புதன், 23 டிசம்பர், 2009
பின் வரிசை மாணவனின் புலம்பல்
எனது வகுப்பில் எனக்கு மிகுந்த தொல்லைக் கொடுப்பவர்கள். எழுத்தே அறியாமல் இப்போது யாரையும் Fail பண்ணுவதில்லை என்ற நடைமுறையால் வகுப்பேற்றப்பட்டு இடைநிலை வகுப்புகளில் இருந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் இடைஞ்சலாய் இருப்பவர்கள். எழுத்தே தெரியாதவனுக்கு என்னவென்று விஞ்ஞானம் படிப்பிப்பது. இருந்த போதிலும் பரிதாபமாய் இருக்கும். மிகுதி உள்ள மாணவர்களை பாதிக்கும் என்பதால் எனக்கு அவர்களுக்கு எழுத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில் ஆரம்ப வகுப்புகளில் Primary Teachers என்ன செய்தார்களோ தெரியாது. அவர்களிடம் கேட்டால் மலையக சூழலை காரணம் காட்டி தப்பித்துக் கொள்கின்றனர். ஆசிரியப் பயிற்சியில் Education psychology எல்லாம் இதற்குத்தானே ஐயா கற்ப்பிக்கிறார்கள். ம்ம் அப்படி ஒரு மாணவனின் ஆதங்கத்தை சில வரிகளில் சொல்ல நினைத்தேன். கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன்.
பின் வரிசை மாணவன் நான்
கைகலப்புகளின் போது
மட்டும் கையுயர்த்தும்
காகிதக் கப்பல் செய்யவே
பேப்பர் எடுக்கும்
மேசையில் கிறுக்க மட்டும்
பேனா தொடும்
உங்கள் கவனம் பெறத்தான்
எத்தனை போராட்டங்கள்
ஆனாலும்
உங்களுக்கு பிடித்ததென்னவோ
எனக்கு சற்றும் பிடிக்காத
அந்த முன்வரிசை
அதிமேதாவிகளைத்தான்
மூக்கொழுகும்
என்னைப் பார்த்து
அசூயையுடன் ஒதுங்கினீர்களே
மன்னியுங்கள்
மற்றவனை எள்ளும்
உங்கள் நாசுக்கும் நாகரிகமும்
எனக்கின்னும் கைவரவில்லை
"அ" கூடவா தெரியவில்லை
அடுத்தமுறை அடிக்க
கை ஓங்க முன்
ஒருகணம் யோசியுங்கள்
எனக்கு எழுத்தறிவிக்கா
உங்களுக்கு என்ன
தண்டனை தரலாம்
நம்பக் கடினமாய் இருந்தாலும் ஒரு தகவல் மேல உள்ளப் படத்தில் இருப்போர் தம் பள்ளிப் பருவத்தில் Dyslexia வால் பாதிக்கப் பட்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
14 கருத்துகள்:
ஆம் ஒழுங்கான கற்பித்தலால் யாரையும் வழிப்படுத்தலாம்..
விழிப்புணர்வான கவிதை
இந்தப்படமும் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு
TAARE ZAMEEN PAR(http://video.google.com/videoplay?docid=-3729838552367533505&ei=QeYxS634MoGuwgPmzIWBDw&q=taare+zameen+par+full+movie&hl=en#)
நன்றி பவன்
உண்மை இம்மாதிரியான படம் ஒன்று தமிழில் வந்திருந்தால் நம் ஆசிரியர்கள் பல பேர் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். சிரச டிவியில் அடிக்கடி ஒளிபரப்புகின்றனர். தமிழ் subtitle உடன் ஏதேனும் தொலைக்காட்சி ஒளிபரப்பினால்நல்லது.
முதற்தடவை
நன்றி அஸ்பர் உங்கள் முதல் வருகைக்கு
வகுப்பு என்பது பலதரப்பட்ட மாணவர்களின் சங்கமம்.. ஆசிரியர்கள் பொதுவாக "புத்திசாலி" மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்தி விட்டு போகும் மனப்பான்மை உடையவர்கள்.. அதற்கு சிலபஸ் முடிக்க வேண்டும் என்ற காரணம் உண்டு.. Problem with the Educational System..
நான் பத்தாவது படித்தபோது என் பெஞ்சில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். ஆனால், இன்று.. மற்றவர்களில் ஒருவன் அரசியல்வாதி.. இன்னொருவன் பெரிய பால் வியாபாரி.. இருவரும் என்னை விட வசதியாகவே உள்ளனர்... :)
// PPattian : புபட்டியன் said...
நான் பத்தாவது படித்தபோது என் பெஞ்சில் நான் மட்டுமே தேர்ச்சி பெற்றேன். ஆனால், இன்று.. மற்றவர்களில் ஒருவன் அரசியல்வாதி.. இன்னொருவன் பெரிய பால் வியாபாரி.. இருவரும் என்னை விட வசதியாகவே உள்ளனர்... :)//
ம இத்தைத்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று சொல்வார்கள் போலும். எனக்கும் அதே அனுபவம் இருக்கின்றது.
அந்த மாணவனின் வலியை புரிந்து கொண்ட ஆசிரியர் அவனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் தான்..
இப்படி எல்லா ஆசிரியர்களும் இருந்தால் நலமாகத்தான் இருக்கும்..
நன்றி பிரசன்னா
உண்மையில் என்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்வே அதிகமாய் இருக்கிறது
/ஆசிரியர்கள் பொதுவாக "புத்திசாலி" மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்தி விட்டு போகும் மனப்பான்மை உடையவர்கள்./
எல்லா ஆசிரியர்களும் அப்படியிருப்பதி்லை தர்ஷன்.
நன்றி அருணா Madam
முதல் வருகைக்கு
நீங்கள் மேலே சொன்னது உண்மை அதுவும் என்னை விட உங்களுக்கு இத்துறையில் அனுபவம் அதிகம் இருக்கும்
தர்ன் உங்கள் எழுத்தகளிலேயே உண்மையான வழி தெரிகிறது.
புபட்டியன்-இதற்காக நாட்டின் கல்விமுறையை மட்டுமே குற்றம் சொல்வது நியாயமாகப்படவில்லை
தங்களால் அம்மாணவன் ஒரு சதவீதமேனும் முன்னேறினால் அல்லது நீங்கள் முன்னேற்றினால் அது மறக்கமுடியாததாகிவிடும்.
நீங்கள் முடிந்தவரை வழிகாட்டியாக இருக்கலாம் என்பதே எனது கருத்து.
உங்கள் சமூக உணர்வுடனான கற்பித்தல் தொடர எனது வாழ்த்துக்கள்.
குற்ற உணர்வை விட்டு தீர்வுக்கு முயற்சியுங்கள் நண்பரே!!
நன்றி தெருவிளக்கு
ப்புட்டியன் அதை மட்டும் குற்றம் சொல்லவில்லை என நினைக்கிறேன், இதுவும் ஒரு காரணம் எனவே சொல்கிறார்
ஆசிரியர் , பெற்றோர், மாணவன் இணைந்தது மந்திர முக்கோணம்.. முன்று பக்கத்திலும் முயற்சி வேண்டும்.. இல்லேன்னா இப்படி தான், படிப்புல ததிங்கநத்தோம் போட வேண்டியது தான்..
எங்க பக்கம் கொஞ்சம் வாங்க..முதல் முதல்லா பதிவு எழுதி இருக்கேன்.. கண்டிப்பா கமெண்ட் போடுங்க..
மீண்டும் ஒரு பதிவு..மற்றும் ஒரு அழைப்பு.. வாங்க வந்து கமெண்ட் பண்ணிட்டு போங்க..
கருத்துரையிடுக