வியாழன், 13 ஜனவரி, 2011

பெருமழைக்காலம்


கிட்டத் தட்ட 20 வருடங்களில்  இல்லாத அளவு அடிக்கும் குளிரில் முழு நாடுமே உறைந்து போயுள்ளது. கொழும்பே 20 பாகை செல்சியசிலும் குறைவான வெப்பநிலையை எட்டி நுவரலிய போல குளிர்கையில் நுவர எளிய என்னவாகி இருக்கும் என ஊகிக்கலாம். இங்கே மாத்தளையில் நானெல்லாம் விறைத்திருக்கும் விரல்களை  கொண்டு ரோபோ போல இந்த பதிவை டைப் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இந்தக் குளிர் பெப்ரவரி வரை தொடரும் என்பதால் அதற்கேற்ற ஆயத்தங்களை செய்வது நல்லது.   

ஊரில் சில பெருசுகள் கலிகாலம் என்று அலுத்துக் கொண்டதோடு எல்லாமே அழிவுக்குத்தான் என்றும் 2012 இல் எல்லாம் முடிந்தது என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்ஆனால் வழமையான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையே இவ்வாறு பெய்வதாக வளிமண்டலவியற் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் சிலர்  இது ஏதோ லா நினோ என்கிறார்கள். தென் பசிபிக் சமுத்திரத்தின் வெப்பநிலை 3 பாகை செல்சியசிலும்  குறைவதால் ஏற்படும் நிலைமை. லா நினோ என்றால் ஸ்பானிஷ் மன்னிக்கவும்  எஸ்பஞோல்  மொழியில் குட்டிப் பெண் என்று அர்த்தமாம் பெண் என்றாலே பிரச்சினைத்தான் போல இருக்கிறது

நாலு  ஐந்து நாட்களாக காட்டு காட்டென்று காட்டிய மழையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும், 21  பேர் உயிரையே இழந்தும் இருப்பதோடு கிட்டத்தட்ட 1 மில்லியனை அண்மித்தவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று பாதிக்கப்பட்டோருக்கு இந்நேரத்தில் அவசியப்படும் உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள் போன்றவற்றை உங்களுக்கு இயன்றளவில் வாங்கி இம்மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருப்போரிடம் சேர்த்து விடுங்கள். இதுவே நம்மிடம் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் மனிதத்துக்கு சான்றாய் அமையும். அப்புறம்  தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான .தே. கூ வினர் இதற்கும் தமிழீழத்தை எதிர்ப்பார்த்தது போல இந்தியாவை எதிர்பார்த்திருப்பதாக அறிந்தேன்.


10 கருத்துகள்:

Jana சொன்னது…

ம்ம்ம்... இந்த நடாளாவிய திடீர் வழமைக்கு மாறான
காலநிலை நிறைய யோசிக்கவைக்கின்றது.
இது பற்றிய ஒரு தேடலில் இந்த காலநிலைக்கு வடதுருவ உருகலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகின்றது.
அதாவது உலக சமுத்திர நீரோட்டங்கள் ஒன்று குளிர்ந்த நீரோட்டம், அதேபோல அதற்கு சமனான வெப்ப நீரோட்டங்கள் என இரண்டு வகைப்பட்டனவாம். வடதுருவ பனி உருகல்களால் நீரோட்டங்களில், குளிர்நிலை நீரோட்டங்களின் செறிவு அதிகரிப்பதனால் இந்த நிலை தோன்றும் என அதில் குறிப்பட்டுள்ளார்கள்.
எது எப்படியோ... இவை அனைத்திற்கும் காரணம் மனிதனின் தான்தோன்றித்தனமான இயற்கையை மீறும் செலாலேயே எனவும் அதில் கூறப்பட்டள்ளது கொஞ்சம் சிந்திக்கவைக்கின்றது.

தர்ஷன் சொன்னது…

@Jana
ம்ம் நிச்சயமாக மனிதனின் இயற்கையை மீறி செல்லும் உந்துதலே இந்நிலைமைக்கு காரணம் எனலாம்.
நீங்கள் சொல்கிற விடயம்தான் அண்ணா லா நினோ என்பது வெப்ப நீரோட்டங்கள் எல் நினோ எனவும் குளிர் நீரோட்டங்கள் லா நினோ எனவும் அழைக்கப்படும். தென் பசிபிக் சமுத்திர மேற்பரப்பின் குளிர் நீரோட்டம் காரணமாகவே இந்த வழமைக்கு மாறான வெள்ளம் என அறிகிறேன். ஆனால் வளிமண்டலவியற் திணைக்களம் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை. குளிருக்கு இமாலயப் பகுதிகளில் இருந்து இங்கே தள்ளப்படும் குளிர் மேகங்கள் காரணம் எனவும் படித்தேன் உண்மையா தெரியவில்லை.

Unknown சொன்னது…

இங்கே கொழும்பில் இன்று 18 பாகை செல்சியஸ்! சாதாரணமாக அலுவலகங்களில் வைக்கப்படும் ஏ.சி.யின் வெப்பநிலை! ஊரே ஏ.சி. போட்டமாதிரி இருக்கு! இதே தாங்க முடியல....எப்பிடி பாஸ் உங்களால...!

தர்ஷன் சொன்னது…

@ஜீ
இந்தக் குளிர்ல எப்படியா? கொஞ்சம் நம்ம குளிர் கால ட்வீட் எல்லாம் படித்தா இப்படி கேட்க மாட்டீங்க! அப்படியே கொஞ்சம் சைடுல சூடு கண்ணா

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

its damn cold @ kandy and nuwara eliya...

pichaikaaran சொன்னது…

ரசிக்கத்தக்கது குளிரா வெயிலா ?

தர்ஷன் சொன்னது…

@பார்வையாளன்
நேரத்தை பொறுத்து ரெண்டுமே

@யோ
மாத்தளையிலும்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

கனடாவில் 40cm க்கு மேல் snow கொட்டியுள்ளது..145cm மேல் கொட்டுமாம்..அப்போ இங்கு குளிர் எப்படி இருக்கும்??? அப்பப்பா.. கொடுமை வாழ்க்கை... உங்கள் கஸ்ரத்தை உணரமுடிகின்றது...

தர்ஷன் சொன்னது…

@தோழி பிரஷா
ம்ம் புரிகிறது
என்ன செய்ய நமக்கு இத்தனை குளிர் பழக்கம் இல்லை இல்லையா ?

ம.தி.சுதா சொன்னது…

நம்மளுக்கு குளிரே ஆகாது எப்படித் தாங்கிறிங்களோ தெரியல...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails