வியாழன், 26 மார்ச், 2009

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை




திரும்ப திரும்ப எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் மின்னலே திரைப்படத்திற்கு உண்டு. படம் வெளிவந்த காலத்தில் தியேட்டரில் பிறகு டிவியில் என கணக்கு வழக்கில்லாமல் அப்படத்தை பார்த்திருக்கறேன். அதுவும் இலங்கை தேசிய தொலைக்காட்சி நேத்ரா டிவியில் வார இறுதி நாட்களில் அதிகம் போடப்படும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

காக்க காக்க பார்த்த போது இவர் எனக்கு ஒரு குட்டி மணிரத்னமாகத் தெரிந்தார். குட்டி குட்டி வசனங்கள் காரணமாக இருக்கலாம். ஐரோப்பிய வன்முறையை தமிழில் வழங்குபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தாலும் அந்த Hollywood பாணி விறு விறு திரைக்கதை என்னை வெகுவாய்க் கவர்ந்ததென்னவோ உண்மை.

வேட்டையாடு விளையாடுவில் தன் மனைவியின் சடலத்தைப் பார்த்து கமல் வழமைப் போல் "ஹா ஹா ............" எனக் கதறப் போகிறார் என எதிர்ப்பார்க்கையில் ஒரு வசனமும் கதறலும் இன்றி அவரை நடிக்க வைத்திருப்பாரே

வாரணம் ஆயிரம் ஒரு Biography அதுவும் ரொம்ப நீளம் ஆனால் எங்கேயாவது சலிப்புத் தட்டியதா. அது கௌதம் மேனன்.


அண்மையில் மாபெரும் இயக்குனரும் action நடிகர், " அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல " போன்ற கலைத்துவமான பாடல்களை யாத்த பாடலாசிரியர், தற்போது இசையமைப்பாளர் என்ற பன்முகங்களையும் கொண்டவருமான இயக்குனர் பேரரசுவின் பேட்டி ஒன்றைக் காண நேர்ந்தது.

அதில் விஜய் பற்றி அவர் குறிப்பிட்டதுதான் ரொம்பக் கஷ்டமாய் போய்விட்டது. ஏற்கனவே அவரை அனைவரும் ஒரு கேலிப் பொருளாய் பார்க்கும் நிலையில் இவருக்கு தளபதி மேல் என்ன கோபமோ இதை வெளியில் எல்லாம் சொல்லி டாக்டரை பெருமைப் படுத்துவதாய் நினைத்து சிறுமை படுத்தியிருக்கிறார். அவரது punch dialog போலவே அவர் சீரியசாய் சொன்ன விஷயம் எனக்கு சிரிப்பாய் இருந்தது. உங்களுக்கு எப்படியோ படித்து பாருங்களேன்

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கிக் கொடுத்தேன். அடுத்து ஆக்ஷன் ஜோதி ஏத்திட்டோம்ல...‘ காற்றில் கத்தி வீசிச் சிரிக்கிறார் டைரக்டர் பேரரசு. ஊர் பேரில் டைட்டில் வைத்து உறியடிக்கும் ஊரரசுவான பேரரசு, இப்போ டிக்கெட் எடுத்திருப்பது திருவண்ணாமலைக்கு. திரையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை இயக்குநர் பேரரசுவுடன் ஒரு மினி பேட்டி.

இந்த மசாலாவை விட்டு வெளியே வரவே மாட்டீங்களா?

மசாலா பிடிக்காதவங்க யாராவது இருந்தா சொல்லுங்க... டைரக்டர் கௌதம் மேனன்கிட்ட திருப்பாச்சி, சிவகாசி டிவிடியைக் கொடுத்து இந்த மாதிரி கமர்ஷியலா படம் எடுங்கன்னு சொல்லியிருக்கிறார் விஜய். இதுக்காக கௌதம் மேனன் வருத்தப்பட்டிருக்கார் சார்.

நான் பக்கா லோக்கல் ஆளு. முழு டைரக்டர்ன்னு என்னைச் சொல்லிக்க மாட்டேன். இங்கிலிஷ் படம் இரான் படம்லாம் பார்க்க மாட்டேன். நான் எடுக்கிறது கொடுக்கிறது எல்லாமே அக்மார்க் உள்ளூர் லோக்கல் சரக்குதான். ‘இனிமேலாவது தமிழ் படம் எடுக்கட்டும்‘ங்கிற நல்ல எண்ணத்தில விஜய் என் பட டிவிடியைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே இது எனக்குப் பெருமையான விஷயம். சொன்ன டயத்துக்குள்ளே படம் தயாரிப்பாளர் லாபம் பார்த்து சந்தோஷப்படணும் இதுதான் சார் என்னோட டார்க்கெட். நான் நல்லாயிருக்கேன்... தயாரிப்பாளர்கள் சந்தோஷமா இருக்காங்க... எனக்கு இது போதும். கை கூப்பி வழி அனுப்புகிறார் பேரரசு.

கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
ஒரு நல்ல எழுத்தாளரிடம் போய் " யோவ் என்னய்யா எழுதுற இந்த blog எல்லாம் வாசிச்சு எழுதக் கத்துக்கோ" என்று சொன்னது போலிருந்திருக்குமா




17 கருத்துகள்:

வேத்தியன் சொன்னது…

ம்..
அருமை போங்க...
ஆமா நீங்க மாத்தளையா???
இவ்வளவு நாளா தெரியாமப் போச்சே தல...
அப்பாவோட இடம் அது தான்...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...

வேத்தியன் சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்கப்பா...
வாழ்த்துகள்...

Raju சொன்னது…

என்ன தர்ஷன், "பச்சைக்கிளி முத்துச்சரத்தை" லிஸ்ட்ல காணோம்...
பேரரசு....ஹி..ஹி..அவரப் பத்தி என்ன சொல்ல..?

Senthil சொன்னது…

People like Maniratnam,Bharathiraaja,Balachandar
Balumahendra,Bala,Ameer have set highest standards in flim making over the years...
this guy Perarasu came and dragged the tamil movie industry to low levels..
athavida kodumai he still thinks he takes better movies than Gowtham mennon..itha ellam enga poi solla...

Senthil சொன்னது…

People like Maniratnam,Bharathiraaja,Balachandar
Balumahendra,Bala,Ameer have set highest standards in flim making over the years...
this guy Perarasu came and dragged the tamil movie industry to low levels..
athavida kodumai he still thinks he takes better movies than Gowtham mennon..itha ellam enga poi solla...

மனோ சொன்னது…

தர்ஷன்,
இந்த பேரரசு, விஜய் இவங்கல எல்லாம் நெனச்சி,அழுவதா சிரிப்பதா தெரில :((:((:((:((:((

Bleachingpowder சொன்னது…

//ஒரு நல்ல எழுத்தாளரிடம் போய் " யோவ் என்னய்யா எழுதுற இந்த blog எல்லாம் வாசிச்சு எழுதக் கத்துக்கோ" என்று சொன்னது போலிருந்திருக்குமா//

அத விட கேவலமா ஃபீல் பன்னியிருப்பாரு. போய் பீளீச்சீங் பவுடர் ப்ளாகை படி சொன்ன மாதிரி இருந்திருக்கும் :)

தர்ஷன் சொன்னது…

நன்றி வேத்தியன்
இப்படி நம் ஊருடன் தொடர்புஉள்ளவரைக் காணும் போது சந்தோஷமாக உள்ளது.
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

தர்ஷன் சொன்னது…

//என்ன தர்ஷன், "பச்சைக்கிளி முத்துச்சரத்தை" லிஸ்ட்ல காணோம்...
பேரரசு....ஹி..ஹி..அவரப் பத்தி என்ன சொல்ல//
ஆமாம் எப்படி விட்டேன்
சரி சரத்குமாருக்கும் நடிக்கத் தெரியும் என நானறிந்துக் கொண்டது இப்படத்தில்தான் எனக்கு இப்படம் பார்க்கும் போது Nicole Kidman நடித்த the birthday girl நினைவுக்கு வந்தது.
நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பது இரண்டிலும் மையக் கரு.
ஆனால் " பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் வேறொரு ஆங்கில படம் என அறிந்தேன். பெயர் தெரியவில்லை.

தர்ஷன் சொன்னது…

//this guy Perarasu came and dragged the tamil movie industry to low levels..//
இவர் மட்டும்தானா

தர்ஷன் சொன்னது…

//இந்த பேரரசு, விஜய் இவங்கல எல்லாம் நெனச்சி,அழுவதா சிரிப்பதா தெரில :((:((:((:((:((//
இவர்களை நினைத்து நாம் அழுவதா
நாம் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே படம் எடுப்பவர்கள் இவர்கள்

தர்ஷன் சொன்னது…

//அத விட கேவலமா ஃபீல் பன்னியிருப்பாரு. போய் பீளீச்சீங் பவுடர் ப்ளாகை படி சொன்ன மாதிரி இருந்திருக்கும் :)//

ச்சேசே என்ன பேரரசு படம் அளவா மொக்கையா இருக்கு உங்க ப்ளாக்
Confident boss confident
இப்ப நானெல்லாம் எழுதல்ல

பெயரில்லா சொன்னது…

Pachaikkili Muthucharam was adopted from the film 'Derailed". In any case, Gowtham vasudev menon is a class director. I like his films a lot. Vaaranam was excellent.

தர்ஷன் சொன்னது…

//Pachaikkili Muthucharam was adopted from the film 'Derailed". In any case, Gowtham vasudev menon is a class director. I like his films a lot. Vaaranam was excellent.//

நன்றி நண்பரே
வரவுக்கும் தகவலுக்கும்

Vilvaraja Prashanthan சொன்னது…

Mr. பேரரசு .......
மனசாட்சிய தொட்டு சொல்லுங்க ??? திருப்பதி, தருமபுரி, பழனி, திருவண்ணாமலை, போன்ற படங்களை தயாரிச்ச தயாரிப்பாளர் சந்தோசமாவா இருந்திருபார்? இல்லா அத பார்த ரசிகர் பெருமக்களாவது சந்தோசமாக இருந்தாங்களா?? என்ன பேச்சு பேசுரிங்கMr.பேரரசு....

Raju சொன்னது…

\\ஆமாம் எப்படி விட்டேன்
சரி சரத்குமாருக்கும் நடிக்கத் தெரியும் என நானறிந்துக் கொண்டது இப்படத்தில்தான் எனக்கு இப்படம் பார்க்கும் போது Nicole Kidman நடித்த the birthday girl நினைவுக்கு வந்தது.
நம்ப வைத்து கழுத்தறுப்பது என்பது இரண்டிலும் மையக் கரு.
ஆனால் " பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் வேறொரு ஆங்கில படம் என அறிந்தேன். பெயர் தெரியவில்லை.\\

ப.கி.மு.சரம் படம், கொஞ்சம் போரடித்தாலும் அருமையான கரு....
ஜோதிகாவுக்கு "மொழி"க்கு அடுத்து ஒரு சொல்லிக் கொள்ளும் படியான படம்...
வழக்கம் போல..வில்லனுக்கு கௌதம் மேனன் வாய்ஸ்..சூப்பர்

அடுத்து "விண்ணைத் தாண்டி வருவாயா" வில் பார்ப்போம்...(சிம்பு‍-த்ரிஷா)

தர்ஷன் சொன்னது…

//அடுத்து "விண்ணைத் தாண்டி வருவாயா" வில் பார்ப்போம்...(சிம்பு‍-த்ரிஷா)\\

சிம்பு படத்திற்கு முன் "சென்னையில் ஒரு மழைக்காலம்" வரவேண்டுமல்லவா

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails