Monday, March 30, 2009

அண்டப் புளுகன் கோயபல்ஸ்


அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதையெல்லாம் தாண்டி வரையறையின்றி புளுகி ஈற்றில் அழிந்துப் போனவர்தான் கோயபல்ஸ். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கூற்றின் நிதர்சனமாக வாழ்ந்தவர்.

பாசிசம் என்பது முதலாளித்துவ சர்வாதிகாரம் கம்யூனிசம் என்பது சோஷலிச சர்வாதிகாரம் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இதில் ஹிட்லரின் நாஜிசம் எதில் வருகிறது தெரியவில்லை அவர் கட்சியின் பெயரில் சோஷலிசம் (National Socialist German Worker's Party) வருகிறது. ஆனால் அது உண்மையில் சோஷலிச கொள்கைகளைக் கொண்டதுதானா என யாரேனும் தெளிவுப் படுத்துங்கள்.

என்ன இசமோ என்ன இழவோ எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும் நிஜம் நாஜிக்கள் பக்கா இனவாதிகள். ஜெர்மானியரே சுத்தமான ஆரியர் எனக் கூறிக் கொண்டு சரித்திரக் காலந் தொட்டு அலையோ அலையை அலைந்து கஷ்ட்டப் பட்ட யூதர்களுக்கு இவர்கள் கொடுத்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை.(இன்றைக்கு இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தனிக் கதை)

1921 இல் நாசிக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற ஹிட்லர் ஜெர்மானியரின் கஷ்டமெல்லாம் யூதர்களால்தான் என்றுக் கூறிக் கொண்டு பாரிய இன அழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தப் போது மீள மீள பொய்யுரைக்கும் மேற்கூறிய உத்தியால் ஹிட்லர் செய்ததற்கெல்லாம் சப்பைக் கட்டுக் கட்டியவர்தான் கோயபல்ஸ்.ஜெர்மனியின் பிரச்சார அமைச்சர் (கொ.ப.செ என்று சொல்லலாமா)

தாம் வாழும் இடமெல்லாம் அடிப் பட்டு அலைந்து திரிந்த யூதர்கள் ஜெர்மனியில் அடிபடும் போது அது அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற ரீதியில் வல்லரசுகளும் அமைதியாகத்தான் இருந்தன வேடிக்கைப் பார்த்துக் கொண்டு.
கோயபல்ஸ் மக்கள் மத்தியில் தன் பிரச்சாரப் பலத்தால் விதைத்த அகன்ற ஜேர்மனியை நிர்மாணிக்கும் கனவை ஹிட்லர் நனவாக்க முற்பட்டபோதுதான் விபரீதம் புரிந்து வல்லரசுகளும் முழித்துக் கொண்டன தமது இருப்புக்கு ஆபத்து வரப்போவதால்.

இறுதியில் அமெரிக்க,பிரித்தானிய,ரசிய தலைமையிலான நேச நாட்டுப் படையினருடனான போரில் ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றியும் பின் படுதோல்வியும் அடைந்து சின்னாபின்னமானது நாஜிக்களின் கனவு. தோல்வியின் விளிம்பில் நின்ற போது கூட இதோ மாஸ்கோவில் நுழைந்து விட்டோம் பிடித்து விடுவோம் என்று சின்னப் பிள்ளைத் தனமாய் சொல்லிக் கொண்டிருந்தானாம் கோயபல்ஸ்.

கொயபல்சிடமும் ஒரு நல்ல குணம் மரணத் தருவாயிலும் தன் தலைவன் மீதிருந்த விசுவாசத்தினை அவன் கை விடவில்லை. தளபதி சூர்யா தேவா போல் அப்படி ஒரு நட்பு.


இந்த பதிவை எழுதி விட்டு கோயபல்ஸ் படத்தை தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை.
நண்பரொருவர் இந்தப் படத்தை தந்து போடச் சொன்னார். மேற்படி பதிவிற்கும் படத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி சத்தியமாய் தெரியாது. பதிவைப் படிப்பவர்கள் படத்தோடு ஒப்பிட்டு வேறேதும் கற்பனை செய்தால் நான் பொறுப்பல்ல.

5 comments:

வேத்தியன் said...

ஆஹா...
இந்த படம் கலக்கல்...
பாத்து உங்களை நாலு பேர் தேடுறாங்களாம்ல...
:-)

வேத்தியன் said...

அப்புறம் தர்ஷன், கமென்ட் மாடரேஷன் எடுத்து விடுங்களேன்...
மீ த பர்ஷ்ட்டு போட வசதியா இருக்கும்ல...
அதான்...
:-)

தர்ஷன் said...

பின்னூட்டத்துக்கு நன்றி
உங்கள் விருப்பப்படி கமென்ட் மாடரேஷன் எடுத்து விட்டேன்
எசகு பிசகா ஏது வராது என்ற நம்பிக்கையில்

வேத்தியன் said...

தர்ஷன் said...

பின்னூட்டத்துக்கு நன்றி
உங்கள் விருப்பப்படி கமென்ட் மாடரேஷன் எடுத்து விட்டேன்
எசகு பிசகா ஏது வராது என்ற நம்பிக்கையில்
//

அப்பிடி எதுவும் வராது என்டு நம்புவோம்..
மீறி வந்தால் அழித்து விட வேண்டியது தானே??
:-)

கலை - இராகலை said...

படத்தப்பாத்து பயந்துட்டேன், க..‍டியோனு நினைச்சிட்டேன், கண்ணக்கொஞசம் செக் பன்னனும் தர்ஷன், சரியா தெரிய மாட்டேங்குது!

Post a Comment

Related Posts with Thumbnails