ஞாயிறு, 25 ஜூலை, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 5


தேவதைகள்
இமைப்பதில்லைதான்
அதற்காக
விருப்பம் கேட்டாலும்
சரி என கண்சிமிட்டாமல்
இல்லை
எனத் தலையையா
ஆட்டுவது

உன் அப்பாவும் கவிதை
எழுதியிருக்கிறாராமே
தரச் சொல்
படித்துவிட்டு நானே
வைத்துக் கொள்கிறேன்

கோயிலைக் கடக்கும்
பக்தனைப் போல்
அனிச்சையாகவே
எழுந்துக் கொள்கிறேன்
பேருந்து
உன் வீட்டைக்
கடக்கும் போது

8 கருத்துகள்:

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

நல்லா அனத்தியிருக்கீங்க தர்ஷன்

maruthamooran சொன்னது…

தர்ஷன் நல்லாயிருக்கு!

////கோயிலைக் கடக்கும்
பக்தனைப் போல்
அனிச்சையாகவே
எழுந்துக் கொள்கிறேன்
பேருந்து
உன் வீட்டைக்
கடக்கும் போது////

உண்மையச் சொன்னால் இது மாதிரி எங்கேயோ படித்த மாதிரியும் இருக்கிறது. யாருடைய தாக்கத்தினையாவது உள்வாங்கினீர்களோ தெரியாது.

ஆனால், நேரக்கட்டுப்பாட்டுடன் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.

Prasanna சொன்னது…

இரண்டாவது கற்பனை மிக அருமை :)

தர்ஷன் சொன்னது…

நன்றி யோ

நன்றி சுபாங்கன்

நன்றி மருதமூரான்
இருக்கலாம் காதல் அனுபவங்களும் அது சார்ந்த புலம்பல்களும் ஒரே மாதிரியனவைதானே

நன்றி பிரசன்னா

வால்பையன் சொன்னது…

நல்லா அனத்துறிங்க!

Jana சொன்னது…

அருமையான கவிநடை.

//உன் அப்பாவும் கவிதை
எழுதியிருக்கிறாராமே
தரச் சொல்
படித்துவிட்டு நானே
வைத்துக் கொள்கிறேன்//

கண்டிப்பாக அவள் அப்பா அந்தக்கவிதைகள் எல்லாம் அவளின் தாயாருக்குத்தான் எழுதியிருப்பார் என்கின்றீர்களா?

தர்ஷன் சொன்னது…

நன்றி வால்

நன்றி ஜனா
நான் சொல்வது அவள் அப்பா அவளது அம்மா உதவியுடன் எழுதிய கவிதையை,
அனுமதியோடு வாங்கி ஆறுதலாய் படித்து நானே வைத்துக் கொள்ள

Unknown சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails