Friday, December 18, 2009

சாகிர் கானுக்கு நன்றி


அன்றைய ராஜ் கொட்டி போட்டி அனுபவங்களை பாடமாகக் கொண்டு இன்றையப் போட்டியில் அபார வெற்றியை இலங்கைப் பெற்றுள்ளது. முன்வரிசையில் அபாரமாக டில்ஷான் ஆடியப் பின்னும் பின்னாலே பொறுப்பின்றி சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று அவ்விதம் செய்யாதது மகிழ்ச்சி.


என்னை கேட்டால் கிரிக்கெட் போட்டிகளில் களத் தடுப்பின் முக்கியம் உணரச் செய்த போட்டிகளில் ஒன்று இது. இலங்கை அணி களத் தடுப்பில் விட்ட சில குறைகள் களையப் பட்டிருந்தால் கணிசமான ஓட்ட எண்ணிக்கையை குறைத்திருக்க முடியும். இறுதி ஓவர்களில் இந்திய அணியின் விளாசல் அதனாலேயே நிகழ்ந்தது. இது போன்ற ஒரு அணி தன்னிடமிருந்தால் உலகக்கிண்ணம் வெல்வது பெரிதில்லை என்று இம்ரான் கான் சொன்ன இலங்கை அணியா இப்படி என்று என்னும் அளவில் களத் தடுப்பு இருப்பது கவலையளிக்கிறது.


அதே போல் விக்கேட்டுகளுக்கிடையிலான ஓட்டமும். வீரகளிடையே புரிந்துணர்வு குறைந்து வருகிறது. சரியான Communication இல்லை.

திலஷானின் ஆட்டம் அருமை. நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மெருகேறி வருவது உண்மை. அஞ்சலோ மாத்யூஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராகி விட்டார். எது எப்படியிருப்பினும் அடுத்த உலகக் கிண்ணத்திற்குள் அணியின் பின் வரிசையை வலுப்படுத்த வேண்டியது முக்கியம். ஒன்று மட்டும் தெளிவாக சொல்லாம் அடுத்த உலகக்கிண்ணம் இதே போன்ற ஆடுகளங்களில் நடைபெறும் பட்சத்தில் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு இவ்விரு அணிகளில் ஒன்றுக்கேஉண்டு.இறுதி வரை நகம் கடித்து விரலே புண்ணாக நெஞ்சம் பதைத்து பார்த்த போட்டியில் இறுதியில் சொதப்பி விடுவார்களோ என நினைத்த போது ஆபத்பாந்தவனாக காப்பாற்றிய இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் சாகிர் கானுக்கு ஞானி பாணியில் இலங்கை ரசிகர்கள் சார்பில் பூச்செண்டு இந்திய ரசிகர்கள் குட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

5 comments:

vaasudevan said...

yov

பூச்சரம் said...

Join
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
பூச்சரம் http://poosaram.tk/
Orchid http://www.orchidslk.co.nr/

இலங்கன் said...

//வீரகளிடையே புரிந்துணர்வு குறைந்து வருகிறது. சரியான Communication இல்லை.//

டில்சானும், கப்புகெதரவும் எப்புடி? இருவருக்கும் ஏதோ பிரச்சனையாம் ஆனால் நல்லா கதைச்சுத் தானே விளையாடினாங்க. டில்சான் கப்புகெதர பிரச்சனை பற்றி ஏதாவது தெரிந்தால் ப்ளீஸ் அடுத்த பதிவில் தாருங்கள்.

உண்மை உணர்வுகள். said...

not dilshan kapugedara. dilshan AND tharanga.

தர்ஷன் said...

நன்றி வாசுதேவன்
நன்றி இலங்கன்
உண்மை உணர்வுகள் சொல்லியிருப்பது போலத்தான் நானும் கேள்விப்பட்டேன் தரங்கவுக்கும் டில்ஷானுக்கும்தான் ஏதோ பிரச்சினையாம்

Post a Comment

Related Posts with Thumbnails