புதன், 9 டிசம்பர், 2009

தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு பாகம் 2

ஏலவே எழுதிய தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு இன் பாகம் இரண்டு மேலுள்ள இணைப்பை அழுத்தி கொஞ்சம் அங்கேயும் போய் பாருங்கள்.

5. Angelina Jolie


ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள் பார்த்திருக்கிறீர்களா? அஞ்சலினா ஜூலியின் உதடுகள் அதை ஒத்தவை(ம்ம் ....). வீடியோ கேம் பாத்திரம் லாரா க்ரோப்ட் ஆக இவர் சாகசம் செய்யும் Tomb raider, தனது கணவர் பிரட் பிட்டுடன் நடித்த Mr & Mrs Smith, Beowulf,Wanted போன்ற படங்கள் ரசித்துப் பார்க்கக் கூடிய ரகம் இல்லை என்றாலும் ஜூலி க்காகப் பார்க்கலாம்.
அழகு மட்டுமில்லை மிகுந்த திறமையும் கொண்டவர். ஒரு முறை சிறந்த துணை நடிகைக்கான அகாடமி அவார்டும் பெற்றுள்ளார்.
அதையும் விட குறிப்பிட்டாக வேண்டிய விடயம் அவரது தாராள மனம். உடனே படத்தில் அவரது கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு போக வேண்டாம். நான் சொன்னது நிஜமாகவே அவரது நல்ல மனதை UNHCR இன் நல்லெண்ணத் தூதுவராக உலகளாவிய அளவில் செய்யும் சேவைகளுக்காகவும் அறியப்படுகிறார்.


4. Katrina Kaif



பெரும்பாலும் என் லிஸ்ட்டில் உள்ள ஒரே Latest figure இவராய்த்தான் இருக்கும். மிகுந்த தயக்கத்துடன் சல்மான்கான் என் பதிவைப் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கையின் பின்தான் இவரைச் சேர்த்தேன். பார்க்க கொஞ்சம் கூட இந்திய சாயல் இருக்காது. காஷ்மீரித் தந்தைக்கும் பிரித்தானிய தாய்க்கும் பிறந்தவர். என்னதான் சல்மானை இவருக்கு பிடித்திருந்தாலும் எனக்கேதோ இவர் அக்ஷய் குமாருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் படுகிறது. விக்ரம்தான் இவரை நீண்ட நாட்களாக தமிழுக்கு அழைத்து வரப்போவதாக சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ம்ம் ஆனால் விஜய் அதிஷ்டக்காரர் குறைந்தபட்சம் கோகோகோலா விளம்பரத்திலாவது சேர்ந்து நடித்து விட்டார்தானே .


3.Madhuri Dixit


நான் என் ச்ச்ச்சின்ன வயதில் ITN தொலைக்காட்சியில் போடும் ஹிந்தி படங்களை பார்க்கத் தொடங்கிய காலத்தில் நிறைய படங்களில் இவர் அல்லது ஜூஹி சாவ்லாதான் இருப்பார்கள். ஜுஹியை எனக்கு பிடிக்கவே பிடிக்காது so இவர்தான் என் choice. இவர் அணில்கபூரோடு நடித்த படங்களில் எல்லாம் எங்கள் கமல்- ஸ்ரீதேவி போல ஒரு அன்னியோன்னியம் இருக்கும். தேவலோக மங்கையர் என்றெல்லாம் சொல்வோமல்லவா அதற்கு நிகரான ஒரு அழகு இவரிடம் உண்டு. ஓவியர் ஹுசைனும் என் கருத்தோடு உடன்படுவார் என நினைக்கிறேன். நாயகன் படத்தின் ஹிந்தி பதிப்பு பார்த்திருக்கீர்களா? வினோத் கண்ணாவுக்கு கமல் மேல் ஏதும் கோபமா எனத் தெரியவில்லை கிட்டத் தட்ட அந்தப் பாத்திரத்தை கொலை செய்திருப்பார். இருப்பினும் நாயகனில் கமல் செய்யாத ஒரு காட்சி இந்த படத்திலுண்டு(ஆனால் கமலோடு தொடர்புடையது). இந்தக் காட்சியில் மட்டும் மாதுரி டிக்சித்தொடு ஒன்றி நடித்திருப்பார். பார்த்தால் உங்களுக்கும் மாதுரியைப் பிடிக்கும். இன்னுமொன்று வினோத் கன்னாவுடன் இப்படி எல்லாம் நடித்து விட்டு பின் அவரது மகன் அக்ஷய் கன்னாவுடனும் ஜோடியாக நடித்தார்.


