சனி, 12 டிசம்பர், 2009

ரஜினி என் பார்வையில் சிறந்த 10 படங்கள்

ரஜினி


என்னதான் பதிவர்கள் வருத்தெடுத்தாலும் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. சினிமா பற்றிய தீவிரமான பிரக்ஞை இல்லாத காலத்தில் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் அப்பாவின் மடியிலமர்ந்து நான் திரைக்கூடங்களில் பார்த்த பல படங்களில் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கும் பல படங்கள் இவர் நடித்தது. என் தந்தை காலமான பின் தியேட்டர் சென்று படம் பார்க்கும் வழக்கம் குறைந்து போனாலும் நான் வளர்ந்து நண்பர்களோடு மீண்டும் திரையரங்குகளுக்கு செல்லும் காலம் வந்த போது(கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின்) பலரின் ஏகோபித்த தெரிவாக அதே பொலிவோடு அவரே திரையை நிறைத்திருந்தார்.

எல்லோரையும் போல ஆரம்ப காலக் கட்டங்களில் அவரது ஸ்டைல் நடிப்புக்கும் சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே நானும் ரசிகனாயிருந்தேன். இவரது படம் பார்த்து நண்பர்களுக்கு கதை சொல்வது அலாதியான சந்தோஷத்தை தருவதாக இருந்தது. சற்றே வளர்ந்து நடிகர்களின் உடல் மொழியையும் வசன வெளிப்படுத்துகையையும் ஊன்றி கவனிக்க தொடங்கிய காலத்திலும் ரஜினி எனக்கு ஒரு நல்ல நடிகராகவே காட்சி தந்தார்.

அப்படி அவர் நடிப்பால் என்னைக் கவர்ந்தப் பத்துப் படங்கள். படங்கள் வெளிவந்த கால வரிசைப்படி பிறகு தரத்தை வைத்து எல்லாம் தலைவர் படங்களை வரிசைப்படுத்த இயலுமா

மூன்று முடிச்சு


நம்பியார், P.S. வீரப்பா என் ரசிகர்கள் வில்லனைக் கண்டு பயந்திருந்த சந்தர்ப்பத்தில் மிக ஸ்டைலிஷாக குத்தல் பேச்சுக்களால் மூன்று முடிச்சில் ஸ்ரீதேவியையும் மிரட்டி ரசிகர் மனங்களை கொள்ளைக் கொண்ட முதல் வில்லன் இவராய்தானிருக்கும்.கொஞ்சம் வன்மம்,காமம்,பொறாமை,குற்றவுணர்வு,எப்போதாவது தலைதூக்கும் கொஞ்சமே கொஞ்சம் மனிதாபிமானம் எனக் கலவையான உணர்வுகளை கலந்துக் கட்டிஅடித்திருப்பார்


புவனா ஒரு கேள்விக்குறி


படமே நாம் எதிர்பார்க்காததுதான்
பிறகு பால் வடியும் முகமுடைய சிவகுமார் வில்லன் அதுவரை பெண்களை மிரட்டிய கருப்பு ரஜினி நல்லவர் படம் ஆரம்பிக்கும் போது ரஜினிதான் சிவகுமார் வேடம் செய்வதாக இருந்ததாம் அப்போது பெரிய நடிகரான சிவகுமார் சொன்னாராம் வில்லன் வேடமென்றால் இந்த மனுஷன் ஸ்கோர் செய்து விடுவார். அதை நான் செய்கிறேன் என. ஆனால் எல்லாம் எதிர்மாறாய் நடந்து விட்டது.

