முதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று
முரளியின் திறமை மங்கி விட்டதாக கருத்துரைத்தார் சிவராமகிருஷ்ணன். முரளி சாதித்திருப்பவையோடு ஒப்பிட்டால் இவரெல்லாம் ஒரு சுழற் பந்துவீச்சாளராக என்ன செய்திருக்கிறாரோ தெரியவில்லை.
2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)
97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.
எல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.
ஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்களை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.
2 கருத்துகள்:
அரவிந்த பற்றி நீங்கள் சொல்வது முற்றுமுழுதாக சரி...
தோற்றுக் கொண்டிருந்த ஒரு அணியில் இருந்துகொண்டு அரவிநத் சாதித்தவை ஏராளம்.
அரவிந்தவை இதுவரை உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக மதிக்கிறார்கள். (விக்கிப்பீடியாவும் கிட்டத்தட்ட இதே கருத்தை சொல்கிறது.)
மஹெலவை விட சங்கா முக்கியத்துவம் பெறக்காரணம் மஹேலவை விட சங்காவிடம் consistency என்று சொல்லும் தொடர்ச்சித் தன்மைஅதிகம். குறிப்பாக அஹேலவின் ஒருநாள் போட்டிகள் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லாததைப் போன்ற உணர்வு.
ஓட்டங்கள் பெற்றால் தொடர்ந்து பெறவார், பெறாவிட்டால் தொடர்ந்து பெறமாட்டார்.. இது தான் மஹேல....
அத்தோடு இலக்குக் காப்பாளராக சங்கா இருப்பதும் ஒரு காரணம்...
ஆனால் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன ஆங்கிலம் தான் முதற்காரணம் என்று நம்புகிறேன்.
பார்ப்போம் நாளை என்ன நடக்கிறது என்று.
சிவராமகிருஷ்ணனை விடுங்கள்... முரளி என்ற மாபேரும் வீரரின் சரித்திரம் ஒருபோட்டியோடு முடியப்போவதில்லை...
ம்...
அரசியல் பக்கம் சூடு பிடிக்கப்போகுது...
பாப்பம் என்ன நடக்குது எண்டு....
ஆம் நீங்கள் சொன்னது உண்மைதான் கோபி
consistency என்பது பொதுவாகவே இலங்கை வீரர்களின் ஓட்டக் குவிப்பில் இல்லாத ஒரு அம்சம் . Sachin,Dravid,Ponting இவர்களோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால்
கருத்துரையிடுக