எங்கள் ஊரில் தேர்த் திருவிழா மிகப் பிரசித்தம்.
திருவிழா ஆரம்பமானால் அன்றாடம் மகேஸ்வர பூஜை முடிய நடைபெறும் அன்னதானத்தின் போது நம்மவர்கள் டார்வினின் survival of fittest ஐப் பரீட்சித்துப் பார்ப்பது தனிச்சிறப்பு.
ஊரில் திருவிழா என்றால் ஒரு மாதம் பிள்ளைகள் பள்ளிப் பக்கமே செல்ல மாட்டார்கள்.( அட எதுக்கு போகணும் அதான் சாமி பார்த்துக்குமில்லசரணாகதி தத்துவமாம்)
இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் நம் மாகாண தமிழ் கல்வி அமைச்சர் தான் பதவியேற்றவுடன் செய்த பெரிய சாதனையாக நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வாங்கி கொடுத்ததை பற்றி நாளேடுகளில் அறிக்கை விட்டிருந்தார். (இன்னும் என்னெல்லாம் சாதிப்பாரோ)
இலங்கையில் வேறெங்கும் சென்று மாத்தளைக்காரர் என்றால் கோயில் பற்றித்தான் விசாரிப்பார்.
ஒரு மாதத்திற்கு முன் ஆரம்பித்த திருவிழாவின் உச்சக்கட்டமான தேர் பவனி நேற்று ஆரம்பித்து நான் இதை பதிவிடும் இக்கணம் வரை விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அட இதே ஊரில் இருந்து போகல்லேன்னா எப்படி என்று நானும் நேற்றிரவு கொஞ்ச நேரம் போனேன் எதையாவது பார்த்து எழுதி பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்ற நப்பாசைதான்.
பெருசா எதுவும் தேறவில்லை
சரி பார்த்து ரசிக்க சில படங்கள்
கடைசியாக ஒன்று காலம் காலமாகவே நம்ம ஊர் ஆன்மிகம்பால் ஆழ்ந்த பற்றுக் கொண்டது அட ஆமாங்க ஒரு காலத்தில் தமிழ்நாட்டையே கலக்கிய சுவாமி பிரேமானந்தா நம்மூர் காரர்தான் இங்கே ஆசிரமம் வைத்திருந்தவர் சிங்களவன் புண்ணியத்தில் 83 வன்செயலோடு தமிழகம் ஓடி விட்டார்
12 கருத்துகள்:
அதிக வேலைகள் காரணமாக தேர்த் திருவிழாவுக்கு வரமுடியவில்லை. இருந்தாலும் காலைப்பொழுது முதலே அங்கிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமும் நண்பர்கள் தேர் பவனி பற்றி அறியத்தந்த வண்ணமும் இருந்தனர்.
2007 ஆம் ஆண்டு எமது மாணவர்களுடன் தான் கடைசியாக மாத்தளை ஆலயத்துக்கு வந்தேன்.
படங்களுக்கு நன்றி.
ஆலயத்தைப் பற்றிய தலவரலாறு சுவையானது. அதன் பழைமை பற்றி இனிவரும் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்.
நன்றி நிர்ஷன்
அடுத்து எழுதும் பதிவுகளில் தல வரலாறு பற்றி எழுதுகிறேன் உங்களுக்காக
அடுத்த முறை திருவிழாவுக்கு வாருங்கள் இங்கு ஒரு நண்பன் இருக்கும் நம்பிக்கையோடு
நல்லா இருக்கே... எங்க ஊர் மாரியம்மன் தேரை நினைவு படுத்திட்டீங்க.....
அப்படியா மகேஷ்,
பழைய ஞாபகாங்கள் எப்பவும் மகிழ்வை தருவதுதானே
சார், தேர்த்திருவிழா படங்கள் சூப்பர்..நல்லா இருக்கு..முந்தி மாசத்துக்கு ஒருக்காலாவது வருவம்..ஏனோ தெரியேல்ல, புதுசா கோபுரம் கட்டின பிறகு ஒருக்கா தான் வந்ததா ஞாபகம்...சின்ன வயசுல எனக்கு கண் பார்வையில பிரச்சினை வந்த பொது மாத்தளை அம்மனுக்கு தான் கண் சாத்தின்னாங்கள்..பழைய ஞாபகங்கள் சார்..refresh செஞ்சதுக்கு நன்றிகள்!
ம்ம்ம் நிச்சயமாக. அழைப்புக்கு நன்றி.
உங்களைப்போன்ற ஆசிரிய நண்பர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். திருவிழா அடுத்த வருடத்தில் தானே? அதற்கு முன் வருகிறேன். உங்களைச் சந்திக்க.
வாங்க தியாகி
உங்களின் சுயவிபரம் பார்த்தேன் பெருமளவு என்னோடு ஒத்துப் போகிறது.
welcome nirshan
லேட்டா வந்திட்டேன்.ஓகே பராவாயில்லை இரண்டு முறை தேர் திருவிழா பார்க்க வந்திருந்தேன். பட்ங்களுக்கு நன்றி, ஆனால் ஆலயம் பற்றிய வரலாறு அவ்வளவாக தெரியாது.
நானும் வந்திருந்தேன்...
அற்புதமான படங்கள்..
வாழ்த்துகள்...
ஐயோ..இப்ப தான் உங்கட பதில கண்டன் சார்..லேட்டா வந்ததுக்கு சாரி..பெருமளவு ஒத்துப் போகுதா?? சந்தோசம்!! எங்கட அப்பா மாத்தளை எண்டு சொன்னனானா? O/L வரைக்கும் St.Thomas' ல தான் படிச்சவர்.. :)
ஆஹா படங்களைப் பார்க்க ஆசையா இருக்கு. பகல் நேரத்தில எடுத்திருந்தால் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என zoom பண்ணித் தேடியிருப்பனே. மாத்தளை அம்மன் திருவிழா என்றாலே ஞாபகம் வாற மல்லிகைப்பூச்சரம் பட்டுப்பாவாடை அன்னதானச் சோறு புத்தகக்கண்காட்சி இப்பிடி எல்லாத்தையும் மிஸ் பண்றன். நன்றி பகிர்ந்து கொண்டதுக்கு.
கருத்துரையிடுக