சனி, 27 பிப்ரவரி, 2010

விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்

வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே


ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.

கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.

நம்பி வந்தால் இரண்டரை மணி நேர entertainment க்குத் தான் உத்தரவாதம் என்பதை மீள ஒருமுறை நிருபித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ரெண்டு வருடமா தமிழ் படத்தை இங்கிலிஷில் எடுப்பாரே அவரா? என தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அவர் ராஜபார்வையில்ருந்து இவரது மின்னலே வரை வழக்கிலிருக்கும் சர்ச் வெடிங் கிளைமாக்ஸ், தற்கொலை செய்துக் கொள்வதாய் மிரட்டும் தந்தை போன்றவற்றையும் பகடி பண்ணியவாறே தன படத்தில் சேர்த்திருக்கிறார். வழமையான அவரது கதை சொல்லும் பாணியிலான narrative ஸ்டைலிலேயே கதை நகர்கிறது. சிம்பு த்ரிஷாவைத் தான் காதலிப்பதற்கான காரணத்தைக் கேட்கும் போது முதல் படம் வரும் சொல்கிறேன் என்பார். பிறகு த்ரிஷாவிடமே சிலம்பரசன் த்ரிஷாவை பற்றி சொல்வதும் அது சொல்லப் படுவது எதில் என்பதும் புத்திசாலித்தனமான சுவாரசியம். சிம்பு கதை சொல்ல ஆரம்பிக்கும் அதே வசனங்களில் படம் முடியும் படியான வட்டமான திரைக்கதையும் அருமையாயத்தான் இருக்கிறது.

வழமையாக டைரக்டர் பற்றி இறுதியில்தான் சொல்வார்கள். நான் அவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு இறுதியில் இவரைப் பற்றி சொல்லக் காரணம். இவரது இசையத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ச்சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் இசைப் புயல்.
காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?

படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.

படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.

20 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தர்ஷன் சொன்னது…

நன்றி அக்பர்

நன்றி பிரபு
எதற்கு இந்த ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Unknown சொன்னது…

நல்ல விமர்சனம். அப்ப பாக்கலாம்ங்கிறீங்க..

balavasakan சொன்னது…

படித்து விட்டேன் உண்மையில் அற்புதமான படம் தர்ஷன்... கௌம் மேனன் மேல மேலே போய்க்கொண்டே இருக்கிறார்

தர்ஷன் சொன்னது…

நிச்சயமாக முகிலன்
உங்களுக்க வயது முப்பதிற்குள்தானே கண்டிப்பாக ரசிப்பீர்கள்

நன்றி பாலவாசகன்
ஆனால் அவரைப் பிடிக்காதவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஏன் எனத் தெரியவில்லை

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.
////////

விமர்சனம் அருமை தர்ஷன்

தர்ஷன் சொன்னது…

நன்றி உலவு

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்ல பகிர்வுங்க...(ஒரே ஒரு இடம்தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு...எதுன்னு உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்..)

வாழ்த்துக்கள்...

sweet சொன்னது…

i like simbu

madhumidha1@yahoo.com

தர்ஷன் சொன்னது…

நன்றி ஸ்வீட்

நன்றி கமலேஷ்
உறுத்தலாய் இருந்தால் மன்னியுங்கள் வலைப்பக்கங்களை பார்ப்பவர்கள் பொதுவாக Adults என்பதால் ஒரு சுவாரசியத்திற்காக போட்டது.

ARV Loshan சொன்னது…

அருமை.. ரொம்பவே உணர்ந்து ரசித்திருக்கிறீர்கள் எனத் தெரியுது.. :)

//வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம்.//
ம்ம்ம்..

நல்ல தெளிந்த நடை.. ரசித்தேன்..

நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்கள்..

தர்ஷன் சொன்னது…

நன்றி லோஷன் அண்ணா
வருகை,பின்னூட்டம் மற்றும் நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்களுக்கு நான் மட்டுமில்லை பார்த்த அனைவருக்கும் ஒரு கணமேனும் மலரும் நினைவுகள் வந்திருக்கும்.

Jackiesekar சொன்னது…

இந்த படம் எல்லார் காதலையும் ஞாபகபடுத்தி விட்டது என்பதே படத்தின் வெற்றிக்கு காரணம்...
நன்றி தர்ஷன்.. விமர்சனத்துக்கு...

தர்ஷன் சொன்னது…

நன்றி ஜாக்கி சேகர்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

பெயரில்லா சொன்னது…

//அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு
//
பாராட்ட‌ரீங்க‌ளா? இல்ல‌ ஓட்ட‌ரீங்க‌ளா? உள்குத்து ஒண்ணும் இல்லையே

நர்சிம் சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தர்ஷன்

தர்ஷன் சொன்னது…

அனானி நண்பரே நான் சொன்னது அந்த ஒரு காட்சியில் அவரின் தோற்றத்தை
மற்றும் படி அழகாய்த்தான் இருந்தார்.

கார்ப்பரேட் கம்பருக்கு நன்றி

PPattian சொன்னது…

நல்ல விமர்சனம் தர்ஷன்.. படம் இன்னும் பாக்கலை.. பார்த்ததும் மீண்டும் படிக்கலாம்..:)

Matangi Mawley சொன்னது…

thanks for the review.. nt seen the movie yet.. wd see whn i see.. :) music is something tht i always have in me.. esp aromale- one hell of music.. fab lyrics!!

கீர்த்திகா சொன்னது…

//எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை.//

ஹ்ம்ம்ம்......

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails