சனி, 6 மார்ச், 2010

நித்தியை ஞாயப்படுத்தும் பதிவர்கள்

பல தெய்வ வழிபாடும் அபத்தமான புராண கதைகளும் மூடத்தனமான வழிபாட்டு முறைகளும் நிறைந்த ஒரு குறித்த சாராரின் மேலாதிக்கத்தை எவ்வித கேள்வியுமின்றி நிலைத்திருக்கச் செய்ய அயராது பாடுபடும் மார்க்கம் ஹிந்து மதம். ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் பிறப்பின் பெயரால் அதீத சலுகைகள் கிடைக்குமாறான ஒருதலைபட்சமானதும் ஏனையோரை மிகவும் துன்புறச் செய்வதும் உலகில் நடக்கும் அக்கிரமங்களை ஆண்டவனின் திருவிளையாடல் என்ற பெயரில் சகிக்கச் சொல்லும் ஒரு sadist மதம்.

எவ்வித விஞ்ஞான ஆதாரங்களும் அற்ற கட்டுக்கதைகளை நம்புவதைப் பற்றிய எவ்வித கூச்சமுமின்றிய ஒரு முட்டாள் கூட்டத்தை தன பக்தர்களாகக் கொண்டது. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் தோற்றம், அதன் கூர்ப்பு என்ற சகலதுக்கும் ஓரளவு அறிவியல் பூர்வமாக விளக்கம் கூறக்கூடியதாக உள்ள இன்றைய நிலையிலும் தீ மிதித்தல், பறவை காவடி என காட்டு மிராண்டித் தனங்களில் ஈடுபட பக்தரை ஊக்குவிக்கும் ஒரு பிற்போக்கான மதமாகும்.

வர்ணாசிரம தர்மத்தை முக்கிய கோட்பாடாக கொண்டு அதன் வழி இன்றும் சாதியக் கொடுமைகள் எல்லா இடங்களிலும் நடைபெற காரணமாக உள்ளது இந்து தர்மம்.

1930 களில் முதலாளியம் சரிவை சந்தித்த போது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தின் அமெரிக்காவிலும் மக்கள் பட்டினியில் இருந்த போது தாம் மிகையாய் உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை மண் தோண்டி புதைக்கும், கடலில் கொட்டவும் செய்தனர் முதலாளித்துவ நாடுகள். அதற்கு சற்றும் குறையாத விதத்தில் இன்று போர்களாலும், பஞ்சத்தாலும் மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவிக்கையில் கோயில் திருவிழாக்களிலும் காணிக்கையாகவும் பெருந்தொகைப் பணமும் ,நேரமும், மனித உழைப்பும் கொட்டப்படும் அவலம் நிறைந்த மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை வாழப் போதிப்பது இந்து மதம்.

இத்தனை அவலங்களும் தலை விரித்தாடும் ஒரு மார்க்கத்தில் மனிதனுக்கு எவ்வித நிம்மதியும் கிட்டாது என்பது வெளிப்படையானதால்தான் பெரியார் துவங்கி பல பகுத்தறிவாளர்கள் நம் சமூகத்துக்கு ஒவ்வாத இம்மார்க்கத்தை தூக்கியெறியும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஏன் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் நட்ட கல்லை சுற்றி வரும் அபத்தத்தை பற்றியும் பறைச்சி , பனத்தி என சாதி பார்க்கும் வழக்கத்தையும் கண்டித்தே இருந்தனர்.

இத்தனை அநியாயங்களும் அவலங்களும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த ஒரு சமயத்தில் நித்தியானந்தன்கள் தவிர்ந்த வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும். ஆக ஆச்சரியமில்லைதான் புலனடக்கம் பற்றி போதித்த ஒருவன் கதவை திறந்து வைத்துக் கொண்டு காம லீலையில் ஈடுபட்டது.

ஏன் அவனுக்கு உணர்ச்சி இல்லையா? அவன் பாவம் இல்லையா? என்ற கேள்விகளெல்லாம் சிலர் கேட்டிருந்தனர். காமம் என்பது இயற்கையின் நியதி. பெண்களை சுகிப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் அனைவருக்கும் இருக்கும் அது தவறுமில்லை. ஆனால் தன குடும்பத்திற்காக 35 வயது மட்டிலேனும் திருமணமே செய்யாமல் கழிப்பறையிலே கைமைதுனம் செய்தே காலம் கழிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு இருக்கும் புலனடக்கம் கூடவா இல்லாமற் போனது மற்றவனுக்கு புலனடக்கத்தை போதிக்கும், மிகையான காம உணர்ச்சியால் வெதும்பிக் கொண்டிருந்த ஒரு ஏழை எழுத்தாளனின் உணர்ச்சி பெருக்கை ஒரு தொடுகையால் அற்றுப் போகச் செய்த பரமஹம்சனுக்கு. ஆக இயற்கை உந்துதல் என்றெல்லாம் சாட்டு சொல்வது இந்த நாயின் செயலை பொறுத்தவரை பொருத்தமே அற்றது.

தன மதம் இப்படி வெட்ட வெளியில் கற்பழிக்கப் பட்டதை பார்த்த பின் இவன் எங்கள் மதத்தின் பிரதிநிதி அல்லன் என்ற கோஷம் அம்மதத்தின் காவலர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அப்படியானால் எது இந்து மதம்? அதன் தத்துவம், தாற்பரியங்கள் என்ன? எவனெல்லாம் போலி என்று விளக்கி முறைப்படுத்த வேண்டியதுதானே.

இன்னும் சில பேர் ஊடக தர்மம் பற்றி பேசுகிறார்கள். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடியவாறு இத ஒளிபரப்பியது தவறென்றாலும் அவ்வாறு செய்யாவிடில் இதையே கிராபிக் என்பவர்கள் நம்பியே இருக்க மாட்டனர். ஆனாலும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது தவறே. இருந்தாலும் இதோடு ஒப்பிடும் பொது நித்தி செய்தது ஒன்றுமே இல்லை என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

அடுத்து சில பேர் உங்களுக்கு எங்கேயடா போச்சு அறிவு? அவன் பிரமச்சாரி என்றானா? என எதிர் கேள்வி கேட்டு அவனை ஞாயப்படுத்துகின்றனர். அவன் மற்றவனுக்கு யோகமும், தியானமும் , பிராமச்சாரியமும் கற்பிக்கிறேன் என காசு பறிக்க கிளம்பாத வரையில் அவன் என்ன செய்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. தான் பிரமச்சாரி அல்ல என்று சொல்லாத இந்த சத்தியவான் " நான் இப்படித்தான் இருப்பேன் போங்கடா" என சொல்ல வேண்டியதுதானே ஏன் ஓடி ஒளிந்தான்.


இன்னுமொரு சாரார் செயற்பட்ட முறைதான் ரொம்பவும் அருவருக்கத் தக்கதாய் போய்விட்டது. அதாவது இவனை ஞாயப்படுத்துவதற்காய் தன தொன்னூறு வயதிலும் மூத்திர சட்டியை சுமந்துக் கொண்டு கொண்டு ஊருராய் சென்று பிரசாரம் செய்தவரை இழுத்திருக்கிறார்கள். அவர் அந்திமக் காலத்தில் செய்த பொருந்தாத் திருமணம் சரி என்றால் இதுவும் சரியாம். தன் கட்சியினரிடம் நம்பிக்கை அற்ற ஒரு நிலையில் பார்ப்பனிய இந்து மதத்தின் கொடுமைகளில் இருந்து தன் மக்களை மீட்கும் அரும்பணிக்கு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்தை மணியம்மையே உணர்த்தி அவரை கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே செய்த திருமணமே இது. இத்தனைக்கும் மணியம்மை அவரை அப்பா எனத்தான் அழைப்பார். வளர்ப்பு மகளுக்கு சொத்து சேர முடியாது என்ற நிலையில் வாரிசுரிமைக்காக இதை செய்தார் என்றும் சொல்வார்கள்.
நம்மூரில் சொல்வார்கள் "கந்தனுக்கு புத்தி கவட்டிக்குல்லன்னு " பாருங்கள் பெரியார் மணியம்மைக்கு என்ன சுகம் கொடுத்திருக்க முடியுமென புலம்புகிறார். இவருக்கு எது பிரதானமாய் பட்டிருகிறது பார்த்திர்களா? ஆன்மீகப்பணி புரியும் இந்து மதத் தலைவர்கள்ளான பிரேமானந்தா தொடங்கி நித்யானந்தா (பட்டியல் பெரிதென்பதால் பெயர் தனித் தனியே பெயர் போட முடியவில்லை) வரையிலானவர்களுக்கு வேண்டுமென்றால் செக்ஸ் பெரிதாய் இருக்கலாம். ஆனால் மக்கள் விடுதலை என்ற பெரும்பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியாருக்கும் மணியம்மைக்கு அந்த எண்ணமே வந்திருக்காது. என்ன செய்வது இவங்க சாமி பிள்ளையாரே இங்கே பிரமச்சாரி என படம் காட்டி விட்டு வடக்கில் ரெண்டு சின்ன வீடு வைத்திருக்கையில் நித்தியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைகள் களையப்பட வேண்டுமெனின் கொடியவர்களின் கூடாரமாய் போய் விட்ட சகல மடங்களும் அரச கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அவர்களது கணக்கு வழக்குகள் பரீட்சிக்கப் பட வேண்டும் . அவர்கள் ஆன்மீக வழி பெற்ற சித்திகள் என்ன மக்களுக்கு அதில் எதை வழங்குகிறார்கள் என்பவற்றில் ஒரு வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். ஜோதிடம், சாஸ்திரங்கள் என்பவற்றில் உள்ள விஞ்ஞான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அவை அவ்வாறான உண்மைகளை கொண்டிராவிடின் அவை மக்களை ஏமாற்றும் பிராடுத் தனங்களாகக் கருதி தடை செய்யப்பட வேண்டும். அப்புறம் இவ்வாறான ஏமாற்றுத் தனங்களில் ஈடுபட்டோரை கடுமையாய் தண்டிக்க வேண்டும். இவையெல்லாம் என் ஆசைகளான போதும் இவற்றின் நடைமுறை சாத்தியமின்மை தொடர்பில் அறிகிறேன். இவ்வளவு ஏன் நித்தியே இப்போது கோர்ட்டுக்கு கொண்டு போகப்பட்டால் விடுவிக்கப்படவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஒரே ஒரு ஆசை இவன் கோபம் கொண்ட பக்தர்களின் கும்பலுக்கிடையில் மாட்டிப்பட்டால் நினைத்தாலே இனிக்கிறது



15 கருத்துகள்:

இரும்புத்திரை சொன்னது…

தர்ஷன் நித்தியோ சுத்தியோ யாரும் அந்தாளை நியாயப் படுத்தவில்லை.நீங்க சொல்லுங்க ஏமாத்துனவை தூக்கில் போட்டால்,ஏமாந்தவனை மூன்று வருடம் ஜெயிலில் தள்ள வேண்டும்.இல்லை புதுசா ஏமாத்துறனை தேடி அலைவாங்க.அவன் பிம்பம் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்ய முடியாதவர்களுக்கு அவன் சாமி தான்.குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய பணம் குடுக்கிறார்களே பக்தர்கள் என்ற பெயரில் முதலில் அந்த பரதேசிகளை வெளுக்கணும்.

தேவன் மாயம் சொன்னது…

என்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைகள் களையப்பட வேண்டுமெனின் கொடியவர்களின் கூடாரமாய் போய் விட்ட சகல மடங்களும் அரச கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அவர்களது கணக்கு வழக்குகள் பரீட்சிக்கப் பட வேண்டும் . ///

மிகச்சரியாக சொன்னீர்கள்!!

PPattian சொன்னது…

பெரியார் மீது குறை சொல்வோரெல்லாம் அவர் இந்த தமிழ் சமூகத்துக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை வசதியாக மற்ந்து அவரின் சிறு குறைகள் மட்டுமே தெரியவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுவார்கள். குறையில்லாத மனிதன் இந்த உலகில் இல்லை. பெரியாரை குறை மட்டுமே சொல்பவர்கள் தூங்குவது போல நடிப்பது ஊருக்கே தெரியும் என்பது அவர்களுக்கே தெரியும்.

நித்தி இந்த சமூகத்துக்கு என்ன கிழித்திருக்கிறான்?

பெரியார் செய்தது ஊரறிய திருமணம் (விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் மோசடி கிடையாது)... நித்தி செய்தது?

எதை எதனுடன் பொருத்திப் பார்ப்பது என்று குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவர்கள்தான் இந்த கால "பெரிய" மனிதர்கள். அவர் எழுத்தில் வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உள்ளது. அவரை வழக்கம்போல் நிராகரிப்போம்.

ராஜ நடராஜன் சொன்னது…

தாடிக்கார தாத்தாவின் மறுமண விளக்கம்,இறுதி பாராவுக்கு எனது ஓட்டு.கூடவே நியாயப்படுத்துவதும் அவரவர் உரிமை.தர்க்கத்தின் வார்த்தைகள் சுகமாக இருந்தாலும் பிரித்தாய்ந்து உண்மை பகுத்தல் மட்டுமே நமது மூளைக்கான வேலை.நன்றி.

தர்ஷன் சொன்னது…

நன்றி அரவிந்த்,
ஏமாறுபவன் தண்டிக்கப்பட வேண்டியவனே சந்தேகம் இல்லை அதற்காக தமக்கு காலம் காலமாய் கற்பிக்கப்பட்ட விடயங்களை நம்பி மன நிம்மதிக்காக இவ்வாறானவர்களிடம் சென்று தம் பணம்,நேரம்,சக்தி என அனைத்தையும் விரயம் செய்யும் அப்பாவிகளின் நம்பிக்கையை சிதைப்பவனை என்ன செய்யலாம். நம்பிக்கை துரோகத்தை விட பெரிய தண்டனை இந்த அப்பாவிகளுக்கு தேவைதானா.

தர்ஷன் சொன்னது…

நன்றி தேவன் மாயம்

நன்றி ப்புட்டியன்
மணியம்மையின் உடற் தேவைகள் பற்றி கவலைப்பட்டவர் மொட்டையடித்து மூலையில் முடக்கப்படும் தம் குலப்பெண்களின் உடற்தாபங்கள் பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறாரோ தெரியாது.

நன்றி ராஜராஜன்
எதிரெதிர் கருத்துக்கள் மற்றுமல்ல அக்கருத்துக்கள் சார்ந்த தருக்கங்களும் அவசியம் எனவே நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

இந்து மதத்தில் மூட நம்பிக்கைகள் இல்லை அதை இந்து மதமும் போதிக்கவில்லை. அதை பின்பற்றுபவர்கள் கடைப்பிடிக்கும் மூடத்தனத்துக்கு மதம் பொறுப்பல்ல. ஓசோ வின் மறைந்திருக்கும் உண்மைகள் புத்தகம் படியுங்கள். இந்து மதம் எப்படி என்பது புரியும் . மதங்கள் அன்பையும் நம்பிக்கையையும் போதிக்கின்றன. எந்த கடவுளும் சாமியை பார்க்கச் சொல்லல. உங்க மேல நன்பிக்கையில்லாம சாமிய நம்பினா அதற்கு மதம் என்ன பண்ணும். நாத்திகம் பேசுற எல்லோரும் ஏன் இந்து மதம் பற்றி மட்டும் பேசுறிங்க. மற்ற மதம் பற்றி பேசினா அடிப்பாங்கள் என்று பயம் உங்களுக்கு . மனிதன் செய்த தவறுக்கு ஏன் மதத்தை இழிவு படுத்துகிறீர்கள். இந்து மதத்தைப் பற்றி முழுமையாக தெரியாமல் புறம் பேசக்கூடாது. பாரதியார் தமிழ் சிறந்த மொழி என்று தமிழை மட்டும் படித்து கூறவில்லை மற்ற மொழிகளும் படித்துத்தான் கூறினார். இந்து மதம் பற்றி படிக்காமல் முழுவதுமாக அறியாமல் யாரும் கூறின கதைகளைக் கேட்டு தவறாக பேசாதீர்கள் . ஆனந்த விகடனின் சுகி சிவம் எழுதிய மனசே நீ ஒரு மந்திரச்சாவி புத்தகம் படியுங்க. உங்க எழுத்து ஆர்வத்துக்காக இந்து மதம் பற்றி தவறாக எழுதாதீர்கள்.சாதிகளும் சச்சரவுகளும் உங்களால ஏற்படுத்தப்பட்டது. காவடி என்பது ஆரம்பத்தில் முருகனுக்கு பூசைப்பொருட்களை மலை மீது கொண்டு போவதற்காக ஒரு தடியில் இரண்டு பக்கமும் பொருட்களை கட்டி காவி செல்லபட்டது. அதை நீங்கள் உங்கள் சாகச கூடாரமாக மாற்றி விட்டு இறைவனுடன் ஏன்மோதுகிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

இதுவரைக்கும் நித்தியை வெறுத்தேன் ஆனால் இந்த இடுகையைப் பார்த்தபின் சராசரி மனிதனைப் போல தானே நித்தி நடந்துள்ளார் என எண்ணத்தோன்றுகிறது
உங்களைப் போன்றவர்கள் தான் ஒரு சரசாரி மனிதனை பெரிய ஆளாக பார்த்து எமந்துபோய்யுள்ளனர்.
ஏமாளிகள் அல்லது பொறாமை பிடித்தவர்கள்தான் அவரை எதிர்த்து பதிவு எழுத வேண்டும்
இந்த இடுகையின் நோக்கம் உங்கள் பொறாமையா?

கன்கொன் || Kangon சொன்னது…

பெரியாரைக் குறை சொல்ல இங்கு யாருக்கும் தகுதி இல்லை...
அவர் செய்த சேவைகளை மறப்பவர்கள் வேண்டுமானால் குரைத்துவிட்டுப் போகட்டும்.
இத்தனைக்கும் பெரியார் இரகசியத் திருமணம் செய்யவில்லை...
என்ன செய்ய...


நித்தியை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை என்றாலும், மாட்டேன் என்றாலும்,
நக்கீரன் செய்ததையும், சன் செய்ததையும் நியாயப்படுத்த முடியாதே?
மணிக்கொருமுறை அதை சன் ஒளிபரப்பியதாக சொல்கிறார்கள்.
அது சற்று அதிகம் தானே?
ஆனால் செய்திகளில் அதை ஒளிபரப்பியது சரி என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.

அடுத்தது நக்கீரன் செய்தது நீலப்பட வியாபாரம் தானே?
முழுப் படமும் வேண்டுமானால் பணம் கட்டு தருகிறேன் என்பது நீலப்பட வியாபாரம் தானே...

நித்தியானந்தரை வைத்து வியாபாரம் செய்வது தான் பிழை...

மற்றம்படி நித்தியானந்தர் என்ற கள்ளனை நியாயப்படுத்த முடியாது.


//Anonymous said...
இதுவரைக்கும் நித்தியை வெறுத்தேன் ஆனால் இந்த இடுகையைப் பார்த்தபின் சராசரி மனிதனைப் போல தானே நித்தி நடந்துள்ளார் என எண்ணத்தோன்றுகிறது
உங்களைப் போன்றவர்கள் தான் ஒரு சரசாரி மனிதனை பெரிய ஆளாக பார்த்து எமந்துபோய்யுள்ளனர்.
ஏமாளிகள் அல்லது பொறாமை பிடித்தவர்கள்தான் அவரை எதிர்த்து பதிவு எழுத வேண்டும்
இந்த இடுகையின் நோக்கம் உங்கள் பொறாமையா?//

ஹா ஹா...
அதைத் தான் நாங்களும் சொல்கிறோம்.
அவன் சராசரி மனிதன் தான். சராசரி மனிதன் ஏன் காவி உடை அணிந்தான், ஏன் மக்களிடம் பணம் வாங்கினான்?
எதற்கு மற்றவனுக்கு தான் அவதாரம் பணியாரம் என்று ஏமாற்று வார்த்தை கதைத்தான்?
எதற்கு தன்னை மனிதர்களிடமிருந்து வேறுபடுத்த முயன்றான்?


நல்ல பதிவு தர்ஷன் அண்ணா...

கன்கொன் || Kangon சொன்னது…

http://www.egait.com/clients_demo/thinakkural/west/07_03_2010/images_full/07_03_2010_032.jpg

தினக்குரலில் உங்கள் ஆக்கம், அறிமுகம் வந்திருக்கிறது....

வாழ்த்துக்கள்....

தர்ஷன் சொன்னது…

//அடுத்தது நக்கீரன் செய்தது நீலப்பட வியாபாரம் தானே?
முழுப் படமும் வேண்டுமானால் பணம் கட்டு தருகிறேன் என்பது நீலப்பட வியாபாரம் தானே...//

நிச்சயமாக நக்கீரனில் எனக்கு எப்போதும் நல்லபிப்பிராயம் கிடையாது
அவர்கள் மோசமான ஊடக வியாபாரிகள் அவர்களின் வியாபாராத்திற்கு ஏதேனும் ஒன்று கிடைத்துக் கொண்டேயிருக்கும். முன்பு வீரப்பன் இப்போ நித்தியானந்தன். எதுவும் இல்லையென்றால் நடிகைகளைப் பற்றிய கிசு கிசுக்கள் தலைவரின் மரணத்தை வியாபாரமாக்கிய போதே இவர்களின் யோக்கியதை தெரிந்து விட்டது.

//தினக்குரலில் உங்கள் ஆக்கம், அறிமுகம் வந்திருக்கிறது....

வாழ்த்துக்கள்....//

நன்றி கோபி அறியத் தந்தமைக்கு உங்கள் மூலமே அறிந்துக் கொண்டேன்.

வினவு சொன்னது…

தர்ஷன்,

நித்தியா எனும் பொறுக்கியை காறி உமிழவேண்டிய நேரத்தில் அதை திசை திருப்பும் வண்ணம் நியாயப்படுத்தும் மேதாவித்தனமான, அயோக்கியத்தனமாக கருத்துக்களை சரியாகவே அடையாளம் காட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

தங்க முகுந்தன் சொன்னது…

இன்றைய தினக்குரலில் இந்த வார நட்சத்திரமாக மிளிர்வதற்கு எமது வாழ்த்துக்கள்!

செல்வராஜா மதுரகன் சொன்னது…

தர்சன் நித்தியைப் பற்றிய கருத்துக்கு நான் எவ்வளவு தூரம் ஒத்துக்கொள்கிறேனோ அவ்வளவு தூரம் இந்து சமயத்தைப்பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்க்கிறேன். பார்ப்பனியம் என்பது இந்து சமையத்தின் அடிநாதம் அல்ல இடைச்சொருகல் மட்டுமே. அதை நாங்கள் தானே களைந்து எரிய வேண்டும். மற்றபடி இந்து சமையத்தின் அடி நாதம் வருணாச்சிரம தர்மத்தினை மற்றும் நீங்கள் குறிப்பிட்ட எதையுமே அங்கீகரிப்பது அல்ல. சொல்லப் போனால் மற்றைய மதத்தினரையும் மதிக்கும் உன்னத மதம் அது, எனக்குத் தெரிந்த வரையில். இது எனது கருத்து மட்டுமல்ல மாதங்கள் தொடர்பான 2 வருட தேடலுக்கு கிடைத்த பரிசு அல்லது அறிவு. அடுத்தது நித்தியானந்தம் வகையறா ஆட்களின் பெருக்கத்திற்கு காரணம் இந்து சமயத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற சுதந்திரம்தான். அடுத்து தினக்குரல் பார்த்தேன் வாழ்த்துக்கள்.

ஷஹி சொன்னது…

இந்த பதிவுக்கு என்னுடைய பதில்...
"திருப்பதியில் பெருமாளுக்கு
கோடிகளில் கிரீடம்,
தெருக்கோடியில்...
பிச்சை பெருமாளுக்கு,
சண்டை,
சோற்றுக்கு,
நாயிடம்" என்னும் என் கவிதையே...
தைரியமாக எழுதுகிறீர்கள் தர்ஷன்...வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails