்னா நடிப்பே வரவில்லை பரவாயில்லை பார்த்துக் கொண்டாவது இருக்கலாம்.
பிரபு குறை சொல்ல முடியாத நடிப்பு.

K.V. ஆனந்த், சூர்யாவுக்குப் பிறகு படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் M.S. பிரபுதான் குறிப்பாக கொங்கோ காட்சிகள்.

அப்புறம் சின்ன வயதிற்குப் பிறகு சண்டைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தது இந்தப் படத்தில்தான் அதுவும் கொங்கோ chasing காட்சிகள் jackieயின் first strike ஐ ஞாபகப் படுத்தியது. stunt master பெயர் பார்க்கவில்லை தெரிந்தோர் சொல்லுங்கள்.

நிறையப் பேர் படம் catch me if you can போல் இருப்பதை சொன்னார்கள். எனக்கேதோ அப்படித் தெரியவில்லை. பொன்வன்ணனை tom hanks ஓடும் சூர்யாவை leanardo de caprio வுடனும் ஒப்பிட்டாலும் இதில் அதைப் போல் இருவருக்கிடையிலான ஆடு புலி ஆட்டம் அத்தனை சுவாரசியம் இல்லை. ஒன்று catch me if you can இல் போலவே துரத்துபவரும் துரத்தப் படுபவரும் இறுதியில் ஒன்று சேர்கிறார்கள்.

music வழமையான ஹாரிஸ் வந்த புதிதில் முனுமுனுப்பதும் பின் மறந்து போவதும் அவரது பாடல்களுக்கு உள்ள இயல்பு. A.R.R போல நீண்ட நாட்களுக்குப் பின் அட இது நல்லா இருக்கே என சிலாகிக்கக் கூடிய வகையில் அவர் இன்னும் பாடல்கள் தரவில்லை. இந்த படத்தில் முமுனுக்க வைத்தது கூட "விழி மூடி யோசித்தால்" தான்.

நண்பனொருவன் சொன்னான். " ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை இந்த வருஷம் ஏதாவது நல்லப்படம் வந்துச்சா அதான் படம் நல்லது போல இருக்கு பெரிய விசேடமில்லை".உண்மையாகவும் இருக்கலாம்.

அனைவரும் ரசிக்கும் விதமாய் படம் எடுக்கிறோம் என்று கூறும் மசாலா பட இயக்குனர்களுக்கு நீங்கள் எடுக்கும் மசாலாவை இப்படியும் எடுக்கலாமே பார்க்கலாம்.

அப்புறம் இந்தப்படம் பார்த்தப் போது பதிவுகள் தொடர்பில் தோன்றியது குருவி,வில்லு,ஏகன் எல்லாம் போலல்லாது கிட்டத்தட்ட இது போல என்னைக் கேட்டால் இதை விட better ஆகவே இருந்த படம்தான் சிவாஜி ஆனால் அந்தப் படத்தின் மேல் மட்டும் ஏன் இத்தனை காட்டம்.

7 comments:

செ.பொ. கோபிநாத் said...

உண்மையாகவே, நீங்கள் கூறுவது போல் சூர்யாவின் கதை தெரிவுகள் பாராட்டுதற்குரியது.. கொங்கோ சண்டைக் காட்சிகள் BOURNE ULTIMATUM திரைப்படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் வில்லன்களை விரட்டுவது போன்ற காட்சியை ஒத்ததாக இருக்கின்றது. அது போலவே இறுதியில் மலை மேலே வரும் சண்டைக் காட்சி APOCALYPTO திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் நகல் தழுவலாக இருக்கிறது.

வேத்தியன் said...

விமர்சனம் அருமை...
நானும் எழுதியிருக்கேன்...
முடிஞ்சா வந்து பார்க்கலாமே...

நான் ஒரு சூர்யா ரசிகன் எனும் விதத்திலேயே இந்தப் படத்தை பார்த்ததினால் எனக்கு குறைகள் பெரிதாக தெரியவில்லை...
நீங்க இங்கு சொன்னது சரிதான் போல...
நல்லா எழுதியிருக்கிறீங்க...

கிரி said...

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒரே மாதிரி விமர்சனம் செய்யாமல் சிறப்பையும் கூறி இருப்பது நன்றி.

பின் குறிப்பு

வலை தளத்தில் ரஜினியின் எந்த படத்திற்கும் அவ்வாறு தான் விமர்சனம் வரும் எனவே அதை பற்றி சீரியஸ் ஆக எடுத்து கொள்ள வேண்டாம். அது படத்திற்குண்டான விமர்சனம் அல்ல ரஜினி மீது உள்ள வெறுப்பில் எழுதுவது.

BTW நான் தீவிர ரஜினி ரசிகன். எனக்கு இரண்டு படமும் ரொம்ப பிடித்தது :-))

தர்ஷன் said...

//செ.பொ. கோபிநாத் said...

உண்மையாகவே, நீங்கள் கூறுவது போல் சூர்யாவின் கதை தெரிவுகள் பாராட்டுதற்குரியது.. கொங்கோ சண்டைக் காட்சிகள் BOURNE ULTIMATUM திரைப்படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் வில்லன்களை விரட்டுவது போன்ற காட்சியை ஒத்ததாக இருக்கின்றது. அது போலவே இறுதியில் மலை மேலே வரும் சண்டைக் காட்சி APOCALYPTO திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் நகல் தழுவலாக இருக்கிறது.//

நன்றி கோபி
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் சில தகவல்கள் வேறு தந்திருக்கிறீர்கள் தொடர்ந்தும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்


//வேத்தியன் said...

விமர்சனம் அருமை...
நானும் எழுதியிருக்கேன்...
முடிஞ்சா வந்து பார்க்கலாமே...//

அட உங்கடைய முதலிலேயே பார்த்திட்டேன் உங்கப் பதிவப் பார்த்தப் பின்புதான் நம்பிக்கையா படம் பார்க்கப் போனேன்.

//கிரி said...

வலை தளத்தில் ரஜினியின் எந்த படத்திற்கும் அவ்வாறு தான் விமர்சனம் வரும் எனவே அதை பற்றி சீரியஸ் ஆக எடுத்து கொள்ள வேண்டாம். அது படத்திற்குண்டான விமர்சனம் அல்ல ரஜினி மீது உள்ள வெறுப்பில் எழுதுவது.//

வாங்க கிரி நீங்க ரஜினி ரசிகர் என்று சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றில்லையே அதுதான் வலையுலகில் நீங்க ரொம்ப பிரபலம் ஆயிற்றே
படம் எனக்குப் பிடித்தது கிரி
சரி ரஜினி மீது வெறுப்பு என்பதில் எனக்கு உடன்பாடில்லை அனைவரும் ரகசியமாக ஏனும் ரஜினியை ரசிக்கிறார்கள். விமர்சனம் சும்மா கவன ஈர்ப்புக்கு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
anbuaran said...

சரி ரஜினி மீது வெறுப்பு என்பதில் எனக்கு உடன்பாடில்லை அனைவரும் ரகசியமாக ஏனும் ரஜினியை ரசிக்கிறார்கள். விமர்சனம் சும்மா கவன ஈர்ப்புக்கு
100% agreed with ur comments

Siruvan said...

உங்களுக்கு படம் பார்க்கத்தெரியாது என்பதை பதிவிட்டு ஒத்துக்கொண்டு இருக்குறீர்ப்பா....
சமீபகாலமாக படம் பார்த்து நொந்த என்னை ஆறுதல் படுத்திய படம் அது.. நான் ஒரு சூர்யா ரசிகனும் அல்ல..
அப்புறம் ஹரிஸ் பற்றி நீர் தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்.. அவரது பாடல்கள் ஆரம்பத்தில் நல்லா இல்லாவிட்டாலும் பின்பு தான் முனுமுனுக்க வைக்கும்........
உமக்கு இயலகூடிய பகுதிகளில் மட்டும் பதிவிடும் அது போதும்

Post a Comment

Related Posts with Thumbnails