திங்கள், 13 ஏப்ரல், 2009

அயனுக்கு ஒரு ஞாயம் சிவாஜிக்கு ஒரு ஞாயமா?


கடந்து சென்ற பொங்கல் தினம், தியேட்டர் சென்று படம் பார்க்கும் வாய்ப்பு எல்லாம் இப்படி பண்டிகை விடுமுறைகளில்தான் கிடைக்கும். உடனே காலையிலேயே குளித்து உடுத்து நண்பர்களோடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்று இறங்கினால் வாசல் வரை நீளமான வரிசை. டிக்கட் கிடைக்குமென்ற நம்பிக்கை அற்றுப் போனாலும் கூடியிருந்த ஜனத்தை பார்த்து நம்பி மெல்ல அலுவலகத்தை அணுகி விசாரித்தேன்.

"இந்த காட்சிக்கான டிக்கட் எல்லாம் தீர்ந்து அனைவரும் திடேருக்குள் அனுமதிக்கப் பட்டும் விட்டனர்" என புன்னகை மாறாமல் சொன்னார்.

"அடப் பாவிகளா அப்ப எதுக்குடா நிக்கறீங்க " என்ற எண்ணத்தோடு ஒருவரை அணுகி

" அண்ணே house full ஆம்" என்றேன்.

" தெரியும் தம்பி நாங்க நிக்கிறது அடுத்த காட்சிக்கு " என்றார்.

அத்தனை பொறுமையும் அவசியமும் இல்லாத காரணத்தால் நான் நண்பர்களோடு வீடு திரும்பினேன். பின் DVD யில் படம் பார்த்த போது கிரேட் எஸ்கேப் என நினைத்து கொண்டது தனிக் கதை ஆர்வமுள்ளவர்கள் பொங்கல் ரீலிஸ், தப்பித்த உணர்வு என்பவற்றை வைத்து என்னப் படம் எனக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

ஏலவே பெற்ற மேற்படி அனுபவத்தால் இன்று காலையிலேயே படம் பார்க்கப் போனால் ம்ம் அங்கு ஈ காக்காய் கூட இல்லை. படம் ஆரம்பித்த போது மொத்தமே ஒரு 40 பேர் அதிலும் அந்த corner seat ஜோடி படம் பார்க்க வந்ததா எனத் தெரியவில்லை.

அயன் ஏதேனும் விழுமியத்தைக் கற்றுத் தரும் படமோ, அல்லது மனித வாழ்வின் பல பக்கங்களை யதார்த்தம் மாறாது பதிவு செய்த படமோ, இல்லை ஏதேனும் நவீன முறையிலான இலக்கியம் சினிமாவில் பரீட்சிக்கப் பட்டப் படமோ அல்ல. மேற்படி விடயங்களை சிவஜியிலோ குசேலனிலோ தேடிப் பார்த்து நொந்து அதையிட்டு பதிவிட்ட நெஞ்சங்கள் இதையும் பார்க்காமலிருப்பது நலம்.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சரம் சரமாய் sorry ரீல் ரீலாய் பூ சுற்றுகிறார்கள். ஆனால் வாசனையுடன். இது வரை சொல்லப்படாத கதை இல்லை. ஆனால் சொல்லப் பட்ட விதம் சொல்லப்பட்ட களம் புதுசு.
என்னை கேட்டால் இன்றைய தமிழ் சினிமாவின் no 1 நடிகர் அஜித்தோ விஜயோ இல்லை சூர்யாதான். ஹரி,கௌதம், K.V.ஆனந்த் என முற்றாய் வேறுப்பட்ட இயக்குனர்களின் படங்களில் இவரால் தன்னைப் பொருத்திக் கொள்ள முடிகிறது.
தமன்னா நடிப்பே வரவில்லை பரவாயில்லை பார்த்துக் கொண்டாவது இருக்கலாம்.
பிரபு குறை சொல்ல முடியாத நடிப்பு.

K.V. ஆனந்த், சூர்யாவுக்குப் பிறகு படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் M.S. பிரபுதான் குறிப்பாக கொங்கோ காட்சிகள்.

அப்புறம் சின்ன வயதிற்குப் பிறகு சண்டைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தது இந்தப் படத்தில்தான் அதுவும் கொங்கோ chasing காட்சிகள் jackieயின் first strike ஐ ஞாபகப் படுத்தியது. stunt master பெயர் பார்க்கவில்லை தெரிந்தோர் சொல்லுங்கள்.

நிறையப் பேர் படம் catch me if you can போல் இருப்பதை சொன்னார்கள். எனக்கேதோ அப்படித் தெரியவில்லை. பொன்வன்ணனை tom hanks ஓடும் சூர்யாவை leanardo de caprio வுடனும் ஒப்பிட்டாலும் இதில் அதைப் போல் இருவருக்கிடையிலான ஆடு புலி ஆட்டம் அத்தனை சுவாரசியம் இல்லை. ஒன்று catch me if you can இல் போலவே துரத்துபவரும் துரத்தப் படுபவரும் இறுதியில் ஒன்று சேர்கிறார்கள்.

music வழமையான ஹாரிஸ் வந்த புதிதில் முனுமுனுப்பதும் பின் மறந்து போவதும் அவரது பாடல்களுக்கு உள்ள இயல்பு. A.R.R போல நீண்ட நாட்களுக்குப் பின் அட இது நல்லா இருக்கே என சிலாகிக்கக் கூடிய வகையில் அவர் இன்னும் பாடல்கள் தரவில்லை. இந்த படத்தில் முமுனுக்க வைத்தது கூட "விழி மூடி யோசித்தால்" தான்.

நண்பனொருவன் சொன்னான். " ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை இந்த வருஷம் ஏதாவது நல்லப்படம் வந்துச்சா அதான் படம் நல்லது போல இருக்கு பெரிய விசேடமில்லை".உண்மையாகவும் இருக்கலாம்.

அனைவரும் ரசிக்கும் விதமாய் படம் எடுக்கிறோம் என்று கூறும் மசாலா பட இயக்குனர்களுக்கு நீங்கள் எடுக்கும் மசாலாவை இப்படியும் எடுக்கலாமே பார்க்கலாம்.

அப்புறம் இந்தப்படம் பார்த்தப் போது பதிவுகள் தொடர்பில் தோன்றியது குருவி,வில்லு,ஏகன் எல்லாம் போலல்லாது கிட்டத்தட்ட இது போல என்னைக் கேட்டால் இதை விட better ஆகவே இருந்த படம்தான் சிவாஜி ஆனால் அந்தப் படத்தின் மேல் மட்டும் ஏன் இத்தனை காட்டம்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

நானும் என் தேவதையும்


தன் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்தாய் கவிதை என்ற பெயரில் எழுதிய நான்கைந்து வரிகளுக்குள் அடக்கப்பட்ட சில அலங்காரமான வார்த்தைகள் அவ்வளவே

நித்திரையைக் குழப்பிச் செல்லும்
குருவிகளின் பேரிரைச்சல்
இன்று மட்டும் ஏன்
இத்தனை இனிமையாய்

திரை விலக்கி வானும்
கைகளை நீட்டியது
பேரிரைச்சலுடன்
உனக்கு வாழ்த்து சொல்ல

அகராதியில் உன் பெயரை
சேர்த்தால் என்ன
ஒளிவட்டமும் சிறகுகளும்
அற்ற தேவதை என

உன் ஊரில் பெண்கள்
அத்தனை அழகில்லையாம்
பாவம் உன்னோடு
ஒப்பிடப்பட்டதாலே
இந்த அவப்பெயர்

அழகுக்கும் அறிவுக்கும்
எப்போதும் எட்டாப்பொருத்தமாம்
சொன்னவனை திட்டவில்லை
பாவம் அவன் உன்னை
அறிந்திருக்க வில்லை

அதிகமானோர் காதலித்தனராம்
பேரழகியர் பெயர்
சொன்னார்கள் ஆனால்
அதிகமாய்
காதலிக்கப்பட்டவள் நீ
ஒருவனாலேனும்

பிரிவில்தான் அருமை
தெரியுமாம்
அதிகமாகவே உணர்கிறேன்
உன் அருமையை

அருமையிலும் அருமையானவளே
வாழ்த்துக்கள்
அடுத்த முறை காற்றிலேனும்
கலந்து விடுகிறேன்
என் காதல் கலந்த
வாழ்த்துக்களை

திங்கள், 6 ஏப்ரல், 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்


நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.

நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார்.
இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன்.9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை
My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால்
M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Plutoஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு
முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது.
Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது
H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம்
சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு)இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம்.
B.B. ROY of Great Britain had a Very Good Wife
இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது.ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம்.வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள்.

மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது.
" பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்"
முதல் எழுத்துகளின் படி
மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம்
இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.

நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள்
எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.

வியாழன், 2 ஏப்ரல், 2009

சின்னதொரு செய்தியும் சிரிக்க ஒரு ஜோக்கும்


உயிரினங்கள் வாழக் கூடிய இடம் எனக் கருதப் பட்ட ஒரே இடமான பூமி இன்னும் சில ஆயிரம் வருடங்களில் அத்தகுதியை இழந்து விடும் அபாயம் தோன்றியிருப்பதால் உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற இன்னுமொரு இடத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கிலான ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடைப்பெற்று வருகின்றன. அதிலும் அதிகம் பேரின் கவனத்தை ஈர்த்தது செவ்வாய் கிரகமே.

அவ்வகையில் Russian academy of science இன் ஏற்ப்பாட்டில் Mars 500 என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை அண்மித்துள்ளது. இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு தொண்டர்களின் பங்கேற்கையுடனான பயிற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

இதில் ஒரு முடிவு தெரிந்த பின் நம் கவிஞர்கள் செவ்வாயை இம்சிக்காமல் விட்டு விடுவார்கள் என நினைக்கிறேன். செவ்வாய்க்கே மனிதன் போகும் நாள் வந்த பின்னும் இன்னமும் நம்மவர்கள் செவ்வாய் தோஷம் அது இது என பார்த்துக் கொண்டுதான் இருக்கப் பார்க்கிறார்கள்.

இத்தகவலை டிவி யில் பார்த்த போது சில நாட்களுக்கு முன் படித்த ஒரு Joke ஞாபகம் வந்தது.

சந்திரனில் மனிதன் வாழும் சாதகமான சூழ்நிலைகளை அடுத்து ஒவ்வோர் நாட்டவரையும் கொண்டு சென்று அங்கு குடி வைத்தனராம்.
முதலில் வழமை போல் அமெரிக்கா,
அடுத்து சீனா துரிதமான முன்னேற்றம் அங்கும் இருக்கும் என்று,
பிறகு ரொம்பப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியா
போனால் போகுதென்று இலங்கை
அவர்களுக்கேற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு அப்பீட்டானவர்கள் பத்து வருடம் கழித்து சென்று பார்த்தால்
அமெரிக்கரின் பகுதி பெரிய twin tower எல்லாம் கட்டி படு சோக்காய் இருந்தனர்.
சீனர் இன்னும் ஒரு படி மேலே சென்று ஏகப்பட்ட factoryக்கள் என கலக்கத் துவங்கினர். அவர்களின் அதிகப்படியான ஆர்வக்கோளாறு சந்திரனையே கருப்பாக்கி இன்னொரு சந்திரன் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது.
இந்தியர்கள் இருக்கும் பகுதி ஜனநாயகவாதிகள் இல்லையா அது தேர்தல் காலம் போலும் தோரணங்களும் மேடைகளும் அப்பப்பா பட்டைய கிளப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு ஓரமாய் இருந்த பேனரில் " அகில பிரபஞ்ச டாக்டர் விஜய் ரசிகர் மன்றம் சந்திரக் கிளை" என்ற வரிகளை பார்த்து சிரித்தவாறே மற்ற பக்கம் திரும்பினால் எலுமபும் தோலுமாய் ஒரு கும்பல் அட நாம இங்க எதியோப்பியா சோமாலியா காரனை கூட்டிக் கொண்டே வரவில்லையே எனக் கண்ணைக் கசக்கிக் கொண்டுப் பார்த்தால் அட நம்ம இலங்கையன்.

உடனே அவனை நெருங்கி விசாரிக்க பதட்டப்படாமல் சொன்னான்
" Every day poya day(பூரனைத் தினம்) How can I work?
இலங்கையில் பௌர்ணமித் தினம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts with Thumbnails