வியாழன், 2 ஏப்ரல், 2009

சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்


உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.

அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.

இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.

சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.

உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

14 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தங்கள் வலைப்பதிவு மிகவும் நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள்.நகைச்சுவை சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தது

தர்ஷன் சொன்னது…

நன்றி முனைவர் இரா. குணசீலன் அவர்களே
தங்களைப் போன்ற தமிழில் புலமை வாய்ந்த ஒருவரிடம் பெற்ற பாராட்டுக்கள் மிகவும் ஊக்கப்படுத்துகின்றன நன்றி

பெயரில்லா சொன்னது…

ஹாஹாஹா கலக்கல்

Gajen சொன்னது…

ஹா ஹா ஹா...அதுனா உண்மை தான் சார்...நம்மட பசங்க சந்திரன கொஞ்சம் கண்டுட்டா போதும்..என்னவோ பக்தி மார்க்கத்துல போறதா நெனப்பு...ஆனா ஒரு விஷயம் கவனிச்சீங்களா?? போயா(பூரணை), பெரஹர, வெசாக் இதுக்கெல்லாம் ஒரு கிழமைக்கு முதல்ல தான் சாராயக் கடையெல்லாம் நிரம்பி வழியும்..என்ன பக்தியோ..:S

ARV Loshan சொன்னது…

//இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.
//

ரசித்தேன்..

விஷயமும்,நகைச்சுவையும் அருமை..
தொடர்ந்து கலக்குங்கள்.

தமிழ் மதுரம் சொன்னது…

அடங் கொய்யாலா....நகைச்சுவையிலை பின்னிட்டீங்கள் தர்ஷன்...தொடர்ந்தும் எழுதுங்கோ..


ஈழம் பற்றி எழுத நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மலையகம் பற்றி எழுதுகின்ற பதிவர்கள் குறைவு...

மலையகம் பற்றி நிறைய விடயங்களை எழுத வேண்டிய பொறுப்பு உங்களையே சாரும்..


தொடர்ந்தும் எழுதுங்கோ.. மலையம் பற்றியும் அறியத் தாருங்கோ நண்பா....
நான் இன்று தான் முதல் முதல் உங்கள் பக்கம் வந்தேன். தொடர்ந்தும் வருவேன்...

தர்ஷன் சொன்னது…

நன்றி தியாகி
என்ன ரொம்ப நாளா உங்களை காணவில்லை

//போயா(பூரணை), பெரஹர, வெசாக் இதுக்கெல்லாம் ஒரு கிழமைக்கு முதல்ல தான் சாராயக் கடையெல்லாம் நிரம்பி வழியும்..என்ன பக்தியோ..:ச//

நீங்களும் அங்கதான் இருப்பீங்க போல

தர்ஷன் சொன்னது…

நன்றி கவின்
சிரிப்பை அடக்கமுடியாததால வேறெதுவும் எழுத முடியல்ல போல
Anyway thanks வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்

தர்ஷன் சொன்னது…

//ரசித்தேன்..

விஷயமும்,நகைச்சுவையும் அருமை..
தொடர்ந்து கலக்குங்கள்.//

யாரு இது ஈழத்து பதிவுலக super star லோஷன் அண்ணாவா
பின்னூட்டம் இட்டிருப்பது
ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேனோ

தர்ஷன் சொன்னது…

//ஈழம் பற்றி எழுத நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மலையகம் பற்றி எழுதுகின்ற பதிவர்கள் குறைவு...

மலையகம் பற்றி நிறைய விடயங்களை எழுத வேண்டிய பொறுப்பு உங்களையே சாரும்..//

நன்றி கமல்
ஆரம்பத்தில் எழுதினேன்
நிறைய பேரைச் சென்றடைய வில்லையோ என்ற எண்ணத்தில் தற்போதைக்கு நிறுத்தியுள்ளேன்.
தொடர்கிறேன் தங்கள் விருப்பப்படி

kuma36 சொன்னது…

அப்பாடா ரொம்ப லேட்டா ஆகிவிட்டேனோ?

///" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது///

அடேங்கப்பா சூப்பர்.கலக்கிறிங்க தர்ஷன்.

kuma36 சொன்னது…

////தர்ஷன் said...
//ரசித்தேன்..
விஷயமும்,நகைச்சுவையும் அருமை..
தொடர்ந்து கலக்குங்கள்.//
யாரு இது ஈழத்து பதிவுலக super star லோஷன் அண்ணாவா
பின்னூட்டம் இட்டிருப்பது
ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேனோ////

ஆஹா இதென்ன புதுவடிவம் லோஷன் அண்ணாவிற்கு, அப்படியெல்லாம் வரையறுத்து விடாதிங்க!ஓகேவா

all rounder அவரு!

kuma36 சொன்னது…

Can u Send me the ur mail address. ckalai2007@gmail.com

Gajen சொன்னது…

//நீங்களும் அங்கதான் இருப்பீங்க போல//

ஐயையோ...அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்ல தர்ஷன் சார்..உயிரோட வீட்ட போகலாம்னா நினைக்குறீங்க?? நா ஏன் சொன்னன்னா, ஒவ்வொரு வருஷமும் போயாவுக்கு அவதானிக்கிற 'தோற்றப்பாடு' அது...ஹிஹிஹி...

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails