திங்கள், 7 டிசம்பர், 2009
என்னை ஏமாற்றாத சாரு
இலங்கையர்களுக்கு இப்போதெல்லாம் இதைத் தவிர்த்தால் பேச எதுவுமே இல்லை போலும். அந்த அளவிற்கு அனைத்து தரப்பினரிடையேயும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது. இந்தியத் தலைவர்களை பார்த்து கூல் செய்ய முயன்றிருக்கிறார் ஜெனரல் பொன்சேகா. இங்கே இன்று மகிந்த எஸ்பியின் வீட்டுக்கு போயிருப்பது கட்சித் தாவலொன்றுக்கான அறிகுறிகளை காட்டியிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அரசு எதிர்பாராத பல அதிரடிகள் அடுத்த வாரம் அரங்கேறும் எனக் கூறியிருப்பது நிஜமா அல்லது புலி வருது கதையா என்பது இனிதான் தெரியும்.
புலி வருது என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது. எந்த புலியும் வராமலே மாவீரர் தினம் நடந்து முடிந்திருக்கிறது. தமிழக பத்திரிகைகள் இனி வேறு விதமான உளவுத் தகவல்கள் தர வேண்டியதுதான். அவர்கள் வியாபாரத்திற்கு சீமான் பக்கப்பலமிருப்பார் என நம்புகிறேன். சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தலைவர் பெயர் வைத்தாராம். என்ன கொடுமை சீமான் இதெல்லாம்? தயவு செய்து மக்களின் உணர்வுகளை இப்படி மலினப் படுத்தி ஆதாயம் தேடாதீர்கள். திராவிடம் பேசும் மஞ்சள் துண்டு தலைவர்கள், தலித்துக்களுக்காக முழங்கிய சிறுத்தைகள் என பலரையும் நம்பி ஏமாந்த பின் இவர்.
மஞ்சள் துண்டுத் தலைவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெறப் போகிறாராம். பெரும்பாலான தனது இலக்குகளை எட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ம்ம் ஒரு மகன் மத்திய அரசில் அமைச்சர், மகள் எதிர்காலத்தில் அமைச்சராக வாய்ப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர், ஒரு மகனை தமிழக மக்களுக்கென தாரை வார்த்தாகி விட்டது, மருமகனின் பிள்ளைகள் இந்தியாவின் முக்கிய புள்ளிகள் ஆமாம் இதெல்லாம் ticket இல்லாமல் train ஏறி வரும் போதே Plan பண்ணி வந்ததா? இல்லை பிற்காலத்தில் உண்டானா ஆசையால் விளைந்ததா?
"அளவுக்கதிகமா ஆசை படுற ஆம்பிள்ளை நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை" என்றார் தலைவர். மண்ணாசை,பொன்னாசை கூட பரவாயில்லை பெண்ணாசையால் நொந்து நூடுல்ஸ் ஆன காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள். கருவறையில் பெண்களுடன்ஆபாசமாக இருந்ததோடு அதை செல்போனில் படமெடுத்து பிறகு பார்த்து ரசித்திருக்கிறார். பொதுவாகவே நம்ம சாமிகளுக்கு கொஞ்சம் கிளு கிளு உணர்வு ஜாஸ்திதான். புராணக் கதைகளை படியிங்களேன் Straight தொடங்கி incest வரையான பலான கதைகள் ஏராளம். என்ன சொல்லி என்ன இனி மேலும் நம் பெண்கள் சாமி புள்ளை வரம் கொடு என்று யாரேனும் ஒரு சாமி பின் போகத்தான் போகின்றார்கள்.
நான் சொன்ன ஒரு விடயம் பலித்திருக்கிறது. "பா" பாடல்கள் பற்றிய என் பதிவில் நிச்சயம் இந்த இசையை சாரு மட்டம் தட்டி எழுதுவார் என எழுதியிருந்தது பலித்தே விட்டது( ஆமா இதை ஊகிக்க பெரிய தீர்க்கதரிசனம் எல்லாம் வேணுமாக்கும்). ஆனால் நானே எதிர்பார்த்திராத ஆச்சரியம் அவரது நேற்றைய பதிவில். கிட்டத் தட்ட ஒரு நல்ல சிறுகதையின் முடிவில் வரும் Twist ஐப் போல. நந்தலாலாவில் இளையராஜாவின் இசை அவருக்கு ஆச்சரியமோ இல்லையோ அவர் பதிவை வாசித்த போதோ எனக்கு பெரும் ஆச்சரியம். இளையராஜா தவிர்ந்து சாருவின் ரசனையில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. அதனடிப்படையில் ஏலவே மிஷ்கினில் கொண்டிருந்த நம்பிக்கையை அதிகப்படுத்தி முதலில்கமலும் இப்போது சாருவும் படம் பார்க்கும் ஆவலை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
ஓம் ஓம்....
மஞ்சட்துண்டுக்கு விடையளிப்பாம்....
நடக்கட்டும் நடக்கட்டும்....
கோபம் எண்டு பெராம் என? உத வைக்கிறதுக்கு 4 வயசுப் பிள்ளைக்கே தெரியுமே? என்ன கொடுமை சரவணா இது.....
நந்தலாலா படத்த மிஷ்கின் மேல உள்ள நம்பிக்கையால வந்ததும் பாக்கிறது எண்டு முடிவெடுத்திருக்கிறன்.....
பாப்பம்......
நன்றி கோபி,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
நல்ல கோர்வை.. நல்ல கலவை..
கருத்துரையிடுக