முள்ளும் மலரும்


இதுவும் தங்கைப் பாசத்தைப் பற்றிய படம்தான். ஆனால் பாசமலர் அபத்தங்கள் இதிலில்லை. இன்றளவும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரனின் படம். படம் வெளிவந்தக் காலத்தில் மகேந்திரன் சொன்னது ரஜினி அளவு இயல்பாக நடிக்கக் கூடிய நடிகர் இந்தியாவிலேயே கிடையாது. கையிழந்த ரஜினியை சரத்பாபு வேலையை விட்டு நிறுத்தும் போது கண் கலங்க குரல் பிசிற ஆனாலும் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் " ஒரு கையும் ஒரு காலும் இல்லனாலும் இந்த காளி பொழச்சுக்குவான் கெட்டப் பய சார் அவன்" என்பாரே இன்று ரஜினி வழியில் சூப்பர் ஸ்டார் ஆகிறோம் என்று சொல்லும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் இதைப் போல நடித்தால் ம்ம் வாய்ப்பிருப்பதாய் எனக்குப்படவில்லை

ஜானி


இதுவும் மகேந்திரன் படம்தான். ஆனால் முள்ளும் மலரும் போல் அல்லாமல் சில வர்த்தக சமரசங்கள் உண்டு. தன் தாய்க்காக சட்டத்துக்கு புறம்பாக,மனசாட்சிக்கு விரோதமாக காரியமாற்றும்,தன்னை ஒத்த ரசனைகளைக் கொண்ட ஸ்ரீதேவியை காதலிக்கும் மென்னுனர்வுகளைக் கொண்ட இளைஞன் ஜானியாகவும்
தனிமையில் உழலும், சுயநலம் மிகுந்த,கஞ்சத்தனமான, பெண்களை வெறுக்கும் வித்தியாசாகராகவும் தலைவர் இரு வேடங்களில் நுணுக்கமான வேறுபாடுகள் காட்டிநடித்திருப்பார்.
படத்தின் உச்சக்காட்சியில் ஸ்ரீதேவிக்கு தன் திருட்டுத் தனம் தெரியும் என்பதால் அவரை பார்க்கையில் வெட்கம் கலந்து சிரிப்போடு குனிந்துக் கொள்வார். ரிஷியில் சரத் இதை கொப்பி செய்ய முயன்றிருப்பார் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் வெறுத்துப்போய்விடும்.

தில்லு முல்லு


இந்தப் படம் பார்க்க பிரத்தியேகமான மனநிலை எல்லாம் தேவையில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் குதுகலம் ஒட்டிக் கொள்ளும். இன்று வரை வெளியான மிகச் சிறந்த காமெடி படங்களில் இதுவும் ஒன்று. வசனங்கள் படத்தின் பெரிய பலம் கூடவே தேங்காய் ஸ்ரீனிவாசன். தலைவரின் Dialogue delivery மிகச் சிறப்பாய் இருக்கும்.அங்கங்கே மிகை நடிப்பு எட்டிப் பார்த்தாலும் comedy படத்தில் அதை தவிர்க்க முடியாது பலதடவை சலிக்காமற் பார்க்கச் செய்யும் படம்


ஒரு ஐந்து இதோ இருக்கிறது டைப் செய்து முடித்து அடுத்த பதிவாக இன்னும் சற்று நேரத்தில் பாகம் ரெண்டு

34 கருத்துகள்:

உங்கள் தோழி கிருத்திகா சொன்னது…

ஏனுங்கோவ்வ்வ்....பாட்ஷாவை விட்டுடாதிங்க... :)

அன்புடன் மணிகண்டன் சொன்னது…

நல்ல தேர்வுகள் தர்ஷன்.. தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ROBOT சொன்னது…

நல்ல அலசல் . ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொல்லும் அறிவாளிகள் நீங்கள் மேலே கூறியிருக்கும் படங்களை பார்க்க வேண்டும் . உண்மையிலேயே அந்த முள்ளும் மலரும் படத்தில் வரும் கட்சி எவருமே செய்ய முடியாது . அந்த கட்சியில் உள்ளத்தில் இருக்கும் சோகத்தையும் மறைத்து கொண்டு ஒரு அசாத்திய தன்னம்பிக்கையை தன் நடிப்பில் காட்டியிருப்பார் . மேலும் ஜானி போன்ற ஒரு திரை படம் இனி வருமா என்பது கேள்விக்குறியே . தில்லு முள்ளு totally different genre. இவரால் காமெடி செய்ய முடியுமா என்று கேட்டவர்களை வாயடைக்க செய்த படம் . நீங்கள் கூறிய அனைத்து படமும் நான் மிகவும் ரசித்தவை . waiting for your second list .

கார்க்கிபவா சொன்னது…

சகா, அந்தப் படம்ன்னு கேட்கலாம். ஆனால் ரெண்டாவது பாகத்தையும் பார்த்துட்டுதான் சொல்ல முடியும்..

//ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொல்லும் அறிவாளிகள் நீங்கள் மேலே கூறியிருக்கும் படங்களை பார்க்க வேண்டு//

யாரும் ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொல்ல மாட்டார்கள். பாதை மாறிவிட்டாரே என்றுதான் சொல்வார்கள். பாருங்கள் இந்த ஐந்து படஙக்ளும் வெளிவந்து 25 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன.

அதுக்காக நானும் இப்படியான்னு கேட்காதிங்க. என்னைப் பொறுத்தவரை ரஜினியின் பெஸ்ட் அண்ணாமலை. ஏன்னா நானும் விசிலடிச்சான் குஞ்சுதான் :)))

தர்ஷன் சொன்னது…

//உங்கள் தோழி கிருத்திகா said...

ஏனுங்கோவ்வ்வ்....பாட்ஷாவை விட்டுடாதிங்க... :)//

பாட்ஷா விடுபடுமா கிருத்திகா அதையும்
மறக்காமல் வந்து பார்த்துடுங்க

//அன்புடன் மணிகண்டன் said...

நல்ல தேர்வுகள் தர்ஷன்.. தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..//

நன்றி மணிகண்டன் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

நன்றி ரோபோட் ஆனால் அதிமேதாவிகளுக்கு அதெல்லாம் தெரியாது

நன்றி சகா
அட அண்ணாமலை அது லிஸ்ட்டில் வருது சகா எனக்கும் ரொம்பப் பிடிக்கும் கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன்

கலையரசன் சொன்னது…

தலைவா படையப்பாவை விட்டுடாதீங்க! பாஷாவை 35 தடவை தியேட்டரிலேயே பார்த்திருக்கிறேன்!!

Unknown சொன்னது…

//தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. //
இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.
தலையாய நடிகர் இவர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று எதைவைத்துக் கூறுகிறீர்கள்?


//ஆனால் பாசமலர் அபத்தங்கள் இதிலில்லை. //
அபத்தங்கள் என்ற பதம் எதைச் சொல்ல வருகிறது என்று புரியவில்லை.

மாற்றுக் கருத்துக்கள் நிச்சயமாக உண்டு.

எனக்கு ரஜினியைப் பிடிக்காதென்றில்லை.
ஆனால் நடிகர் ரஜினியில் நான் இதைவிட வேறுவடிவான ஒருவரை எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் சொன்ன முள்ளும் மலரும் போல...

கார்க்கி என்பவர் மேலே சொன்ன கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுண்டு.

அதைவிட தமிழ்சினிமாவில் தவிர்க்க இயலாத ஓரிரு கதாநாயகர்களில் ஒருவரான ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

நீங்கள் பட்டியலிட்ட படங்கள் அருமை.

Bavan சொன்னது…

கண்ணா...சூப்பரு...:)
ரஜினி சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தர்ஷன் சொன்னது…

மன்னிக்கவும் கலையரசன்
படையப்பா எப்படியோ விடுபட்டு விட்டது மற்றும்படி நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்

நன்றி அக்பர்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

தர்ஷன் சொன்னது…

நன்றி பவன்

கூல் கோபி
ஆறுதலாக பேசலாம் தலையாய நடிகர் என்பது அவரது வர்த்தக மதிப்பு மற்றும் சக திரையுலகம் அவரக்கு தரும் முன்னுரிமை அவருக்கிருக்கும் ரசிகர் பலம் என்பவற்றின் அடிப்படையில் சொன்னது மற்றும்படி நடிப்புத் திறமையின் அடிப்படையில் அல்ல

உறவுகளுக்கிடையே நிஜத்தில் இல்லாத அபத்தமான மிகைப்படுத்தப்பட்ட போலியான காட்சியமைப்புகளின் மூலம் பாசம்,அன்பு,காதல் போன்ற இல்லாதவற்றை சோகம் பிழிய பிழிய சொல்லும் சகல இயக்குனர்களின் படங்களும் எனக்கு அபத்தம்தான். பழைய சிவாஜி படங்கள் இப்போது விக்ரமன்,பேரரசு படங்கள்

ROBOT சொன்னது…

திரு கார்க்கி ,

"யாரும் ரஜினிக்கு நடிக்க தெரியாது என்று சொல்ல மாட்டார்கள்." நான் அனைவரையும் சொல்ல வில்லை . இன்னும் சில அறிவு ஜீவிகள் அப்படி சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள்.

"பாதை மாறிவிட்டாரே என்றுதான் சொல்வார்கள். பாருங்கள் இந்த ஐந்து படஙக்ளும் வெளிவந்து 25 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன."

நீங்கள் சொல்வது 100 % சரி தான் . உங்களுக்கான பதிலை தலைவரே சொல்லிவிட்டார் ரசிகர்கள் சந்திப்பில் .

தலைவர் கூறியது :
"ஆரம்ப காலத்தில் நான் செய்த படங்கள் எல்லாம் classic movies தான் . எனக்கும் அப்படி பட்ட படங்கள் செய்ய தான் ஆசை . ஆனால் போக போக நீங்கள் சண்டை போட வேண்டும் என்றதால் அதை செய்தேன் . காமெடி வேண்டும் என்றீர்கள் அதையும் செய்தேன் . கடைசியில் இவை எல்லாம் வேண்டும் என்றீர்கள் ஒரே படத்தில் . இவை அனைத்தையும் நீங்கள் விரும்பிய வாரே கொடுக்கத்தான் அனைத்து படத்திலும் முயற்சி செய்கிறேன் . ஓரளவுக்கு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறன் " என்றார் .

ஒன்று இரண்டு அல்ல நூற்றுக்கும் மேற்பட்ட commercial படங்களை எந்த வித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க கூடிய அனைவரையும் மகிழ்விக்கும் படங்களை கொடுத்திருக்கிறார் . இது தான் அவரின்வெற்றி . இப்போதுள்ள நடிகர்கள் commercial படங்களை கொடுக்க முயற்சி செய்தால் இரண்டு படங்களுக்குள் ஒரு பெரிய மொக்கை படத்தை கொடுக்கின்றனர் .

Unknown சொன்னது…

//உறவுகளுக்கிடையே நிஜத்தில் இல்லாத அபத்தமான மிகைப்படுத்தப்பட்ட போலியான காட்சியமைப்புகளின் மூலம் பாசம்,அன்பு,காதல் போன்ற இல்லாதவற்றை சோகம் பிழிய பிழிய சொல்லும் சகல இயக்குனர்களின் படங்களும் எனக்கு அபத்தம்தான். பழைய சிவாஜி படங்கள் இப்போது விக்ரமன்,பேரரசு படங்கள்//

நான் கோபப்படவில்லை...

ஆனால் நீங்கள் சிவாஜியின் படங்களை இங்கே குறிப்பிட்டிருப்பது மேலும் கருத்தாடலுக்கு வழிவகுக்கிறது.

சிவாஜி கணேசனின் காலம் வேறுபாடானது.
நாடக அமைப்புள்ள படங்கள் மட்டுமே வெளிவந்த காலம் அது.
அந்தக் காலகட்டத்தில் அந்த நடிப்புத் தான் தேவைப்பட்டது.

அதனால் தான் இன்னும் சிவாஜியை நடிப்புலகில் திலகமாகக் கருதுகிறார்கள்.

அதை விவரிப்பதற்கு அபத்தம் என்ற சொல் மிக மிக அதிகமானது.

அதைத் தவிர ஒருவரின் பிறந்ததினத்தில் அவரைப் பற்றிய விவாதங்கள், அவர் சிறந்தவரா இல்லையா என்பன ஒழுக்கத்திற்கு முரணானவை.

