செவ்வாய், 24 மார்ச், 2009

சொதப்புவரா கமல்


அபத்தமான அற்ப விடயங்களை தனது கொள்கைகளாக வரித்துக் கொண்டு அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை உலகளாவிய ரீதியில் காவுக் கொண்டு வருவது தீவிரவாதம்.

அவர்களின் கொள்கைகளில் நம்பிக்கையோ, அபிமானமோ இன்றி பத்திரிகைகளோடு தமது அரசியல் அறிவையும் மடித்து வைத்து விட்டு அன்றாட கடமைகளில் மூழ்கிப் போகும் சாதாரணர்களே அதிகம்.
ஆனால் தமக்கு கிஞ்சித்தும் நிறைவையோ, திருப்தியையோ தராத கொள்கைகளுக்காக தன்னை ஒத்த இன்னும் பல்லாயிரம் சாதாரணர்கள் பாதிப்புறுவதைப் பார்த்த ஒரு சாதாரணன் அசாதாரணமாக செய்யும் ஒரு காரியத்தின் தொகுப்புத்தான் " A Wednesday".

நஸ்ருதீன் ஷாவின் அலட்டலே இல்லாத அருமையான நடிப்பில் வந்துள்ள திரைப்படம். நடிப்பில் அவருக்கு இணையாக கரம் கோர்த்துள்ளார் அனுபம் கேர். கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக வருகிறேன் என்ற வார்த்தையை தமிழ் நட்சத்திரங்களின் பேட்டிகளில் கேட்டிருப்போம். அவ்வார்த்தையின் அர்த்தம் எனக்கு சரியாக புரிந்தது இப்படத்தைப் பார்த்த போதுதான்.

போலிஸ் அதிகாரியான அனுபம் கேர் தான் கையாண்ட ஒரு சுவாரசியமான கேசைப் பற்றி பகிர்வதில் ஆரம்பிக்கின்றது படம். நடுத்தர வயது தாண்டி வயோதிபத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கும் சாதாரண ஊழியர் நஸ்ருதீன் ஷா. தினம் ரயிலில் கடமைக்கு சென்று வரும் இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் தனது பர்ஸ் தொலைந்ததைப பற்றி புகார் கொடுக்க வருகிறார். தான் கொண்டு வந்த பையோடு பாத்ரூம் போகும் இவர் அதை அங்கேயே விட்டு விட்டு வெளியே வரும்போது சூடு பிடிக்கிறது படம்.

ஒரு சுமையான பையைத் தூக்கி கொண்டு மூச்சிரைக்க ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஏறும் ஷா அங்கிருந்து போலிசுக்கு போன் போடுகிறார் . மும்பையின் பல முக்கிய இடங்களில் தான் குண்டு வைத்திருப்பதாகவும் அவை இருக்கும் இடங்களை தான் சொல்ல வேண்டுமெனில் தான் பெயர் குறிப்பிடும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
அதே நேரம் ஆர்வக் கோளாறான ஒரு இளம் பெண் ஊடகவியலாளரையும் தொடர்புக் கொண்டு ஒரு சுவாரசியமான செய்தி போலிஸ் தலைமையகத்தில் கிடைக்கும் எனக் கூறுகிறார்.(அங்கு நடப்பவற்றை உடனுக்குடன் அறிய).
இவரைப் பிடிக்க முடியாததால் இவரது கோரிக்கைக்கு உடன் படுகிறது போலிஸ். வாட்டசாட்டமான, கோபக்கார ஒரு அதிகாரியோடு அனுப்பி வைக்கப்படும் நான்கு தீவிரவாதிகளில் ஒருவனை அவ்வதிகாரி தடுத்து வைத்து மற்றைய மூவரையும் நஸ்ருதீன் ஷா சொல்லும் இடத்தில் விடுகிறார். நம் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அங்கே அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இதற்கிடையில் கம்பியூட்டர் தொழிநுட்பம் அறிந்த ஒரு டீன் ஏஜ் இளைஞன், நஸ்ருதீன் ஷாவின் கேசை பதிவு செய்த போலிஸ் அதிகாரி, ஷாவுக்கு வெடி மருந்து தந்தவர்களின் உதவியோடு போலிஸ் இவரை நெருங்குகிறது.
நஸ்ருதீன் ஷா யார்? அவரது நோக்கம் என்ன? அவரை போலிஸ் என்ன செய்தது? போன்ற பல கேள்விகளுக்கு உருக்கமும் விறு விறுப்புமாய் அடுத்தடுத்த காட்சிகளில் பதில் சொல்லியிருக்கும் படம்தான் A Wednesday

அட இதெல்லாம் ஒரு நடிப்பா? நவீன தொழிநுட்பங்களும் அதீத புத்திசாலித் தனங்களும் கொண்ட ஒருவனுக்கு அவனது புகழ் கூறும் ஒரு intro பாடல் கூட இல்லை. சரி பாடல்தான் இல்லை அட்லீஸ்ட் அவர் தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் சவால் இடும் காட்சிகளில் கமராவைப் பார்த்து கைகளை ஆட்டி விரல் சொடுக்கி பேச வேண்டாம். எதுவுமில்லாமல் ஏதோ நம்ம பக்கத்து வீட்டு பெருசு போல புலம்புகிறார். தன்னை முபையையே காக்க வந்த ஆபத்பாந்தவனாக சொல்லக் கூடாதா தன்னை common stupid man என்று சொல்கிறார். அனுபம் கேரும் அப்படியே


கமலாவது இக்குறையை தீர்த்து வைப்பாரா பார்ப்போம். எது எப்படியோ நிச்சயமாய் வயதான பாத்திரத்தில் கமல் அவ்வப்போது தன் உச்சந்த்தலையை சொரிவார் என நினைக்கிறேன்.( கடல் மீன்கள், நாயகன் என எத்தனை கமல் படம் பார்த்திருப்போம்.)
கமல் தமிழின் தலை சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்ற போதும் அவரது அவ்வைச்சன்முகி, வசூல் ராஜா போன்றவற்றில் நடிப்பை ராபின் வில்லியம்ஸ் உடனோ சஞ்சய் தத்துடனோ ஒப்பிட்டிப் பார்த்தால் சொதப்பலாகவே தெரிந்தது. இதிலாவது நஸ்ருதீன் ஷாவை மிஞ்ச வாழ்த்துக்கள்.

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

KAMAL WAS BETTER THEN ROBIN WILLIAMS......

பரத் சொன்னது…

//அவ்வைச்சன்முகி, வசூல் ராஜா போன்றவற்றில் நடிப்பை ராபின் வில்லியம்ஸ் உடனோ சஞ்சய் தத்துடனோ ஒப்பிட்டிப் பார்த்தால் சொதப்பலாகவே தெரிந்தது.//
Good comedy.
சஞ்ஜய் தத்க்கு இயல்பாகவே ரவுடி, பொறுக்கி போன்ற தோற்றம் இருந்ததால் அக்கதாபாத்திரம் நன்றாக பொருந்தியது. கமலை விட நன்றாக செய்திருந்தார் என்று சொல்ல எதுவும் இல்லை. மேலும் முன்னா பாய் படத்திற்கு இதைவிட சிறப்பாக தமிழில் ஜஸ்டிஸ் செய்திருக்க முடியாது.

நடிப்பில் அவர் நஸ்ருதின் ஷாவை மிஞ்சுவார் என்பதிலெல்லாம் சந்தேகமில்லை.ஆனால் பெரும்பான்மை மும்பை குண்டுவெடிப்புகளையும் ,மதவாத தீவிரவாதைதையும் அடிப்படையாக கொண்ட இந்தக்கதையை தமிழுக்கு எப்படி மாற்றப்போகிறார் என்பதில் தான் அவரது திறமை அடங்கியிருக்கிறது.I will be disappointed if he just remakes the same movie scene-by-scene.

பெயரில்லா சொன்னது…

Kamal didnt excel Robin, sure, accepted, but to say Sanjay was better than Kamal is preposterous.

Joe சொன்னது…

கலைஞர்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறானது.

என்னைப் பொறுத்தவரையில் அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா படங்களை கமல் தனது வேலையை நிறைவாகவே செய்திருந்தார்.

Joe சொன்னது…

கலைஞர்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறானது.

என்னைப் பொறுத்தவரையில் அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா படங்களில் கமல் தனது வேலையை நிறைவாகவே செய்திருந்தார்.

ரமேஷ் கார்த்திகேயன் சொன்னது…

Anbe sivam parthuttu ezhuthunka

andygarcia சொன்னது…

போயும் போயும் சஞ்சய் தத்த கூட ஒப்பிட்டு கமல அசிங்க படுத்தாதீங்க

ரமேஷ் கார்த்திகேயன் சொன்னது…

.

ரமேஷ் கார்த்திகேயன் சொன்னது…

Anbe Sivam partherkala?

தர்ஷன் சொன்னது…

//சஞ்ஜய் தத்க்கு இயல்பாகவே ரவுடி, பொறுக்கி போன்ற தோற்றம் இருந்ததால் அக்கதாபாத்திரம் நன்றாக பொருந்தியது. கமலை விட நன்றாக செய்திருந்தார் என்று சொல்ல எதுவும் இல்லை.//
ஆஹா கமல் நன்றாக செய்யவில்லை என்று சொல்லவில்லை
ஆனால் அந்த climax ஞாபகம் இருக்கிறதா சஞ்சய்தத்தின் body language அவர் மீது அனுதாபம் வரச் செய்யுமே அது எனக்கேதோ கமல் மேல் வரவில்லை சில நேரங்களில் கமல் அப்போது நடித்தது போல் பலர் imitate செய்து கேலி செய்வதாலோ தெரியவில்லை அவர் கவலைப் படும் காட்சிகளெல்லாம் ஒரே மாதிரி இருப்பதாய் ஒரு உணர்வு

தர்ஷன் சொன்னது…

//கலைஞர்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறானது.

என்னைப் பொறுத்தவரையில் அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா படங்களை கமல் தனது வேலையை நிறைவாகவே செய்திருந்தார்.//
இருக்காலாம் joe
அது வேண்டுமென்றே செய்ததில்லை கமலின் remake படங்களை பற்றிப் பேசும் போது வந்து விட்டது

தர்ஷன் சொன்னது…

//போயும் போயும் சஞ்சய் தத்த கூட ஒப்பிட்டு கமல அசிங்க படுத்தாதீங்க//
சஞ்சய் தத்தை விட கமல் நல்ல நடிகர் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் இத்தனை கேவலப் படுத்தும் அளவுக்கு அவர் ஒன்றும் மோசம் இல்லை

தர்ஷன் சொன்னது…

//Anbe sivam parthuttu ezhuthunka//
ராம சேகர்
என் சுயவிவரம் பார்த்தீர்களா
எனக்கு விருப்பமான படங்களின் பட்டியல் பார்த்தீர்களா
வறுமையின் நிறம் சிவப்பில் சதா கோபமாய் இருக்கும் அந்த தாடிக்கார புரட்சியாளனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
interview இல் " what else do you expect from me, two horns? எனக் கொந்தளிப்பாரே
அன்பே சிவம் சொல்லவே வேண்டாம் அந்த பாத்திரத்தை அவர் தவிர்ந்து யாரும் செய்ய இயலாது
பரிவு நிறைந்த குணம், அதீத புத்திசாலித்தனம், மிகுந்த தன்னம்பிக்கை ஆகிய குணங்களையெல்லாம் அப்பாவித் தனத்திற்குள் அழகாய் மறைத்து வைத்த ஒரு போராளி.
நான் சொன்னது அந்த ரெண்டு படங்களில் அவர் நடிப்பு அதுவும் அந்த பாத்திரத்தை ஏலவே செய்தவர்களோடு ஒப்பிட்டு

kuma36 சொன்னது…

தர்ஷன் வாழ்த்துக்கள். விகடனில் உங்கள் இப்பதிவு!
http://youthful.vikatan.com/youth/index.asp

தர்ஷன் சொன்னது…

//தர்ஷன் வாழ்த்துக்கள். விகடனில் உங்கள் இப்பதிவு!
http://youthful.vikatan.com/youth/index.asp//
அறியத் தந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கலை

Gajen சொன்னது…

அட..நம்ம கமல்ஜிய பட்டி எழுதி இருக்கீங்க..Remake படங்கள் என்றால் ஒப்பீடுகள் தவிர்க்க முடியாது...இதனால் தான் ரசிகன் என்ற ரீதியில் கமல்ஹாசன் remake படங்களில் நடிப்பதை நான் விரும்புவதில்லை...அந்த மகா கலைஞனுக்கு கடிவாளம் போட்ட மாதிரி..நீங்க சொன்ன மாரி Intro பாட்டுக்கள், விரல் சொடுக்குறது எல்லாம் இருக்குமோ எண்டு பயமா இருக்கு..பாப்பம்..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails