வியாழன், 12 மார்ச், 2009

ரஜினி


ரஜினி
என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப கலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

முக்கியமாக முள்ளும் மலரும் படத்தின் உச்சக் காட்சியில் அனைவரும் இவரை நிராகரித்து அவரது தங்கையின் திருமணத்தை நடத்த முயலும் போது தனித்து ஒதுங்கியிருப்பதும் தங்கையோ அனைவரையும் புறந்த்தள்ளி விட்டு இவரை நாடி வரும் போது கம்பீரமாக தங்கையை இவரே அவளது காதலனோடு சேர்த்து வைக்கும் காட்சியில் இவரது நடிப்பு

தில்லு முல்லு திரைப்படத்தின் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனை அத்தனை எளிதாய் மறக்க முடியுமா? ஒரு காட்சியில் தன் தங்கையிடம் சொல்வார் " அம்மா இனிமே நா காதலிக்கவே மாட்டேம்மா அப்படியே காதலித்தாலும் கல்யாணமாகாத பொண்ணை காதலிக்கவே மாடேம்மா" என்பார். படத்தில் இவ்வசனம் வரும் கட்டத்தில் அவர் இதை கூறும் விதம் எளிதில் சிரிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக அவர்கள் திரைப்படத்தில் குத்தல் பேச்சுக்களால் சுஜாதாவையும் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.

suppose கமலும் இவரும் எழுபதுகளின் இறுதியில் தமிழ் திரையுலகம் வராதிருந்தால் அப்படியே சிவாஜியை அடியொட்டி நடித்த தமிழ் நடிகர்கள் சினிமாவை எங்கு கொண்டு சென்றிருப்பர். நினைக்கவே பயமாயில்லை. அது காலத்தின் தேவை என்பவர்கள் அதே காலக் கட்டத்தில் வந்த சிங்களப் படங்களையோ திலிப் குமாரின் ஹிந்திப் படங்களையோ பாருங்கள் இப்படியெல்லாம் உதடு துடிக்க பாடல்களுக்கு வாயசைத்து, வாய் பொத்தி ஆச்சர்யப்பட்டு, தூண்களில் சாய்ந்து கதறி, கன்னச் சதைகளைஎல்லாம் ஆட்டி இப்படி தம்மையும் நம்மையும் ஒரு சேர வருத்தியிருக்க மாட்டார்கள். எனக்கு தெரிந்து ரஜினி படையப்பாவில் இப்படி நடித்து பார்த்திருக்கிறேன். நடிப்புலக மேதையை மிஞ்சும் ஆவேசம் போலும்.
சிவகுமார் கூட ரஜினி,கமலின் வருகையின் பின்தான் அக்னி சாட்சி, சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தார். மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

ரஜினியைப் பற்றிய பிரதான குற்றச்சாட்டு மசாலாப் படங்களில் மட்டும் நடிப்பது. அவரது படங்கள் யதார்த்த பூர்வமற்றவையாக இருப்பினும் அவரது நடிப்பு அதில் சோடை போனதில்லை என்பது என் அபிப்பிராயம்

நடிகர் என்பது தவிர்ந்து அவரது ஏனைய முகங்களும் ரசனைக்குரியவை. அவரது ஆன்மீகத் தேடல் பலரின் கேலிக்கு உள்ளானாலும் பாபா படத்தின் படு மசாலாவான அந்த அரசியல் காட்சிகள் தவிர்ந்து ஏனைய காட்சிகளும் திரைக்கதையோட்டமும் ராமநாராயணன் வகையறாக்களின் போலல்லாது ஒரு தத்துவ விசாரணம் போல் அமைந்திருந்தமை அவரது ஆன்மீக அறிவை பறை சாற்றுகிறது எனலாம். என் கணிப்பு சரியாயிருந்தால் படத்தையும் magical realism என்ற வகைக்குள் உள்ளடக்கலாம் என நினைக்கிறேன்.



சரி இதுவெல்லாம் நான் சொல்ல வந்த விஷயத்துக்கான முன்னோட்டம் மட்டுமே

விஷயம் என்னவென்றால் இத்தனை தூரம் ரஜினி ரசிகரை இருந்தாலும் அவர் அரசியலுக்கு வருவதை மட்டும் மனம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது. இதற்கு பிரதான காரணம் தமிழின எதிர்ப்பாளரான சோ அவரோடு ஒட்டியிருந்ததுதான். எங்கே அவர் அரசியலுக்கு வந்தால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ் தேசியத்திற்கு எதிராய் குரல் எழுப்புவாரோ என்ற பயம் இருந்தது.
ஆனால் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்த போது ஆவேசமாய் மஹிந்தவை நோக்கி குரல் எழுப்பியவர் பின்பு தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் நிறுத்த சொல்லி இலங்கை தமிழர் மத்தியில் தமக்கிருக்கும் இடத்தை மேலும் வலுவாக்கிக் கொண்டார். இத்தனையும் போதாதென்று நேற்று வீரகேசரியின் இணையத்தளத்தில் பார்த்த செய்தி ஒன்று மனதை பேருவகைக் கொள்ள செய்தது.

அச் செய்தி

தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர். இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(அட !!!!) உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

தலைவர் படத்தை பார்ப்பது போல விசிலடித்துக் கொண்டேதான் செய்தியை ரசித்தேன்.
கலக்குங்க தலைவா











12 கருத்துகள்:

சிவாஜி த பாஸ் சொன்னது…

வாங்க ஐயா, நீங்க நம்ம ஆளு,
கலக்குங்க!
சோ பெரிய தமிழின வெறுப்புள்ளவர் அல்ல, தமிழின தலைவன் அது இதுன்னு சொல்லிகிட்டு கூடவே இருக்கிற புல்லுறுவிங்கதான் அதிகம்! ரஜினிய எப்படி இவ்வளவு மட்டமா நினைக்கிறீங்க? சோ சொல்றது எல்லாத்தையும் ரஜினி கேட்பாருன்னு..............

kuma36 சொன்னது…

பொழுதுபோக்கிற்காக சினிமாவை பார்த்து விட்டு அப்படி சில நாட்களில் அதை மறந்து போயிடுவேன் ஏனோ தெரியல, அதோடு சினிமா செய்திகள் வாசிபதிலும் அதிக நாட்டம் இல்லை. தர்ஷனின் பதிவால் என்னதான் இருக்குதுனு வாசித்தேன்.

எமது இந்திய சகோதரர்கள் எவ்வள்வோ போராட்டம் செய்தும் இன்னும் எந்த நடவடிக்கைகளுமே நிகழ்ந்ததாயில்லை. இனி இந்த மாதிரியான போராட்டங்களை விடுத்து புதிய முறையில் ஏதாவது முழு பலத்துடன் அழுத்ததை இந்திய அரசிற்கும் கொடுக்க வேண்டும்.சூப்பஸ்டார் போன்ற பிரபல்யங்களால் தான் முடியும்.

ஜோ/Joe சொன்னது…

//சிவாஜியை அடியொட்டி நடித்த தமிழ் நடிகர்கள் சினிமாவை எங்கு கொண்டு சென்றிருப்பர். நினைக்கவே பயமாயில்லை//

அடடா..நினைத்தாலே குலை நடுங்குகிறது .

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//suppose கமலும் இவரும் எழுபதுகளின் இறுதியில் தமிழ் திரையுலகம் வராதிருந்தால் அப்படியே சிவாஜியை அடியொட்டி நடித்த தமிழ் நடிகர்கள் சினிமாவை எங்கு கொண்டு சென்றிருப்பர்.//


இல்லை. விஜய. டி. ராஜேந்தர் ரஜினியாக இருந்திருப்பார். பாரதிராஜா கமலாக இருந்திருப்பார்.


கொஞ்சம் டென்சன் ஏத்திவிட்டுட்டேனோ...

பெயரில்லா சொன்னது…

Thalaivar vaazhga...

// விடுதலைச் சிறுத்தைகள் கட்சி(அட !!!!) உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் //

cha...thalaivar katchi start pannaamaye ivlo katchi varudhe....start panna....The One & only dhaan pola...

தர்ஷன் சொன்னது…

என்ன சுரேஷ் இப்படி உலகத்த தரமான கஷ்டவதானிகளோடு ச்சே அஷ்டவதானிகளோடு எல்லாம் ஜுஜூப்பி ரஜினியை ஒப்பிட்டுக் கொண்டு
T.V.R கோபிக்க மாட்டார்

பெயரில்லா சொன்னது…

Joe-valayae thaanga mudiyala paarunga.

பெயரில்லா சொன்னது…

வெண்ணை. விடுதலைப் புலிகளை எதிர்த்தால் தம்ழின விரோதியா? போங்கடா நீங்களும் உங்க கருத்தும்.

தர்ஷன் சொன்னது…

வாங்க சிவாஜி உங்க பெற சொன்னாலே சும்மா அதிருதே
சரி நீங்க சொன்ன விஷயத்துக்கு வரலாம்
அட அது முன்ன அப்படி நான் நினைச்சது
இப்பதான் சோவே தன்னிலை விளக்கம் அழித்திருக்கிறாரே என் பேச்சை கேட்டா ரஜினி எப்படி இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியும்னு

தர்ஷன் சொன்னது…

//cha...thalaivar katchi start pannaamaye ivlo katchi varudhe....start panna....The One & only dhaan pola...//
உங்கள் மறுமொழியை படித்தால் தலைவர் இப்படி சொல்வாரோ
" இன்னுமா நம்மள இந்த ஊர் நம்பிக்கிட்டு இருக்கு"

தர்ஷன் சொன்னது…

ஜோ
ரொம்ப பயந்த சுபாவமாய் இருப்பிர்கள் போலீருக்கே
இனிமே தனியா சிவாஜி படம் எல்லாம் பார்க்க கூடாது சரியா

தர்ஷன் சொன்னது…

வருக பெயரில்லாதவரே
தமிழினத்தின் விடிவிற்கு ஒரு துரும்பையேனும் கிள்ளி போடாது அதற்காய் போராடுவோரை தன் போக்கில் விமர்சிப்போரை வேறென்ன சொல்வது

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails