வெள்ளி, 13 நவம்பர், 2009

காதல் தோல்வியை கடப்பது எப்படி


Teen age இல் சகஜம்தான் காதல் தோல்விகளும் அதன் பின் அடுத்த காதல் வரை தாடி,கவிதை,இத்யாதி இத்யாதிகளும் ஆனால் ஏழு கழுதை வயசாகி பொறுப்பான தொழிலில் இருப்போரும் இம்மாதிரியான அபத்தங்களில் விழுவதைத்தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இப்படித்தான் என் நண்பனும் பெரியார் வழியில் சுயமரியாதைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டவன். திடீரென

" ஏன் மச்சான் சாமி கும்பிடுற புள்ளைய Love பண்ணினாலும் பிரச்சினை இல்லை, சின்ன சின்ன முரண்பாடுகள் இருப்பதுதான் காதலுக்கு அழகு, நினைச்சு பாரு நாம அவளுக்காகவே கோயில் போக அங்கே அவள் அடம் பிடித்து நமக்கு விபூதி பூசினால் உனக்காகத்தான் பூசிக்கிறேன் என்று நாம் சொல்லும் போது கடவுள் இருக்கிறாரோ இல்லையோ காதல் இருக்குமில்லையா?

என கதை விடும் போதே சந்தேகப் பட்டேன் பய எங்கயோ மாட்டப் போகிறான் என அப்படியே அதை உறுதிப் படுத்தும் விதமாய் காதல் வந்து விட்டதாய் புலம்ப ஆரம்பித்தான். காதலை சொல்ல முன்னமே வீடு கட்டுவது தொடங்கி குழந்தைகளுக்கு Bed time stories சொல்வதாக எல்லாம் ஏகப்பட்ட கற்பனை. சாப்பாட்டுத் தட்டில் என்னய்யா தெரியப் போகிறது சோத்தை பிசைஞ்சு வைத்து தட்டைப் பார்த்து தனியே சிரிக்கிறான். வேணாம்டா confirm பண்ணிட்டு கனவு காணு என சொன்னப் பின் இதோ கேட்டு விட்டு வந்தவன் கேட்ட நாள் முதல் பேயறைந்தவன் போல

எனக்கும் சங்கடமாய்தான் இருந்தது. பதின்ம பருவக் காதலை விட இதில் ஆபத்து அதிகம் என நினைக்கிறேன். எப்போதும் தன் வேலையில் busy ஆகா இருப்பவன் தன் தனிமைக்கு துணை தேடியே காதலில் விழுகிறான். ஓரளவு மன முதிர்ச்சியும் பொறுப்பும் இருப்பதால் கண்டிப்பாய் நடக்கும் என நம்புகிறான். கனவு காண்கிறான். ஆகவே அந்த நிராகரிப்பு அதிகம் வலியை ஏற்படுத்தி விடுகிறது. காதல் என்ற ஒன்று உண்டோ இல்லையோ நம்மை ஒருவர் நிராகரிக்கின்றார்கள் என்பதும் ஏகாந்தமான கணங்களை தனக்குள் சிரித்து அனுபவிக்கச் செய்த கனவுகளை இனி துறந்து விட வேண்டுமென்பதும் நிச்சயம் வலி மிக்கதாய்தான் இருக்க வேண்டும்.

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பனுக்கு அவன் அவலத்தை அழகாய் ஓரிரு வார்த்தைகளில் சொல்ல நினைத்து கீழ் கண்ட கவிதை(!!!!!) எழுதினேன். அலங்கோலமாய் போய்விட்டது. இருந்தாலும் பரவாயில்லை வாசித்துப் பாருங்களேன்.



நினைத்தே பார்க்கவில்லை
சில நொடிகளே நீடித்த
உன் தலையாட்டல்
யுகம் யுகமாய் என்னை
துரத்துமென

முன்பும் தனிமைதான்
எனக்கு துணை
ஆனால் இப்போது மட்டும்
ஏன் இத்தனை வெறுமை
இந்த தீராத் தனிமையில்

திருப்தியுற்றிருப்பாய்
மறுக்கப்பட்டவன் மலர்ந்த
முகத்துடன் பேசுவதால்
அறிவாயா
சிறு புன்னைகையால் நான்
புதைத்து விட்ட
கருகிப் போன என் கனவுகளை

பார்வையாலே காதல் கற்றுத்
தந்தவளே
சொல்லித் தரக் கூடாதா
நிராகரிப்பின் பின்னரான
இரவுகளை தாங்கும் உத்தியை

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

//எப்போதும் தன் வேலையில் busy ஆகா இருப்பவன் தன் தனிமைக்கு துணை தேடியே காதலில் விழுகிறான். //

100% உண்மையானது...
இங்கில்லாதது அங்கு கிடைக்கும் என்று நம்பியே செல்கிறார்கள்...

நண்பருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை சீச்சீ.. எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து விடுங்கள்... :P

தர்ஷன் சொன்னது…

ம்ம் சொல்லி விடுகிறேன்
நன்றி கோபி வருகைக்கு, நல்ல ஹாஷ்ய உணர்வு உங்களுக்கு உண்டென்பதை உங்கள் பதிவுகள் வாயிலாக அறிந்துள்ளேன். தொடர்ந்தும் ஆதரவு தாருங்களேன்

நிரூஜா சொன்னது…

இதுக்கு தான் சொல்லுறது பள்ளிக்கூடத்தில படிக்கேக்க நீளந்தாண்டிறது உயரம் தாண்டிறது எல்லாம் பழகி வச்சிருகோணுமெண்டு.
உது எவ்வளவு உயரமானதோ ஆழமானதோ அகலமானதோ அவரவருக்கு தான் தெரியும். இருந்தாலும் ஒருவழியா தாண்டிடலாம்.

தர்ஷன் சொன்னது…

நன்றி நிரூஜா
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் நண்பனை நாளையிலிருந்து Ground க்கு கூட்டிப் போக வேண்டியதுதான்

Newman சொன்னது…

அருமையான கவிதை

தர்ஷன் சொன்னது…

Thanks Nellai pilot

மன்னார் அமுதன் சொன்னது…

கவிதை அருமையாக உள்ளது தர்சன்

தர்ஷன் சொன்னது…

நன்றி அமுதன்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்
தொடர்ந்தும் ஆதரவு தாருங்களேன்

Unknown சொன்னது…

anna kavithai nanrga ulladhu........
mannikkavum indha kavidhaiyai sutu vittaen.....:-)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails