திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரிய இலங்கை அணியின் நடு மற்றும் பின்வரிசை

எதிர்பார்த்ததுதான். இந்தியாவில் ஒருநாள் தொடர்களை அது வேறு அணிகளிடம் இழப்பது மிக அரிதாக நடக்கும் ஒரு விடயம். இருந்தாலும் தோனி இல்லாத இந்திய அணியுடன் ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும் என நம்பினேன். ம்ம் நான் போன பதிவில் குறிப்பிட்டது போலவே மிகப் பலவீனமான இலங்கை அணியின் பின்வரிசை காலை வாரி விட்டது.

முன்பு சனத்தை நம்பியது போல இப்போதெல்லாம் டில்ஷான் அவர் அடிக்கா விட்டால் அவ்வளவுதான் என்ற நிலைமை. டில்ஷான் நுட்பத்திலோ அல்லது ஒவ்வோர் பந்துக்குமான ஆட்டத் தெரிவுகளிலோ பிழை விடாதவர் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறார் எனத் தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் வழங்கிய அருமையான வாய்ப்பை அடுத்த ஓவரிலேயே அநியாயமாக்கி விட்டார்.

உபுல் தரங்க நன்றாக ஆடுகிறார் எனினும் மெதுவாக வரும் பந்துகளை கணிக்கத் தவறுகிறார் leading edge பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் உண்டு.
டெஸ்ட் போட்டிகளில் அத்தனை சாதித்த மகேலவா அது ஒரு நாள் போட்டிகள் என்றால் பெட்டிப் பாம்பாய்மாறி விடுகிறார் . மாத்யூஸ் இருந்திருந்தால் இறுதி நேரத்தில் பொறுப்பாய் ஆடியிருப்பார் என நினைக்கிறேன்.மற்றவர்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப் போகிறது. சரி அடுத்த போட்டியிலாவது ஏதாவது நடக்கின்றதா எனப் பார்ப்போம்.

பலரும் கிசுகிசுப்பது போல தில்ஷன்,தரங்க பிரச்சினை உண்மைதான் போலிருக்கிறது. களத்தில் அவர்கள் ஆடும் போது அது வெளிப்படையாக தெரிகிறது.லோஷன் அண்ணா பதிவிட்டு தெளிவுப் படுத்துவார் என நம்புகிறேன்.


துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமேயானதாக ஒருநாள் போட்டிகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் பின்னர் பந்துவீச்சாளர்களின் Economy rate ரொம்பவும் அதிகரித்து விட்டது. கிரிக்கெட் என்றால் ஒருவர் பந்து வீச வேண்டுமென்பதற்காக மட்டுமே இப்போதெல்லாம் பந்துவீச்சாளர்களோ எனத் தோன்றுகிறது. இப்படியே போனால் அணியொன்று வெறும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கும் எனத் தோன்றுகிறது. இந்நிலையில் நம் வீரர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை எனினும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான இன்னுமொரு ஆடுகளம்தான் இன்றும். எனினும் இன்றைய போட்டியில் சகல சுழற்பந்து வீச்சாளர்களின் முயற்சியும் பாராட்டத் தக்கதே. ரவீந்திர ஜடேஜா,சுராஜ் ரண்டீவ் என புதிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களின் வருகையை கட்டியம் கூறியிருக்கிறது இத்தொடர்.

வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96

12 கருத்துகள்:

RK Anburaja சொன்னது…

ஹலோ அதென்ன ? வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96???

சச்சின் ஸ்டாடிக்ஸ் பத்தி உனக்கு என்ன தெரியும். நல்லா தெர்ஞ்சுகிட்டு பேசு..>!!?/ ஓகே

தர்ஷன் சொன்னது…

அடடடா அன்புராஜா
என்ன கோபித்து விட்டீர்கள் உங்கள் கோபம் ஞாயம்தான் நான்தான் தெளிவாக எழுதாமல் விட்டு விட்டேன். நான் சொல்ல வந்தது சச்சின் தொன்னூறுகளில் ஆட்டமிழந்திருப்பினும் அவர் ஆட்டமிழக்காமல் தொன்னூறுகளில் Pavilion திரும்பும் சந்தர்ப்பங்கள் குறைவு. எப்படியும் சதம் அடித்து விடுவார். இன்று தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் தலையின் சதம் தவறிப்போய் விட்டதே எனச் சொன்னேன். இதற்கெல்லாம் கோபப் பட்டால் உடம்பு என்னத்துக்காகிறது.

RK Anburaja சொன்னது…

மன்னிக்கவும்., இன்று ஒரு சிறந்த தருணம்.

சச்சின் ரெக்கார்டுக்காக விளையாடுபவர் இல்லை என்பதை நிரூபிக்க சரியான சந்தர்பம் அமைந்தநாள். அது தான் கோபம்.

லிவிங்ஸ்டன் சொன்னது…

athu yappadi nee sachina pathi

Karthikeyan G சொன்னது…

//தோனி இல்லாத இந்திய அணியுடன் ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும் என நம்பினேன்//

I think Sehwag will be a better captain than Dhoni..

தர்ஷன் சொன்னது…

// Karthikeyan G said...
I think Sehwag will be a better captain than Dhoni..//

ச்சே ச்சே ஒரு போட்டியை வைத்து முடிவுக்கு வந்து விடாதீர்கள்.
தரங்க சேவாகின் கைக்கே அடித்த பந்தை பிடித்த மறு கணமே தில்ஷன் இருந்த திசையிலுள்ள விக்கெட்டுக்கு எறிந்தக் கணத்தில் நானும் அவரது அனுபவத்தையும் சாதூரியத்தையும்வியந்தேன்.

maruthamooran சொன்னது…

டில்சான் அவதானமின்றி ஆடிய ஆட்டமும், சங்ககாரவின் ஆட்டமிழப்பும் போட்டியை இந்தியாவின் கைகளுக்குள் திணித்தது.

தர்ஷன் சொன்னது…

நன்றி மருதமூரான்
அடுத்தடுத்த போட்டிகளில் சாதீப்பார்கள் என நம்புவோம்

பெயரில்லா சொன்னது…

i don't understand you are supporting india or srilanka.

enna irunthalum indiyarkal ondru purinthu kollavendum malaiyakam, eezham anaithum ilankail ullathu enpathai.

Hari hara krishnan

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

சச்சின் நேற்றைய ஆட்டத்தின் மூலம் அவர் தனக்காக விளையாடுவதில்லை என நிரூபித்துவிட்டார். அவர் நினைத்திருந்தால் நேற்று power play மூலம் சதம் அடித்திருக்கலாம். ஆனால் power play எடுப்பதைஅவர் நிராகரித்து விட்டார்.

சங்கர் சொன்னது…

//வழமைக்கு மாறாக இன்று Score board இல் தென்பட்ட ஆச்சரியமான ஒன்று சச்சின் ஆட்டமிழக்காமல் 96 //

இந்த வரியை பாத்துட்டு திட்டலாம்னு நினைச்சேன், அப்புறம் பின்னூட்டத்தில் பார்த்து சமாதானமாகிவிட்டேன்

coolza சொன்னது…

மெதிவ்ஸ் இல்லாதகுறை பின்வரிசை சொதப்பியது. சரி அடுத்த போட்டியையாவது ஜெயிக்குமா இலங்கை?

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails