செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஏமாற்றமளித்த கிரிக்கெட் போட்டி


அப்படி இப்படி பெரும் ஏமாற்றங்களுடன் ஒரு போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. சங்கக்காரவின் இலங்கை சாதனைக்குரிய மிக வேகமான சதம், தில்ஷானின் இரட்டைச் சதம்,குறைந்தபட்சம் வெற்றி என எதிர்பார்த்த எதுவுமே நிறைவேற வில்லை.

தம்பி சொன்னான் கம்ப்யூட்டரில் கிரிக்கெட் கேம் விளையாடுவது போல சேவ் செய்து விட்ட இடத்திலருந்து விளையாடினால் எப்படி இருக்கும். நன்றாய்த்தான் இருக்கும். டில்ஷான் ஆட்டமிழந்தவுடன் Undo செய்யச் சொல்கிறான். சரி பரவாயில்லை போராடித்தானே தோற்றோம் என அவனைச் சமாதானம் செய்வது பெரும்பாடாய் போய்விட்டது.
எனக்கு இன்னும் புரியவில்லை இந்தியாவில் ஆடுகளங்களை எதற்காக தயார் செய்கிறார்கள் என

3 கருத்துகள்:

திருவாரூர் சரவணா சொன்னது…

//எனக்கு இன்னும் புரியவில்லை இந்தியாவில் ஆடுகளங்களை எதற்காக தயார் செய்கிறார்கள் என //
அது புரியாமத்தான் நாங்களும் பல வருஷமா கேட்டுகிட்டே இருக்கோம்.

Unknown சொன்னது…

இலங்கை அணி வெல்லும் அளவிற்கு வந்ததால் நாம் எம்குரலை உயர்த்திச் சொல்கிறோம், 'இவ்வாறான ஆடுகளங்கள் கிறிக்கெற்றைக் கொல்கின்றன...' 'இந்தியக் கிறிக்கெற் சபை திருந்த வேண்டும்'

இலங்கை கிட்டவாக சென்றிராவிட்டால் நாம் இதைச் சொன்னால் வயிறெரிவு, இயலாமை என்பார்கள்...
இப்போது நாம் சொல்லலாம்...

தர்ஷன் சொன்னது…

நன்றி சரண்
பார்த்தீர்கள்தானே இங்கு இப்படி அடித்தாடி விட்டு பின் வேகமான ஆடுகளங்களில் முக்க வேண்டியதுதான்

நன்றி கோபி
இலங்கை துடுப்பெடுத்தாடத் துவங்கும் பொது ஒரு கௌரவமான ஓட்ட எண்ணிக்கை பெற்றால் போதும் எனத்தான் நினைத்தேன். ஆனால் பிறகு ஒரு நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.ப்ச் அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்வோம்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails