வெள்ளி, 28 மே, 2010

சிங்கம் - என் பார்வையில்

சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யத்தை ஒழிக்கும் உயரிய பணியில் ஈடுப்பட்டுள்ள இளையதளபதியோடு தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் சூர்யா. சூர்யாவின் இருபத்தைந்தாவது படமாம். அதனாலோ என்னவோ போலீஸ் ஜீப்பின் கூரையைப் பிய்த்துக் கொண்டு அட்டகாசமாக அறிமுகமாகிறார் சூர்யா. முகத்தில் கோபம் கொப்பளிக்க பாய்ந்து பாய்ந்தே வில்லன்களை துவம்சம் செய்கிறார். எஞ்சிய நேரத்தில் பக்கம் பக்கமாய் ஆவேசமாய் வசனம் பேசுகிறார். அவ்வப்போது உயரப் பிரச்சினைக் காரணமாக தள்ளி நின்றே அனுஷ்காவிடம் காதல் செய்கிறார். காக்கக் காக்க போல் ரொம்ப இயல்பாகவோ அல்லது வாரணம் ஆயிரம்,கஜினி போல் சற்று உழைப்பைக் கொட்டி செய்ய வேண்டிய நடிப்போ படத்துக்கு அவசியப்படவில்லை ஆகவே இவரும் முயலவில்லை.

படத்தின் கதை அது ஹரியின் சாமி படத்திற்கு ஒன்று விட்ட அண்ணன் முறையாக இருக்கிறது.
நல்லூர் எனும் சிறியக் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆகா கடமையாற்றுகிறார் துரைசிங்கம். ஊரில் உள்ள எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. ஊரவர்கள் எல்லாம் அவருக்கு உறவினர்கள். சென்னையில் கட்டப் பஞ்சாயத்து,கடத்தல்,மாமுல் எனக் கோலோச்சிக் கொண்டிருக்கும் தாதா பிரகாஷ்ராஜ் கண்டிஷன் பெயில் கையெழுத்து இட நல்லூர் வரவேண்டியவர் தெரியாத்தனமாக தன கையாள்களை அனுப்பி வைக்கிறார். நம்ம சூர்யாவும் சும்மா இருக்காமல் அவரையே அழைத்து வரச் செய்து கையெழுத்து போடச் செய்கிறார். சூர்யாவின் சொந்த ஊரில் தன் ஆட்டம் பலிக்காது என உணர்ந்த பிரகாஷ்ராஜ் அவரை பதவி உயர்வுடன் சென்னைக்கு மாற்றல் பெறச் செய்கிறார். சென்னை வந்த சூர்யாவுக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் ஏற்கனவே தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது தடவை பார்த்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதால் அதை சொல்லாமலே விட்டு விடுகிறேன்.

படத்தில் பெரிய ஆறுதல் அனுஷ்கா. சூர்யாவுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை என்ற போதும் பெரிய திரையில் அவரைப் பார்த்தது மட்டுமே கொடுத்த காசுக்கு நிறைவைத் தந்தது எனலாம். இலவச இணைப்பாக அவரது தங்கை அந்த பிகரும் நல்லாவே இருந்தது. சீரியல் பார்க்கும் பழக்கமற்ற எனக்கு அப்பெண் கனா காணும் காலங்களில் நடித்தவர் என அறியத் தந்து பொது அறிவை வளர்த்த நண்பருக்கு நன்றி.


விவேக் ம்ம் சிரிக்க வைக்க ரொம்பவே சிரமப்படுகிறார். அவருக்கு ஏன் ஜனங்களின் கலைஞன் எனப் பட்டம் கொடுத்தனர் என இன்றுதான் புரிந்தது. அவர் வரும் காட்சிகளில் மறக்காமல் இரட்டை அர்த்தப் பட வசனம் பேசுகிறார். தியேட்டரில் ஜனங்களும் விசிலடித்து கை தட்டினர்.

மற்றும்படி வழக்கமான ஹரி படம். படத்தை பற்றி பெரிதாக சொல்ல ஏதும் இல்லை. சில படங்கள் பிடித்து பதிவு எழுதுவோம். சில முதல் நாள் பார்த்திருக்கிறோமே என ஹிட்ஸ் கிடைக்க எழுதுவோம். இது இரண்டாவது வகை.

பின்குறிப்பு :- கூட வந்தவர்கள் சுறாவுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள். அந்த படத்தை பார்க்க வில்லையாதலால் என்னால் ஒப்பிட்டுக் கருத்து சொல்ல முடியவில்லை.

10 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

மொத்தத்தில் படம் நல்ல...இ...லை

Ilayathalapathy Vijay சொன்னது…

ithuvae en Padamaa irunthirunthaa innaeram SMS paranthirukkum... Enakku Mattum yaen intha Ora vanjanai... :(

SShathiesh-சதீஷ். சொன்னது…

எதிர்பார்த்த ஒன்று. தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கும் ஒரு வருத்தம் இது. சூர்யா என்னும் நடிகன் செத்து விட்டன். இப்போ அவர் ஹீரோ.

selvam சொன்னது…

super

வால்பையன் சொன்னது…

அதுகுள்ள பார்த்தாச்சா!?

எம் அப்துல் காதர் சொன்னது…

இந்த படத்தில் தமன்னா இல்லையா, நான் பார்க்க மாட்டேன்!

தர்ஷன் சொன்னது…

அப்படி சொல்ல முடியாது சௌந்தர் டைம் பாசா பார்க்கலாம்.

ம்ம் இல்லை சதீஷ் அவரால் மீள முடியும் விஜய் போல எல்லாம் இல்லை.

இங்க இன்று விடுமுறை நாள் வால்

thanks selvam

அப்துல் காதர் அனுஷ்காவும் ஓகே ரகம்தான் பாருங்கள்

ஒலக காமிக்ஸ் ரசிகன் சொன்னது…

நண்பரே,

இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
சிங்கம் - ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

கன்கொன் || Kangon சொன்னது…

ஹி ஹி....
படம் பார்ப்பதில்லை என்று எப்போதே முடிவெடுத்தாச்சு.... ;)


// Ilayathalapathy Vijay said...

ithuvae en Padamaa irunthirunthaa innaeram SMS paranthirukkum... Enakku Mattum yaen intha Ora vanjanai... :( //

தளபதி சொல்லுறதும் சரியாத்தான் கிடக்குது...
ஹி ஹி...

தர்ஷன் சொன்னது…

வாங்க கோபி
ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க படம் பொழுது போக்கா பார்க்கலாம் கோபி விஜய் படம் அளவு மோசமில்லை

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails