சனி, 14 நவம்பர், 2009

டார்வினிஸம் பொய்யா


இன்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது யாத்திரிகனின் இந்த பதிவை காண நேர்ந்தது. பதிவின் நோக்கம் எனக்கு தெளிவாகவில்லையெனினும் அது இயற்கை தேர்வுக் கொள்கையை நிராகரித்து சிறப்பு படைப்புக் கொள்கையே சரி எனும் பாங்கில் அமைந்திருந்தது. மு. மயூரன் அவரின் நோக்கை சரியாய் அறிந்து தர வேண்டிய விதத்தில் சிறப்பான பின்னூட்டங்களை வழங்கி இருந்தார்.
ஏதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் டார்வினிஸம் பற்றி யாத்திரிகனின் சந்தேகங்களுடன் தொடர்பு படுத்திக் கதைக்கலாம் என நினைக்கிறேன்.

முதலாவது டார்வின் தனது கொள்கையை மிகப் பலவீனமான அடித்தளத்திலே கட்டியமைத்தார் என்று கூறுகிறார். அது ஓரளவு உண்மைதான் Theory of natural selection ஐ விளக்குகையில் அங்கிகள் மிகையாய் உற்பத்தி ஆகின்றன என்றும் அவ்வாறு மிகையாய் உற்பத்தியான அங்கிகளிடையே மாறல்கள் உண்டென்பதும் மாத்திரமே அவர் அவதானங்களின் வாயிலாக கண்டறிந்த உண்மைகள். மிச்சமெல்லாம் அந்த அவதானங்களின் அடிப்படையில் அவர் கட்டியெழுப்பிய அனுமானங்கள். இத்தனை ஏன் அந்த மாறல்கள் எப்படி ஏற்பட்டன எப்படி அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை கூட அவரால் விளக்க முடியவில்லை.ஆனாலும் இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் இன்னும் வலுவிழக்காது இருப்பதும் அவரால் விளக்கமளிக்கப்படாமற் போனவை இன்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுமிருப்பது அவரின் மேதமையைதான் விளக்குகின்றதே அன்றி வேறில்லை.

முதல் உயிரின் தோற்றம் பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை Harun yahya வாயிலாக கேட்டிருக்கீர்கள். முதல் உயிரி கடவுளால் படைக்கப்பட்டு பின் கூர்ப்பு நடைப்பெற்றது என டார்வின் சொல்லியிருந்தால் கேள்வியின்றி கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். Origin of species இன் ஏதோ ஒரு பதிப்பில் டார்வினும் படைப்போன் என்ற ஒரு வார்த்தையை பாவித்தார் வேறெதற்கு மதவாதிகளை சமாளிக்கத்தான். பின் அதை நினைத்து புலம்பியது தனிக்கதை. சரி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்
முதல் உயிரியின் தோற்றம் பற்றிய Oparin இன் உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கையை stanley miller உம் Urey உம் ஆய்வு கூடத்தில் செய்த பரிசோதனையின் மூலம்( NH3, CH4, H2O, H2 வாயுக்களை கொண்ட வாயு அறையில் உயர் மின்னழுத்தம் மூலம் சக்தியை வழங்கி Amino acids,ribose வெல்லங்கள், Adenin போன்றவற்றை தொகுத்தது) 1950 களிலேயே உலகுக்கு காட்டி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று Orgel வெகு அண்மையில் 6 அங்குல Nucleotide ஐயே தொகுத்து காட்டி விட்டார். so உங்கள் முதல் வாதம் அடிப்பட்டு போகிறது.



அடுத்தது பரம்பரை இயல்புகள் கடத்தப்படுவது பற்றி. நண்பரே டார்வினால் இயல்புகள் கடத்தப்படுவது பற்றி விளக்கமளிக்க முடியவில்லை என்பது உண்மையே. எனினும் பலர் அது தொடர்பில் ஆய்வுகளை செய்த வண்ணமே இருந்தனர். August Weismann 34 சந்ததிகளுக்கு எலிகளின் வாலை வெட்டி செய்தபரிசோதனை பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆக சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படுவது மரபணுக்களின் மூலமே மரபணுக்களில் ஏற்படும் மாறல்கள் மட்டுமே கடத்தப்படும் புறத்தோற்ற மாறல்கள் கடத்தப்படாது என சான்றுகளோடு கூறிய மெண்டல் டார்வின் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளாரா இல்லை அதை தகர்த்துள்ளாரா. அடுத்து மிகையாய் உற்பத்தியான அங்கிகளுக்கிடையே மாறல்கள் எவ்வாறு உருவாகின்றன என அவர் அறிந்திராத போதும் பின் வந்தவர்களால் விகாரம்(Mutation) பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டது.

அடுத்து Survival of the fittest ஐ வைத்துக் கொண்டு சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்த முற்படும் அதிகார வர்க்கத்தின் சதிதான் டார்வினை தூக்கிப் பிடிப்பது என்று சொன்ன போதுதான் உங்கள் சமூகப் பிரக்ஞை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இதையே இப்படிப் பார்க்கும் நீங்கள் எஜமானனாக வெள்ளையனும் அடிமையாக கருப்பனும் ஆண்டவானேலேயே படைக்கப்பட்டனர் என்றும் பிரம்மா தன் உடல் பாகங்களில் இருந்து சதுர் வர்ணங்களையும் படைத்தான் தலையில் உதித்தவனுக்கு மற்றவனெல்லாம் சேவகம் செய்ய வேண்டுமெனவும் சொல்லி சொல்லியே வயிறு வளர்க்கும் வீணர் கூட்டத்தை அல்லவா ஒரு பிடி பிடித்திருக்க வேண்டும்.

அப்புறம் கடைசியாக ஒரு விடயம் Science இல மாற்றம் என்பதே மாறாத விடயம். 1000 வருடங்களுக்கு முந்திய Holy Bible ஐயோ குரானையோ வேதங்களையோ தூக்கிப் பிடிக்க இது ஒன்றும் மனிதனை அடிமைப் படுத்த வந்த அஞ்ஞானம் அல்ல. எப்படி நியுட்டனின் இயக்க விதிகளால் சகல இயக்கங்களையும் விளக்க முடியாத போது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு அவசியப்பட்டதோ அது போல தொடரும் கண்டுப்பிடிப்புகள் விஞ்ஞானத்தை வலுப்படுத்துமே அன்றி அதை நீர்த்துப் போகச் செய்யாது.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

A very good view. I liked it.
Please continue the good work.
Thanks,
Selva.

தர்ஷன் சொன்னது…

Thanks selva

Muruganandan M.K. சொன்னது…

தெளிவான விளக்கம் நன்றி

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

good post really nice

தர்ஷன் சொன்னது…

நன்றி டாக்டர்
ஈழத்தின் முக்கிய பதிவரான உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியளிக்கிறது.

நன்றி கிருஷ்ணா
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

மு. மயூரன் சொன்னது…

மிகவும் நன்றி தர்ஷன். அருமையான பதில்.

தர்ஷன் சொன்னது…

நன்றி மயூரன்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

Unknown சொன்னது…

//இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று Orgel வெகு அண்மையில் 6 அங்குல Nucleotide ஐயே தொகுத்து காட்டி விட்டார். so உங்கள் முதல் வாதம் அடிப்பட்டு போகிறது.//

இதற்கான ஆதாரத்தையும் உங்களுடைய ரேபிறேன்சையும் தர முடியுமா?

ஷஹி சொன்னது…

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை தர்ஷன்..ஆனால் பதிவு நல்ல முறையில் எழுதப்பட்டு உள்ளது..

செல்வராஜா மதுரகன் சொன்னது…

இன்றுதான் இந்தப்பதிவைப் படித்தேன்... எனக்கு முழு உடன்பாடு அத்துடன்.. எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறோம் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும் அவர்கள் கவனம் யாரை எதிர்க்கிறோம் என்பதில் உள்ளது... இதனால்தான் இதுவரைக்கும் மதத்தினை காப்பாற்ற எண்ணுபவர்கள் பார்ப்பனர்களை காப்பாற்றி தங்களையும் அடகு வைத்து விடுகிறார்கள்... அதைவிட சைவ சித்தாந்தம் உயிரின் தோற்றம் பற்றி என்ன கூறுகிறது என்று அறிந்தீர்களா??

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails