Monday, October 19, 2009

A.R.R முதல் தமிழக M.P க்களின் வருகை வரை

ஏலவே எழுதியது சில பல பிரச்சினைகளால் தாமதமாக So matter பழசாய் இருக்கலாம் ஆனால் படித்து பின்னூட்டமிடுங்கள்தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம் என்றான் பாரதி யார் செய்தார்களோ என்னவோ ஏ.ஆர். ரஹ்மான் செய்திருக்கிறார். எவ்வித இந்திய தாக்கங்களும் கலப்புமில்லாது அவர் பணியாற்றும் முதல் Hollywood படமான Couples retreat வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தால் ஒரு Sex comedy போல தெரிகிறது. Hancock இல் கதாநாயகியின் கணவராக வருவாரே(பெயர் தெரியவில்லை) அவரும் Melrose place, Beverly Hills 90210 போன்ற சிரச மற்றும் ITN தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்த Kristin Davisஉம எனக்கு தெரிந்த முகங்கள்.
படத்தில் குறிப்பிட்டாக வேண்டிய அம்சம் படத்தின் sound track Albumத்தில் இடம்பெற்றுள்ள குறு குறு கண் என்ற குறும்பாடல எனக்கு பிடித்தது நீங்களும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள்.
பின் குறிப்பு:- இதனால் தமிழருக்கு என்ன ஆதாயம் இலங்கை பிரச்சினையில் ஏதேனும் தீர்வேற்படுமா, தமிழ் உலக அங்கீகாரம் பெறுமா, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினைகள் தீருமா என வாதம் புரிபவர்கள் கவனத்திற்கு.
ஒரு இசை கலைஞ்ன் ஏதோ ஆர்வத்தில் தான் பணியாற்றும் பிறமொழி படமொன்றில் தன தாய்மொழி பாடலொன்றை சேர்த்துள்ளார். கேட்டு ரசித்து விட்டு போவோமே.

தினமலருக்கும் நடிகர் சங்கத்துக்குமான பிரச்சினை சற்று பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது. விவேக், சத்யராஜ் போன்றோரின் பேச்சுகள் மிகுந்த அநாகரிகமாக இருந்தது உண்மை. சத்யராஜ் அவ்வாறு பேசுவது வழமை என்ற போதும் விவேக்கின் பேச்சு அநாகரிகத்தின் உச்சம் ஜனங்களின் கலைஞனிடம் நான் இதை எதிர் பார்க்கவேயில்லை.
ரஜினியின் பேச்சு ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதிலுருந்து குறித்த சில வார்த்தைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பல்வேறு அர்த்தம் தொனிக்கும் விதமாக ரஜினிக்கு சார்பாகவும் எதிராகவும் மீடியாக்களில் வியாபாரத்துக்காகவும் , வலைப்பதிவுகளில் ஹிட்சுக்காகவும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. அட்டையில் நடிகைகளின் படம், நடுப்பக்கம் கவர்ச்சி படங்கள், நட்சத்திரங்களின் exclusive பேட்டிகள், சினிமா விமர்சனம், கிசு கிசுக்கள் என மனிதனுள் இருக்கும் வக்கிரமான உணர்வுகளை மேலும் கிளர்த்தி அதன் மூலம் காசு பண்ணும் பத்திரிகைகள் விபச்சார செய்தி போட்டதும் தம் வியாபரத்துக்காகவே அன்றி சமூகப் பிரக்ஞையினால் அல்ல என்பது வெளிப்படை. எப்படியோ பத்திரிகைகள் இனிமேல் சினிமா செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாடு கொண்டு வர உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. தமிழரிடம் புரையோடிப்போயுள்ள தனி மனித பூஜனையையும், சினிமா நடிகைகளை தம் காம வடிகாலாக எண்ணுவதையும் ஊக்குவித்த பத்திரிகைகளின் இம்முடிவு மாற்றத்தைக் கொண்டு வருமா?
2009 ஆம் வருடத்துக்கான நோபெல் பரிசுகளில் இராசயனவியலுக்கான பரிசை பகிர்ந்த மூவருள் ஒருவர் தமிழர். ராமகிருஷ்ணன் அமெரிக்க வாழ் தமிழர். இங்கு Advanced level Bio science செய்தவர்கள் Ribosome பற்றி அறிந்திருப்போம். புரததொகுப்புக்கென கலங்களில் காணப்படும் மிக நுண்ணிய் அமைப்பு. ரைபோசோம்கள் கலத்தினுள் புரததொகுப்பு நிகழ்த்தும் செயன்முறை பற்றிய ஆய்வுக்காக இப்பரிசு. இவ்வாய்வு எதிர்காலத்தில் வினைத்திறனான புதிய வகை antibiotics இன் உருவாக்கத்திற்கு உதவும் என நம்பப்படுகிறது.
அடுத்தவர் ரட்சகர் Obama பாவம் அவரே அதிர்ந்து போய் தர்ம சங்கடமாய் பேசியிருக்கிறார் விட்டுவிடுவோம். ஒரு வேளை அந்த beer party க்காக கொடுத்திருப்பார்களோ. நண்பன் சொல்கிறான் தமக்குள் அடித்துக் கொண்டாலும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை தீர்க்க ஒன்று பட்டு பாடுபட்ட ஆசியாவின் அந்த மூன்று அணு சக்தி நாடுகளின் தலைவர்களுக்கும் பகிர்ந்தளித்து இருக்கலாமாம்.

இலங்கையின் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. எதிர்பார்த்தபடியே ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. போகிற போக்கை பார்த்தால் இனி இலங்கையில் ஒரு எதிர்க்கட்சி தலைதூக்கவே முடியாது எனத் தோன்றுகிறது.ஒருவன் சாகத் துடிக்கும் போது தன வேலையை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் இழவு வீட்டுக்கு வந்து மாலை சாத்துவதை போல இலங்கைக்கு சுற்றுபயணம் வந்திருக்கும் வீரத் தமிழச்சி கவிதாயினி கனிமொழி உள்ளிட்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கிறோம்.
ஆச்சரியம் குள்ளநரிக் கூட்டத்தில் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது.

6 comments:

LOSHAN said...

ஒருவன் சாகத் துடிக்கும் போது தன வேலையை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின் இழவு வீட்டுக்கு வந்து மாலை சாத்துவதை போல இலங்கைக்கு சுற்றுபயணம் வந்திருக்கும் வீரத் தமிழச்சி கவிதாயினி கனிமொழி உள்ளிட்ட இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கிறோம்.
ஆச்சரியம் குள்ளநரிக் கூட்டத்தில் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது.//

ம்ம்ம்ம் (பெரு மூச்சு)

தர்ஷன் said...

நன்றி லோஷன் அண்ணா
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

கனககோபி said...

//எனக்கு பிடித்தது நீங்களும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள். //

இணைப்புத் தரப்படவில்லையே...

என்றாலும் வாழ்த்துக்கள்...

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தவை தான்... ஆனூல் 80 வீதம் வருமெண்டு எதிர்பார்தவையாமே...???!!!

suresh said...

nandraaha eludhuhireergal..vaalthukkal...

தர்ஷன் said...

//கனககோபி said...

//எனக்கு பிடித்தது நீங்களும் இங்கே சென்று கேட்டுப் பாருங்கள். //

இணைப்புத் தரப்படவில்லையே...

என்றாலும் வாழ்த்துக்கள்...//

ஆமாம் கனககோபி
ம்ம் ஆமாம் ஏதோ ஞாபகத்தில் இணைப்பு கொடுக்க மறந்து விட்டேன்
இதோ இங்கே போய் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=Wb_OeIG9eWU&feature=related

தர்ஷன் said...

//suresh said...

nandraaha eludhuhireergal..vaalthukkal...//

நன்றி சுரேஷ் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

Post a Comment

Related Posts with Thumbnails