ஆனால் சில கருத்துக்களைக் கூறும்போது 'எனது கருத்தில்' அல்லது 'எனது பார்வையில்' என்ற பதங்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

எனது கருத்தில் தமிழ் சினிமாவில் தலையாய நடிகர் என்ற பதம் இருந்திருந்தால் எதுவுமே பிரச்சினையாக இருந்திருக்காது.

அதைத்தவிர பாசமலர் குறித்து நீங்கள் தெரிவித்த கருத்தை முழுமையாக மறுக்கிறேன்.

அதைத் தவிர எனக்கு எந்த மனஸ்தாபமும் கிடையாது.

swizram சொன்னது…

நீங்க சொல்லிருக்க படம் எல்லாம் நான் பிறக்குறதுக்கு முன்னாடி வந்தது...
உண்மையா சொல்லணும் னா ரஜினி சாருக்கு என் தாத்தா வயசு...
அங்கிள் னு சொன்னேனேனு சந்தோஷப்படணும்...

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையான தேர்வுகள் நண்பரே..

Vivikthan சொன்னது…

ஒரு துறையில் சிறந்து விழங்குவதும், அதே துறையில் பிரபலமடைந்திருப்பதும் இரு வேறு விடயங்கள். ரஜினி அவர்கள் தலையாய நடிகர் என்பதிலும் பார்க்க தமிழ்சினிமாவின் பிரபலமான நடிகர் என்ற பதத்திற்குத்தான் மிகப் பொருத்தமானவர் என்பது எனது கருத்து.
தலையாய நடிகர் என்பது வர்த்தக மதிப்பையெல்லாம் தாண்டி நடிப்பில் பாண்டித்தியம் பெற்ற, இனிவரும் நடிகர்களுக்கெல்லாம் ஓர் நடிப்புப் பல்கலைக்கழகமாக திகழும் கலைஞானி கமல் போன்றவர்களுக்குத்தான் பொருத்தம்.

தர்ஷன் சொன்னது…

கோபி

அதே சிவாஜி காலகட்டத்தில் வந்த இலங்கையின் சிங்களப் படங்களை அல்லது திலிப்குமார் நடித்த ஹிந்திப் படங்களை பார்த்திருக்கீர்களா?
எங்கேயும் அழுது குளறி கன்னச் சதை எல்லாம் ஆட்டி தம்மையும் நம்மையும் ஒரு சேர வருத்தியிருக்கின்றனரா?
அது அபத்தம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை
ஜெயமோகன் சிவாஜி, எம்ஜியார் பற்றி எழுதியது வாசித்திருக்கிறீர்களா? அவரது இணையத்தளத்தில் இப்போது இல்லை எங்கேனும் தேடிப்பாருங்கள் கிடைக்கலாம்

suppose எழுபதுகளின் இறுதியில் கமலும் ரஜினியும் திரைக்கு வரவில்லையெனில் அதே சிவாஜி பாணியை கையாண்ட ஜெயஷங்கர்,முத்துராமன்,சிவகுமார் போன்றோர் சினியுலகை எங்கே கொண்டு சென்றிருப்பார்.

அற்புதமாக கமலும் ரஜினியும் ஆரம்பித்த அந்த பணி பிறகு AVM போன்ற முதலாளிகளின் கூட்டோடு இவர்களாலேயே தகர்க்கப் பட்டது வேதனையான விஷயமே.

தர்ஷன் சொன்னது…

நன்றி சரவணகுமார் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

நன்றி விவிக்தன்
சரி கமல் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர், ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரம் திருப்திதானே

நன்றி ரசிக்கும் சீமாட்டி
நான் கூட பிறக்கும் முன்னாள் வந்த படங்கள்தான் அவை ஆனால் அதை பார்க்கும் போது இவ்விடைவெளியை என்னால் உணர முடியவில்லை இன்னமும் அவர் எனக்கு என் கால சக வாலிபனாகவே தெரிகிறார்.(திரையில்)

கிரி சொன்னது…

தர்ஷன் அருமையான தொகுப்பு! இந்த படங்களை எந்த விதத்திலும் வரிசை படுத்த முடியாது ..அந்த அளவிற்கு சிறப்பான படங்கள்.

தர்ஷன் சொன்னது…

நன்றி கிரி
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல படங்களை தேர்வு செய்தது ரொம்ப அருமை

சரவணகுமரன் சொன்னது…

சூப்பரு...

M.Thevesh சொன்னது…

தர்சன் அருமையான தொகுப்பு.சிவாஜியின் படங்கள்
எல்லாமே மிகை நடிப்புத்தான்.எதுவும் அளவுக்கு மேல் போனால் ரசிக்கமுடியாது என்பது என் அபிப்பிராயம்.நான் விரும்பிப்பார்த்த படங்களில்
ரஜனி படமே ஜாஸ்தி.

Vivikthan சொன்னது…

ஆமாம் தர்சன். //கமல் தமிழ் சினிமாவின் தலையாய நடிகர், ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரம்//

இதுமிகவும் சரியான அதேவேளை நடுநிலையான கூற்று. ரஜினி மற்றும் கமல் அவர்களின் பெயருக்கு முன்னாலுள்ள பட்டங்களும் (சூப்பர் ஸ்டார், கலைஞானி) இதைத்தான் சொல்கின்றன...

என்னைப்பொறுத்தவரையில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். அதேசமயம் ஒருவரின் இடத்திற்கு நிச்சயமாக வரவும் முடியாது.

நடிகர் என்றால் அது கமல் அவர்கள் தான். பிரபலம் என்றால் அது ரஜினி அவர்கள் மட்டும்தான்!

சிங்கக்குட்டி சொன்னது…

அருமையான பதிவு, கலக்கல் படங்கள்.

வாழ்த்துக்கள் நண்பா :-)

தர்ஷன் சொன்னது…

நன்றி ஷ்டார்ஜன்
நன்றி தேவேஷ்
நன்றி சரவணகுமாரன்
நன்றி சிங்கக்குட்டி

Prasanna சொன்னது…

முள்ளும் மலரும் படத்தில் ரஜினியை தவிர வேறு யாரும் அவ்வளவு இயல்பாக நடித்த்திருக்க முடியாது.. அவர் நடிப்பின் உச்சம் என்று அதை சொல்லலாம் (என் கருத்து).. அவர் ரஜினிகாந்த் என்று படம் ஆரம்பத்திலேயே மறந்து விடும்.. அற்புதம்..
சிறந்த தொகுப்பு :)

kumar சொன்னது…

vanakkam,
kamal padangal pannatha sathanaiyae illai avar rajiniyaivida eppothum mass+claas

பெயரில்லா சொன்னது…

Ηello! I know this iѕ somewhat off topіc but I was wonderіng whiсh blog platform aгe you using for thіs websitе?
I'm getting fed up of Wordpress because I've had problems with hacκers and I'm looking at alternatives for another platform. I would be great if you could point me in the direction of a good platform.

My weblog :: weight loss hcg

பெயரில்லா சொன்னது…

Thanκ you for the goοd ωгitеup.
It in fаct wаs a amusement account it.

Look aԁvanсed to far аԁded agreeable from уou!

Bу the ωay, how could we communicatе?


Му web-site ... hcg diet results

இமயமும் இளைய தலைமுறையும் சொன்னது…

சிவாஜியை அபத்தம் என்று கூறும் அறிவுஜீவிகள் 1967,1972 லேயே பதினாறு வயதினிலே படத்தையும் வாழ்வே மாயம் படத்தையும் எடுத்திருப்பீங்க போல.திலீப் குமார் சிறந்த நடிகர். ஆலயமணி படத்தை ரீமேக் செய்து நடித்திருக்கிறார்.சஞ்சீவ் குமார் நவராத்திரி படத்தை ரீமேக் பண்ணி இருக்கார்.அமிதாப் கூட சங்கர்குரு கன்னட படத்தின் இந்திப்பதிப்பில் நடித்திருக்கிறார்.தமிழில் திரிசூலம் அது.கமலுக்கும் ரஜினிக்கும் ஏன் சிவாஜிக்கும் நடிப்பைக் கற்றுக் கொடுத்தது பாரதிராஜா.1967 ல் நீங்க சினிமாவில் இருந்திருந்தா நீங்க சிவாஜியையே தேவையில்லாத ஆணியா புடுங்கி இருப்பிங்களா?உங்க ரஜினியே படையப்பா வரை சிவாஜி வரும் காட்சிகளில் வாய் மூடித் தான் இருந்தார்.அது தான் family audience கான வணிக உத்தி.அமிதாப் ஐ காப்பியடித்து தமிழிலும் அமிதாப் பெருந்தன்மையால் அந்தா கானூன் மூலம் இந்தியிலும் கல்லா கட்ட தொடங்கியும் இருந்த ரஜினி இந்து வரை அமிதாபிற்கு நன்றி மறவாமல் தான் இருக்கிறார்.கோச்சடயான் கூட eklavya 2007 கோப்பி தாங்கோ என்ன ஒன்னு இது அனிமேஷன் படம்.அண்ணன் தம்பி அமெரிக்க மாப்பிள்ளை வேடங்களே இந்தியில் அவருக்கு கொடுக்கப்பட்டன என்பதை மறக்காதீர்கள்.தமிழகம் அவருக்கு நிறைய கொடுத்திருக்குது.தமிழர்களுடன் ரஜினியும் கொண்டாடிய சிவாஜியை அபத்தம் என தரக்குறைவாக விமர்சித்து குற்றம் சாட்டி ரஜினிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது ரசிகர்களுக்கு அழகல்ல.

இமயமும் இளைய தலைமுறையும் சொன்னது…

சிவாஜிக்கு என்னவோ நடிக்கவே தெரியாம நடிச்ச மாதிரியும் நீங்க பீல்ட்ல இருந்திருந்தா போ தம்பி வீட்ல யாராச்சும் பெரியவங்க இருந்தா கூட்டிக்கிட்டு வா அப்டின்னு சொன்னவங்க மாதிரியும் பேசறது நீங்க மட்டும் இல்ல.பல பேர் பேசி கேட்டு இருக்கேன்.தமிழ் சினிமாவின் no 1 ஆக தன்னை உயர்த்திக்கொண்ட வணிக மன்னன் ரஜினி ரசிகர்கள் வியாபாரம் அறிமாமல் பேசுவது வேடிக்கை.

இமயமும் இளைய தலைமுறையும் சொன்னது…

ரஜினியே கூட தர்மதுரையில் அழாத அழுகையை தியாகியில் அழுதிருப்பார்.நோ டென்ஷன் அப்டின்னு பப்பி-லஹரி போட்ட இந்திப்பாட்டவது கேட்டு இருக்கிங்களா?ரஜினி நாயகனாக நடித்த ஒன்றிரண்டு படங்களில் அதுவும் ஒன்று.

இமயமும் இளைய தலைமுறையும் சொன்னது…

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அங்கு கட்டில் அமைந்ததடா வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்பச்சக்கரம் சுற்றுதடா அதில் அவர் சக்கரவர்த்தியடா!எப்போ சீர்திருத்த படங்கள்ல நடிக்கணும்?எப்போ சிவன் வேஷம் போடணும்?எப்போ cid சகுந்தலாவோட ஆடனும் எப்போ இருவர் உள்ளத்தை oncemore ஆக மாத்தணும்னு தெரிஞ்சி வெச்சிக்கிட்டு தைரியமா பண்ண சிவாஜியைப்போல் இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவில் முதல் மரியாதை பெற முடியாது.அப்படி ஒரு சூழ்நிலை இருந்தா black, cheeni kum போன்ற படங்களில் நடிக்கத்தொடங்கி விடுவார்.இந்த வயதிலும் சிறந்த நடிகர் விருது வாங்கும் தன emperor பிக் பி யைப்போல probably கிங்(ரஜினி சொன்னது தான்) ரஜினியும் செய்யத் தொடங்கி விடுவார்.தனக்குள் இருக்கும் நல்ல நடிகனை வெளிக்கொணர முடியாதது அவரது துரதிர்ஷ்டமே.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails