Saturday, December 12, 2009

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள் பாகம் 2

நெற்றிக்கண்


சிவப்பு ரோஜாக்கள், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற படங்களில் கமல், மன்மதனில் சிம்பு என பல play boy பாத்திரங்கள் பார்த்திருப்போம். அவர்கள் இளமையும் சில அசாத்திய திறமைகளும் கொண்டவர்களாக அதில் சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் அறுபதைக் கடந்த ஒருவர் இளம்பெண்களை எல்லாம் மடக்குகிறார் என்ற கதைக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டுமென்றால் அவர் எத்தனை அசாதாரணமான கவர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நம்ம தலைவரை விட்டால் பொருந்திப் போகக் கூடிய இன்னொருவர் இருந்தால் சொல்லுங்கள்


நல்லவனுக்கு நல்லவன்


அதிரடி நாயகன் ரஜினி கொஞ்சம் அமைதியாகவும் நடித்திருப்பார். தலைவருக்கு வயதான வேடமும் கோட் சூட்டும் போட்டு விட்டால் ஒரு தனி மிடுக்கு வந்து விடும் அதற்கு இந்தப் படமும் விதி விலக்கல்ல. எதிர் நாயகனாக கார்த்திக். முத்துராமனும் போக்கிரி ராஜாவில் வில்லனாய் நடித்திருப்பார் அப்பா,மகன் இருவருமே ரஜினிக்கு வில்லனாகி இருக்கிறார்கள். தலைவருக்கு சிறந்த
நடிகருக்கான Film fair விருது கிடைத்த படம்.

தளபதி


தனிப்பட்ட ரீதியில் எனக்கு பிடித்த ரஜினிப் படம். பல ரஜினி படங்கள் அவருக்காக மட்டுமே பார்க்கத்தக்கது. இதிலோ மம்முட்டி,இளையராஜா,சந்தோஷ்சிவன்,மணிரத்னம் எனப் பெரும் படை. தலைவர் அதற்கு தளபதி. சினிமா ஒரு Visual media வசனங்கள் அல்லாமல் பல விடயங்கள் காட்சிகளிலேயே சொல்லப் பட வேண்டியது அவசியம். சிவாஜி காலத்தில் மேடை நாடகங்கள் அப்படியே எடுக்கப் பட்டாலும் அவ்வாறில்லாமல் ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தந்த தமிழ்ப் படம். பல காட்சிகளில் வசனமே இல்லாமல் Close up ஷாட்களில் வேறு தலைவர் நடித்திருப்பார்.சின்ன சின்ன முகப்பாவனைகளால் மட்டும். இந்த நடிகரை சரியில்லை என்று சொல்பவர்கள் மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அண்ணாமலை


இப்போது பார்த்தாலும் Fresh ஆகா இருக்கும் படம். எப்படியும் முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். ஒரு commercial படம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு சிறந்த உதாரணம். ஜிப்பா அணிந்து பட்டை அடித்த அந்த கெட் அப்பை எத்தனை பேர் கொலை வெறியோடு மீள போட்டு சந்தோஷப் பட்டிருக்கிறார்கள். 96 தேர்தலிலே தமிழ் நாட்டையே கலக்கிய கெட் அப் அல்லவா? சுரேஷ் கிருஷ்ணாவின் சிறந்தப் படைப்புகளில் ஒன்று. முதல் பாதி நகைச்சுவை பின்பாதி அதிரடி என சிறப்பாய் போகும். படத்தில் எதுவும் அவசியமின்றி எதுவும் இருக்காது. படத்தின் வேகத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடிய ரஜினி குஷ்பூ காதல் காட்சிகளை நகைச்சுவையாய் ஒரு சில காட்சிகளிலே சாமர்த்தியமாய் முடித்திருப்பார் இயக்குனர். அது எப்படி கல கலவென பேசும் அப்பாவித் தனத்தையும் பிறகு ஒரு சீரியசான முகத்தையும் இவரால் மட்டும் இத்தனை இலகுவாய் கொண்டு வர முடிகிறது. இந்த ரகசியத்தைப் பிடிக்கத்தானே பல வான்கோழிகள் சிறகு விரித்து ஆடுகின்றன. இதை எல்லாம் உணராதவர் போல பரத்தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா தன் படத்தை தானே கொலை செய்தது ம்ம்.

பாட்ஷா

Same Suresh krishna இப்போதெல்லாம் நிறைய நடிகர்கள் இந்தப் படப் பாதிப்பில் நடிப்பை மறந்து விட்டு கூட்டமாய் நடப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணாமலைக்கு சொன்னவை நிறைய இந்தப் படத்திற்கும் பொருந்தும். நிறைய பேரின் All time favourite இல் இந்தப் படம் கட்டாயம் இருக்கும். "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" காலத்தை வென்ற பஞ்ச். ரகுவரன்,ரஜினி compination இல் காட்சிகள் அசத்தல் ரகம். ரஜினியை தெரியாத ஒரு குழந்தை படத்தைப் பார்த்தால் அடுத்த நாள் அதன் வாயில் ஆட்டோக்காரன் பாடல்தான்.

முதல் பாகம் கிளாஸ் என்றால் இரண்டாம் பாகம் மாஸ் என்று நினைக்கிறேன். இவ்வாறான கலவையான ரசனைகள் ஒவ்வொருவருக்கும் தேவைதான். ரஜினி ஒரு சிறந்த பூரணமான நடிகர் இன்றைய பிறந்த நாளில் அவரிடம் ஒரே விண்ணப்பம்.
மசாலாவையும் தாண்டி அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் மசாலாப் படங்களிலேயே நடித்த அமிதாப் சூர்யவம்சத்துக்கு பிறகு தன் பாதையை மாற்றியது போல தலைவரிடம் இருந்தும் அவர் விருதுகளை வாங்கிக் குவிக்கும் அந்த அற்புதமான Second innings ஆரம்பிக்க வேண்டும்அவ்வளவே.

29 comments:

வந்தியத்தேவன் said...

இளமை ஊஞ்சலாடுகின்றதுவும் நல்ல படம். அண்ணாமலைக்க்குப் பின்னர் தான் ரஜனி அதிகம் டெம்ளேட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். நல்லதொரு பதிவு.

ROBOT said...

Here is my favorite list of Our Beloved Super Star Movies.

DRAMA:

ஜானி (potrayed 2 completely different roles & brilliant direction by legend Mahendran)
தர்மதுரை (தன்னால் சிரிக்க வைக்க மட்டும் அல்ல தன் நடிப்பால் அழ வைக்கவும் முடியும் என்று நிரூபித்த படம் )
உன் கண்ணில் நீர் வழிந்தால் - பாலு மகேந்திரா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு இயல்பான படம் (he played a police officer role)
முள்ளும் மலரும் (incredible performance)
ஆறிலிருந்து அறுபது வரை (வாழ்கையின் எதார்த்தத்தை பிரதிபலித்த படம் )

COMEDY:

தில்லு முள்ளு
குரு சிஷ்யன் (எப்போது பார்த்தாலும் சலிப்பதில்லை )
நினைத்தாலே இனிக்கும் (இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தை அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது )
நெற்றிக்கண் (Especially the father role)
தம்பிக்கு எந்த ஊரு

ACTION:

மூன்று முகம் (அலெக்ஸ் பாண்டியன் role)
பாஷா (Evergreen movie)
தளபதி
அண்ணாமலை (வெகுளியான முதல் பாதி ரஜினி, எரிமலையாகும் இரண்டாம் பாதி ரஜினி இரண்டையும் அருமையாக செய்திருப்பார் )
படையப்பா

and ………….. ...... போய் கொண்டே இருக்கும் இந்த பட்டியல்

தர்ஷன் said...

//ROBOT said...
and ………….. ...... போய் கொண்டே இருக்கும் இந்த பட்டியல்//

அதே அதேதான் ரோபோட்
சொல்லத் தொடங்கினால் தலைவரின் ஒவ்வொரு படங்களிலும் ஏதோ ஒன்று பிடித்திருக்கும்
சொல்லிக் கொண்டே போகலாம். பதிவு ரொம்பப் பாதித்து விட்டதோ சரி இன்னைக்கு ஒருநாள் தலைவருக்காக

தர்ஷன் said...

நன்றி வந்தி அண்ணா
இளமை ஊஞ்சலாடுகிறது ம்ம் அது உங்கள் தலைவர் படமில்லையா ( ச்சும்மா ஜோக்)

கனககோபி said...

அண்ணாமலை என்பது இரசிக்கக்கூடிய படம்....
அந்த அப்பாவிக் கதாபாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.
ரஜினியின் அந்த அப்பாவித்தனமாக நடிப்பம் அருமையாக இருக்கும்.

பாட்ஷாவில் அதிரடியும், ஆரம்பத்தில் பொறுமையான முகமும் அருமை.
நீங்கள் சொன்னதுபோல 'நான் ஒரு தடவை' சொன்னா என்பது காலத்தை வென்ற வசனம்....

அதே போல் தான் ரகுவரனைப் பார்த்து 'ஹேய் ஹேய்' என்று ரஜினி சொல்லும் பாங்கும் நன்றாக இருக்கும்....

ROBOT said...

//இன்னைக்கு ஒருநாள் தலைவருக்காக//
:)

டம்பி மேவீ said...

raittu....anne unga kitta irunthu niraiya yethirparkkiren ... continue

டம்பி மேவீ said...

appudiye namma blog pakkamum vanga thala

தர்ஷன் said...

ஆம் கோபி
இவையெல்லாம்தான் பலபேருக்கு இன்று கோமாளித்தனமாகத் தெரிகிறது. பாசில்,ப்ரியதர்ஷன்,லோகிதாஸ்(மீரா ஜாஸ்மின் புகழ்) போன்ற யதார்த்தமாய் படம் செய்யும் மலையாள இயக்குனர்கள் கூட இவரை சிலாகித்தே கருத்து சொல்லியுள்ளனர்.
அசோகமித்திரன் கூட ஒருமுறை நல்ல நடிகர் என்று சொல்லியதாக ஞாபகம், மகேந்திரனின் மூன்று படங்களில் இவர் ஹீரோ மூன்று முடிச்சு,நினைத்தாலே இனிக்கும் இரண்டிலும் கமலை விட இவருக்கு நல்ல பெயர். பிற்காலத்தில் வெறும் மசாலா படங்களுக்குள் தன்னை அடக்கி கொண்டார் என்பதற்காக இவரை கோமாளி ஆக்குவதைதான் ஜீரணிக்க முடியவில்லை.

தர்ஷன் said...

நன்றி டம்பி மேவி
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் உங்க பக்கம்தானே
கண்ணா தோ வாரேன்........

கிரி said...

நான் எதிர்பார்த்த படங்கள் எல்லாம் வந்து விட்டது! :-)

பாட்ஷா படம் பார்த்த பிறகே நான் ரஜினி ரசிகன் ஆனேன்! அதற்க்கு முன்னரே தளபதி எனக்கு ரொம்ப பிடித்த படம்..
பழைய ரஜினியை மீண்டும் காண வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. தர்ஷன் பதிவிற்கு நன்றி :-)

தர்ஷன் said...

அட அதுதான் உங்கள் வரலாறெல்லாம் உங்கள் தலைவர் தொடர்பான பதிவுகளில் தெளிவாய் சொல்லி இருக்கின்றீர்களே
நன்றி கிரி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப அருமை

எப்பூடி ... said...

சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்.

//மம்முட்டி,இளையராஜா,சந்தோஷ்சிவன்,மணிரத்னம் எனப் பெரும் படை. தலைவர் அதற்கு தளபதி//

சபாஸ்,எனக்கு தளபதிதான் All time favourite

வருண் said...

தர்ஷன்:

வலையுலகில் ரஜினி ரசிகர்களுக்கு பஞ்சமாக இருக்கும் நேரத்தில் உங்கள் வலைதளம் நல்ல "அடிசன்".

நீங்க செலெக்ட் பண்ணியிருக்க எல்லாப்படங்களுமே நல்ல படங்கள்தான். :-))

தர்ஷன் said...

நன்றி ஸ்டார்ஜன்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

நன்றி எப்பூடி
உங்கள் பதிவும் சூப்பர் நானெல்லாம் ஒருநாள்தான் நீங்கள்தான் தலைவருக்கென இந்த வாரத்தையே ஒதுக்கி விட்டீர்களே

நன்றி வருண்
யார் சொன்னது ரஜினிக்கு ரசிகர்கள் குறைவென்று
எல்லோரும் ரசிக்கின்றார்கள் ரகசியமாகவேனும்

சரவணகுமரன் said...

//இந்த ரகசியத்தைப் பிடிக்கத்தானே பல வான்கோழிகள் சிறகு விரித்து ஆடுகின்றன//

:-))

இராம்/Raam said...

அருமை.. :)

Anonymous said...

பிரமாதம்... நல்ல அனாலிசிஸ். உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியிருக்கும் படங்கள் எல்லாமே எனக்கும் பேவரைட்! அதிலும் நெற்றிக்கண் படத்தில் 'மாப்பிள்ளைக்கு' பாடலும் அதற்கு ரஜினியின் நடிப்பும் மறக்க முடியாதவை. தளபதி படத்தில் அவரது முக பாவங்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

முழுக்கவே ரசித்தேன் என்றாலும், நான் ரொம்ப ரசித்த உங்கள் வரிகள் கீழே ;

//இந்த ரகசியத்தைப் பிடிக்கத்தானே பல வான்கோழிகள் சிறகு விரித்து ஆடுகின்றன//

//முதல் பாகம் கிளாஸ் என்றால் இரண்டாம் பாகம் மாஸ் என்று நினைக்கிறேன்.//

//சின்ன சின்ன முகப்பாவனைகளால் மட்டும். இந்த நடிகரை சரியில்லை என்று சொல்பவர்கள் மேலும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.//

http://kgjawarlal.wordpress.com

அன்புடன் மலிக்கா said...

சூப்பர்

Anonymous said...

Ilamai Oonjalaadukirathu.... kai kodukkum kai.. Thambikku entha ooru.. the list goes on..

சிங்கக்குட்டி said...

இரண்டு பதிவுமே அருமையாக இருக்கிறது தர்ஷன்.

என் இடுகையை பதிவதற்கு முன் உங்கள் பதிவை படித்து இருந்தால், என் இடுகை தலைப்பை வேறு வைத்திருப்பேன், அதனால் என்ன நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்.

suki said...

good collection,
apart from these i loved raghavendra from thalaivar, its difficuilt for a action figure like thalaivar to do such a role .

u left one more film
engeyo ketta kural, class movie though a little slow, no one would choose such a character.

also 6 to 60 , which was done very earlier in his career

தர்ஷன் said...

நன்றி சரவணகுமாரன்
நன்றி ராம்
நன்றி ஜவஹர் உங்கள் எழுத்துக்களின் ரசிகன் நான்
நன்றி மலிக்கா
நன்றி சிங்கக்குட்டி உங்கள் பதிவு விரிவாகவும் தெளிவாகவும் இருந்தது

தர்ஷன் said...

நன்றி suki
உங்கள் தெரிவுகளும் அருமை
ஒரு உச்ச நட்சத்திரத்திற்கு தன மனைவி ஓடிப் போவதைப் போன்ற ஒரு பாத்திரத்தை ஏற்க துணிவிருந்திருக்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை சொல்லவே வேண்டாம். ரொம்பவும் முதிர்ந்தப் பாத்திரம் முதல் பாகத்தில் இம்மாதிரியான படங்களைப் போட்டதால் ரெண்டாம் பாகத்தில் கொஞ்சம் கலக்கல் படங்களைப் போட்டதில் விட்டு விட்டேன். இம்மாதிரி தேடும் போதுதான் தெரிகிறது ரஜினி எப்பேர்பட்ட நடிகன் என எனக்கு இன்னமும் நிறைய ஞாபகம் வருகிறது. அவள் அப்படித்தான், அவர்கள்,நினைத்தாலே இனிக்கும் இன்னும் பல

R.Gopi said...

ஸ்ரீதர்ஷன்....

நீங்கள் 10 படங்களை பட்டியலிட்டீர்கள்... நான் இங்கே 20 படங்களை பட்டியலிட்டு உள்ளேன்... 150 படங்களில் 20 படங்களே அடங்கவில்லை தலைவா...

நேரமிருப்பின் வந்து பாருங்கள்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 (இறுதி பாகம்) http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html

kavi arasan said...

பாஷவே hum படத்தின் தழுவல் தான்.அதில் அமிதாப் தம்பியாக(பாஷா படத்தில் வரும் போலீஸ் தம்பி ரோல் தான்.)நடித்திருந்தார் ரஜினி.நல்ல வேளை அமிதாப் பெயரையாவது பெருமையாகக் குறிப்பிடும் மரியாதை தெரிந்திருந்ததே நன்றி.

kavi arasan said...

எங்கே படிக்காதவன்,படையப்பா சிவாஜி முக்கிய வேடம் ஏற்றிருப்பதால் தவிர்த்து விட்டீர்களா?ரஜினியைத் துணை நடிகன் ஸ்தானத்திலிருந்து தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என்ற நிலை வரை கண்டும் பங்குகொண்டும் பூரித்த 30 வருடங்கள் தாண்டியும் நட்பின் மரியாதையின் சுவடுகளைத் தொடர விட்டுப்போன தந்தை போன்ற ஒரு நடிகரை இத்தனை சுலபத்தில் நீங்க மறந்தது தகாது.

kavi arasan said...

ரஜினி நாயகனாகவே நடிக்கட்டும்.இல்லாவிட்டால் சிவாஜியை குற்றம் பிடித்து நீங்கள் எழுதியது போல் ரஜினியையும் எழுதி விடுவார்கள்.black போன்ற,சீனி கம் போன்ற, முதல் மரியாதை போன்ற படங்களை உருவாக்கும் படைப்பாளிகளும் இல்லை.படிக்காதவன்,படையப்பா,தேவர் மகன்,தாவணிக்கனவுகள்,mohabatin போன்ற மூத்த கலைஞருடனான இணைப்புக்கும் இளைய தலைமுறையினரிடம் பெருந்தன்மை இல்லை.இன்றைய சூழலில் உள்ள வணிகப்போட்டியில் மரியாதை காணாமல் போகிறது.

Post a Comment

Related Posts with Thumbnails