Sunday, February 21, 2010

யாழ்தேவி,கோவா,தமிழ்ப்படம் இன்னும்பிற

இந்த வாரத்திற்கான யாழ்தேவியின் நட்ச்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கும் எனக்கும் இவ்வங்கீகாரத்தை தர முன்வந்த யாழ்தேவி நிர்வாகத்திற்கு முதற்கண் நன்றிகள். நாளொன்றின் பெரும்பாலான நேரம் ஆணி பிடுங்குவதிலேயே கழிவதில் பதிவிட இப்போதெல்லாம் நேரம் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. அதுவும் இல்லாமல் இப்போதெல்லாம் ஏதேனும் எழுத அமர்ந்தால் ஒன்றும் தோன்றாமல் வெறுமையாக இருக்கின்றது. இருந்தாலும் ஏதோ எழுதி ஒப்பேற்றலாம் என்ற நம்பிக்கையோடு சவாலை சந்திக்கத் தயாராகி இருக்கின்றேன். கொஞ்சம் வந்து வாசித்து என்னை செப்பனிட உதவுவீர்கள் என நம்புகிறேன்.

கோவா, தமிழ்ப்படம் இரண்டும் பார்க்கக் கிடைத்தது. இரண்டுமே இலங்கையில் அருகாமையில் எத்திரையரங்கிலும் திரையிடப் படாமையால் டிவிடியில்தான் பார்த்தேன். அசல் இங்கே திரையிடப் பட்டிருப்பினும் ட்ரைலர் பார்த்த போது ஏலவே ரஜினியின் பில்லாவை ரீமேக் செய்த அஜித் மீண்டும் தான் நடித்த பில்லாவை ரீமேக் செய்திருப்பதாய் தோன்றியதால் தவிர்த்து விட்டேன்.

கோவா அத்தனை அருமையான படம் இல்லை என்ற போதிலும் நல்லதொரு டைம் பாஸ் படம். முதற் பாதிக் கிராமக் காட்சிகள் சுவாரசியம். பின்பாதி மகா இழுவை,அறுவை அதிலும் சிநேகா தேவையே இல்லாத Extra fitting . படத்தின் ஆச்சரியம் சம்பத். இன்னுமொரு பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவுக்குத் தயார் என நினைக்கிறேன். முன்னவர் போல அவ்வப்போது மிகையாய் நடிக்காமல் இருந்தால் சரி. அதிலும் இதுவரை தமிழ் சினிமா பேசத் துணியாத விடயத்தை தொட்டமைக்காகவும் அதை நாகரீகமாய் படமாக்கி இருந்ததற்காகவும் வெங்கட்ப்ரபுவுக்கு வாழ்த்துக்கள். நண்பர் ஒருவர் அவரும் வீட்டில்தான் பார்த்திருக்கிறார் ரொம்ப சங்கடமாய் போய்விட்டதாய் சொன்னார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் என்னுடைய Forrest gump பற்றிய பதிவைப் பார்த்து விட்து எனக்கு philadelphia தான் பிடிக்கும் என்று சொன்னவர் அவர். மாமியார் உடைச்சா மண்குடம் பழமொழிதான் ஞாபகம் வந்தது. ஆனாலும் சென்னை 28 இல் நாம் பார்த்த இயல்பான இளைஞர்கள் இங்கு இல்லை ரொம்பவும் செயற்கையாய் இருக்கிறது படத்தோடு ஒன்ற முடியவில்லை.

தமிழ்ப் படம் ம்ம் அருமை. ஆனால் இதனால் தமிழில் மசாலா படங்கள் குறைந்து விடுமெனத் தோன்றவில்லை. இன்னுமொன்று இப்படம் என்னை போன்ற சினிமாப் பைத்தியங்களுக்கு சரி அட இது அதைதானே சொல்றான் என ஒப்பிட்டு சிரிக்க. நிறைய சினிமா பார்க்காதவர்களோ அல்லது தமிழ் சினிமாவின் வழமையான க்ளிஷேக்களை உணர்ந்திராதவர்களோ படத்தை ரசிக்க முடியாது. படத்தில் தனித் தனியே ஒவ்வொருக் காட்சியும் மிகுந்த பரவசத்தைக் கொடுத்தாலும் முழுமையாக படம் ஒரு நிறைவைக் கொடுக்காத உணர்வு. சில வேலை எனக்கு மட்டுமாய் இருக்கலாம்.

அப்படியே அடுத்த தேர்தலும் வந்து விட்டது. புதுமுகங்கள் நிறையப் பேர் ஆளுங் கட்சி சார்பில் களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. அதில் பிரபலங்களும் அடக்கம் சனத் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திகா ஆகியோர் போட்டியிட தயாராகி உள்ள நிலையில் முரளிப் பற்றியும் பேசப்படுகிறது. ஆளுங் கூட்டணியில் போட்டியிட்டால் தமிழனும் போடமாட்டான் தமிழனாய் பிறந்த பாவத்திற்காய் சிங்களவனும் போடமாட்டான். வேண்டாமே முரளி எதற்கு வீணாக தோற்று பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை கிரிக்கெட் விளையாடுவோம். முடியாதக் காலத்தில் டொக்டர் அம்மாவின் ஊருக்கு போய் ஏதேனும் கிரிக்கெட் அகாடமி வைத்து பிழைத்துக் கொள்ளலாம்.

வேலைக்கு போகும் அவசரத்தில் இந்த அதிகாலையிலேயே பதிவிடுகிறேன். இனி மீண்டும் இரவு ஒன்பது மணியளவிலேயே இந்தப் பக்கம் வரமுடியும். வந்துப் பார்க்கும் போது பரவாயில்லை நமக்கும் பின்னூட்டம் வருது எனுமளவுக்கேனும் பின்னூட்டங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

11 comments:

Subankan said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்!

Karthick said...

Your advice to Murali is completely true.

முகிலன் said...

தமிழ்ப்படத்தில் நானும் ஒரு சினிமா பார்த்த நிறைவைப் பெறவில்லை. ஆனாலும் நல்ல ஸ்பூஃப். ஸ்கேரி மூவி சீரீஸ் போல நல்ல காமடி.

முரளி தேர்தலில் நிற்கப் போகிறாரா? :)

கன்கொன் || Kangon said...

நட்சத்திரப் பதிவராயனமைக்கு வாழ்த்துக்கள்...
வாரம் முழுதும் கலக்குங்கள்...

நான் தமிழ்படம் மட்டும் தான் பார்த்தேன்...
நன்றாய் இருந்தது எனக்கு.

அரசியலில் என்னவோ நடக்குது... பாப்பம்..... :)

கலையரசன் said...

யாழ்தேவியின் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள். பதிவுகளைத் தொடருங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

PPattian : புபட்டியன் said...

அய்யோ பாவம்தான் முரளி!..

தங்க முகுந்தன் said...

நட்சத்திரப் பதிவருக்கு எமது நல் வாழ்த்துக்கள்! புதிதாக இருக்கிறீர் - நான் முன்பு காணவேயில்லை!

Anonymous said...

why dont you write about 'malayaha youngsters',thir views about politics,life style,habbits,education level etc.?

தர்ஷன் said...

நன்றி சுபாங்கன்

நன்றி கார்த்திக்

நன்றி முகிலன் முரளி தேர்தலில் நிற்கப்போவதாய்த்தான் தகவல்

நன்றி கோபி

நன்றி கலையரசன்

நன்றி ப்புட்டியன்

நன்றி தங்க முகுந்தன் இந்த வாரம் அடிக்கடி காண்பீர்கள்

நன்றி அனானி எனக்கும் விருப்பம்தான் மலையகம் பற்றி எழுத ஆனால் நிறைய பேர் படிப்பதில்லையாதலால் தவிர்த்து விடுகிறேன். இருந்த போதிலும் ஆரம்பக் காலத்தில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதினேன். இந்த நட்ச்சத்திர வாரத்தில் நிச்சயம் செய்கிறேன்.

இலங்கன் said...

அண்ணா நட்சத்திரத்திற்கு வாழத்துக்கள்..

கலையரசன் said...

//நன்றி அனானி எனக்கும் விருப்பம்தான் மலையகம் பற்றி எழுத ஆனால் நிறைய பேர் படிப்பதில்லையாதலால் தவிர்த்து விடுகிறேன். இருந்த போதிலும் ஆரம்பக் காலத்தில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதினேன். இந்த நட்ச்சத்திர வாரத்தில் நிச்சயம் செய்கிறேன்.//

தர்ஷன், மலையகத்தை பற்றிய செய்திகள் வெளியே வருவதில்லை. நீங்களாவது எழுத வேண்டும். ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியம். வாசிப்பவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, பதிவிட வேண்டியது நமது கடமை. நான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் வரும் சில நாடுகள் சராசரி தமிழ் வாசகனுக்கு பரிச்சயமற்றவை.

Post a Comment

Related Posts with Thumbnails