2. Monica Bellucci



சில அழகான நடிகைகள் ஆரம்பத்தில் மிகுந்த பிரமிப்பைக் கொடுத்திருந்தாலும் அவர்களை ஏதேனும் படங்களில் Topless ஆக பார்த்து விட்டால் அவர் மீதான ஆச்சரியம் அடங்கி விடும். Sean penn உடன் jennifer Lopez நடித்த U turn படத்தில் கண்ணிமைக்கும் நேரத்திற்கு அப்படி வந்த பின்னே எனக்கு Jennifer Lopez ஐயே பிடிக்காமல் போய் விட்டது.
ஆனால் பல படங்களில் இப்படி பலான பலான மாதிரி பார்த்த பின்னும் அலுக்காதவர் Monica Bellucci இத்தாலிய நடிகை.
Matrix என்றில்லை பொதுவாகவே Keanu reeves இன் Action படங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி Speed உட்பட. அதை விட Clive Oven இவரது Shoot em up படத்தை பார்ப்பதும் ஒன்றுதான் ஐந்து விஜய் படங்கள் பார்ப்பதும் ஒன்றுதான். அப்படியிருந்தும் அந்த படங்களை Fast foward செய்து செய்து சிலக் காட்சிகளையேனும் பார்த்திருக்கிறேன் என்றால் அது மோனிக்கா பெல்லுச்சிக்காக மட்டுமே. இதையெல்லாம் விட கொடுமை இவர் நடித்த சில இத்தாலி மற்றும் பிரெஞ்சு படங்களை வேறு பார்த்து தொலைத்திருக்கிறேன். அந்த வகையில் Malena குறிப்பிடத் தக்க ஒரு படைப்பு. நான் படத்தை பார்க்க முனைந்தது வேறு நோக்கத்துடன் என்றாலும் ஈற்றில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியும் இருந்தது. Asterix and cleopatra Chanel Eye இல் அவ்வப்போது போடுவார்கள் இதை அவருக்காக மட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் மனநிலையோடு என் பிரியத்துக்குரிய அந்த காமிக்ஸ் கதாநாயகர்களுக்காகவும் பார்த்தேன். சிம்பு இவரை தமிழில் நடிக்க கூட்டி வருகிறேன் என்றார். பார்ப்போம் நடக்கின்றதா என்று. இவர் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான Agnostic எனத் தன்னை அறிவித்துக் கொண்டவர். இத்தனை அழகை கடவுளால்தான் படைக்க முடியுமென்றால் பேசாமல்கடவுளை நம்பி விடலாம் எனத்தான் தோன்றுகிறது.



1. Meena



என்னிடம் ஒரு கெட்டப் பழக்கம். சில விடயங்கள் மனதுக்கு பிடித்து விட்டால் அது மாறுவதேயில்லை. பொதுவாக பத்து பதினொரு வயதுகளில் நமக்கு நடிகைகள் மேல் ஈர்ப்பு இருப்பதில்லை. அது Sigmund frued சொன்ன பாலியல் மறைநிலை பருவம் என்பதால் இருக்கலாம். அதிலருந்து மெல்ல நான் பதின்ம வயதுகளுக்குள் பிரவேசித்த போது என்னை கவர்ந்தவர் இவர்தான். அந்தக் கண்கள், ஹோம்லியான தோற்றம், அத்தோடு இருந்த ஏதோ சொல்ல முடியாத கவர்ச்சி இதெல்லாவற்றையும் விட அந்நேரம் வந்த தலைவர் படங்களில் இவர்தான் கதாநாயகி என்பனவெல்லாம் இவர் பிடித்துப் போகக் காரணங்கள். இன்று வரை மீள முடியவில்லை இவர் விழி வீச்சில் இருந்து. இப்போதெல்லாம் பரவாயில்லை முன்பெல்லாம் பத்திரிகைகளில் இவர் தொடர்பான கிசு கிசுக்கள் கண்டாலோ அல்லது இவர் கவர்ச்சியாய் நடித்திருக்கிறார் என்று செய்தி படித்தாலோ கஷ்டமாய் போய்விடும். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விடயம்தான் ஒரு நடிகை மேல் ஏன் இத்தனை Possessive ஆக இருக்கின்றோம் என்பது.
நிச்சயம் திறமையான நடிகைதான் ஆனால் நடிப்பதை விடவும் குழந்தைத்தனமாக பேசி ஒரு கவர்ச்சிப் பதுமையாக வலம் வருவதில் மாத்திரமே திருப்தி அடைந்து விட்டார். ரிதம் படத்தில் இவர் பாத்திரமும் நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்பக் கால சேரன் படங்களிலும்.

11 கருத்துகள்:

அமர பாரதி சொன்னது…

என்ன ஒரு ரசனைய்யா!!! அப்படியே என் மனசுல இருக்கறத படிக்கற மாதிரியே இருந்துச்சு. அருமையான பதிவு.

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அருமையான பதிவு.----

maruthamooran சொன்னது…

////அதையும் விட குறிப்பிட்டாக வேண்டிய விடயம் அவரது தாராள மனம். உடனே படத்தில் அவரது கழுத்துக்கு கீழே பார்வையை கொண்டு போக வேண்டாம். நான் சொன்னது நிஜமாகவே அவரது நல்ல மனதை UNHCR இன் நல்லெண்ணத் தூதுவராக உலகளாவிய அளவில் செய்யும் சேவைகளுக்காகவும் அறியப்படுகிறார்.////

ஹஹஹஹஹ….அஞ்சலினா ஜூலி குறித்த விளக்கம் அருமை

தர்ஷன் சொன்னது…

//அமர பாரதி said...

என்ன ஒரு ரசனைய்யா!!! அப்படியே என் மனசுல இருக்கறத படிக்கற மாதிரியே இருந்துச்சு. அருமையான பதிவு.//

பல பேரின் இரசனை இப்படித்தான் இருக்கும்
நன்றி அமுத பாரதி

//ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான பதிவு.---//

அருமையான பதிவா எனை வைத்து காமெடி கீமடி பண்ணலையே

//மருதமூரான். said...

ஹஹஹஹஹ….அஞ்சலினா ஜூலி குறித்த விளக்கம் அருமை//

நன்றி மருதமூரான் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

ilangan சொன்னது…

அருமையான பதிவு. அக்கா த்ரிஸாவையும் பரிந்துரைக்கிறேன்.

Unknown சொன்னது…

என்ன ஒரு பதிவு... உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே குடுக்கலாம்..,

தர்ஷன் சொன்னது…

//ilangan said...

அருமையான பதிவு. அக்கா த்ரிஸாவையும் பரிந்துரைக்கிறேன்.//

நன்றி இலங்கன் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்


//பேநா மூடி said...

என்ன ஒரு பதிவு... உங்களுக்கு ஒரு டாக்டர் பட்டமே குடுக்கலாம்..,//

நன்றி பேநாமூடி வருகை,பின்னூட்டம் மற்றும் டாக்டர் பட்டத்திற்கும்

ப்ரியன் சொன்னது…

சிறீதேவி எங்க.. காணலயே

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுடைய பதிவைப் படித்தேன்... நீங்கள் குறிப்பிட்டுள்ள malena, shoot em up போன்ற படங்களை நான் பார்த்ததில்லை... புகைப்படங்களில் பார்க்கும்போது மோனிகா அழகாகவே இருக்கிறார்... அவர் அழகிதான்... ஆனால் கிளியோபாட்ரா உடையலங்காரம், கண்ணுக்கு தீட்டப்பட்ட கண்மை இவை அவருக்கு பொருந்தாது போல தோன்றுகிறது...

பை தி வே... ஏஞ்செலினா ஜோலியிருந்து மீனா வரை மாறுபடும் உங்க ரசனை வியப்புக்குரியது...

தர்ஷன் சொன்னது…

கரெக்ட் ஆ சொன்ன மேன் என்னா பார்க்குறே உன் profile picture பார்த்தா இப்படித்தான் பேசத் தோணுது

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிலது கொஞ்சம் அடிவாங்கியிருக்க மாதிரி தெரியுதே? நான் படத்த சொன்னேன்...... ரொம்ம்ம்ப பழைய பிரிண்ட்டோ......?

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails