Monday, December 21, 2009

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்யலாம்

அப்படி இப்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்து விட்டது. சரத் பொன்சேகா பிடிக்கப் போனப் பிள்ளையார் குரங்காய் போய்விட்டது. வரும்போது பார்த்தேன் வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொன்றதாய் ராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்த பொன்சேகாவைத் தோற்கடிப்போம் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

போட்டி பிரதானமான இருவரிடையேத்தான் என்பது வெளிப்படையான நிலையிலும் 23 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். சிறிதுங்க ஜெயசூரியாவின் கட்சி,தோழர் விக்ரமபாஹு கருணாரத்னவின் புதிய இடதுசாரி முன்னணி என்பன தமது கொள்கைப் பரப்புக்காக தேர்தல்களில் போட்டியிடுவது வழமை என்ற போதும் மற்றவர்கள் யாரோ ஒருவருடைய நோக்கத்துக்காக வாக்குகளை பிரிக்கவென போட்டியிடுவதும் வழமை. அதிலும் மையோன் முஸ்தபாவை யார் எதற்காக களமிறக்கி இருக்கிறார், சிவாஜிலிங்கத்தின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் வெள்ளிடைமலை.தமிழரை அழித்தோருக்கு தமிழரின் வாக்குகள் செல்லக் கூடாது எனக் கூறும் சிவாஜிலிங்கத்தின் பிரதான இலக்கு அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல் எனக் கூறினால் நான் தமிழினத் துரோகியாகக் கணிக்கப் படுவேன். என்ன செய்வது அனைவரையும் துரோகி எனத் தூற்றி வீரம் பேசினால்தானே நாம் தமிழர். இப்போதே அடிப்பிடி ஆரம்பமாகி விட்டது அடுத்த பொதுத் தேர்தலில் TNA என ஒன்றிருக்குமா தெரியவில்லை. இவர்களளெல்லாம் யாரேனும் கம்பெடுத்து வாத்தி வேலை செய்தால்தானே ஒன்றாயிருக்கிறார்கள்.
ஒன்று அனைவரும் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்க வேண்டும் இல்லையா தொடர்ந்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவளிக்கும் தோழர் விக்ரபாகுவிற்கு ஆதரவளித்திருக்கலாம். அவருக்கு 8 சதவீதத்திற்கும் அதிகமாய் வாக்குகள் கிடைத்திருக்கும் பட்சத்தில் பிரதானமான இருவரும் 50 சதவீதம் வாக்குகளை பெறத் தவறி இருப்பார்.

நானும் பலவாறு யோசித்துப் பார்த்து விட்டேன் எப்படியும் அந்த ரெண்டு பேருக்கும் போட மனம் ஒப்பாது. சிவாஜிலிங்கத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிவதில் அதிலும் உடன்பாடில்லை. தோழர் விக்ரமபாகு என் தெரிவானப் போதும் அவருக்கு வாக்களித்து பிரயோசனமில்லை. பெரும்பாலும் செல்லுபடியற்றதென சொல்லப்படும் வாக்குகளில் என்னுடையதும்இருக்கலாம்.

5 comments:

Anonymous said...

irandu therivu iruppathaaka solkiraarkalee?onru sivaajikku,aduththathu m g r kku(athuthaan vikkikku)sari thaanee?

சந்ரு said...

தமிழன் என்று ஒற்றுமைப் பட்டான் . இதனை வைத்தே சிங்கள அரசுகள் தமிழனை ஆட்டிப்படைக்க நினைக்கின்றன.

தர்ஷன் said...

அந்தத் தெரிவுகளில் ஏதேனும் ஒன்றை ஆரம்பத்திலேயே தெரிவு செய்திருக்கலாம். இப்போது தமிழ் வாக்குகள் மேலும் பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனிமேல் அத்தெரிவுகளால் எந்தப் பயனும்இல்லை.

நன்றி சந்ரு
சந்ரு உங்கள் பெயரை இப்படி எழுதினால்தான் உங்களுக்கு பிடிக்கின்றது இல்லையா? ஒற்றுமையா அப்படின்னா? இதுவும் நல்லதுதான் பல அணிகளாக பிரிந்திருக்கையில் அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டுமென நிறைய அமைச்சுப் பதவிகள் கிடைக்கும். நமக்கு இனிமேல் நிறைய தமிழ் அமைச்சர்கள்

கலையரசன் said...

சமூக விழிப்புணர்வு கொண்ட இளைஞர் தர்ஷனுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டும்.

தர்ஷன் said...

ஏன் கலையரசன் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை
வருகைக்கு நன்றி நான் மிகவும் மதிக்கும் பயனுள்ள வகையில் மட்டும் பதிவிடுபவர் நீங்கள்,என்னைப் போல் மொக்கை எல்லாம் போடமாட்டீர்கள்.

Post a Comment

Related Posts with Thumbnails