பல தெய்வ வழிபாடும் அபத்தமான புராண கதைகளும் மூடத்தனமான வழிபாட்டு முறைகளும் நிறைந்த ஒரு குறித்த சாராரின் மேலாதிக்கத்தை எவ்வித கேள்வியுமின்றி நிலைத்திருக்கச் செய்ய அயராது பாடுபடும் மார்க்கம் ஹிந்து மதம். ஒரு குறித்த பிரிவினருக்கு மட்டும் பிறப்பின் பெயரால் அதீத சலுகைகள் கிடைக்குமாறான ஒருதலைபட்சமானதும் ஏனையோரை மிகவும் துன்புறச் செய்வதும் உலகில் நடக்கும் அக்கிரமங்களை ஆண்டவனின் திருவிளையாடல் என்ற பெயரில் சகிக்கச் சொல்லும் ஒரு sadist மதம்.எவ்வித விஞ்ஞான ஆதாரங்களும் அற்ற கட்டுக்கதைகளை நம்புவதைப் பற்றிய எவ்வித கூச்சமுமின்றிய ஒரு முட்டாள் கூட்டத்தை தன பக்தர்களாகக் கொண்டது. பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் தோற்றம், அதன் கூர்ப்பு என்ற சகலதுக்கும் ஓரளவு அறிவியல் பூர்வமாக விளக்கம் கூறக்கூடியதாக உள்ள இன்றைய நிலையிலும் தீ மிதித்தல், பறவை காவடி என காட்டு மிராண்டித் தனங்களில் ஈடுபட பக்தரை ஊக்குவிக்கும் ஒரு பிற்போக்கான மதமாகும்.
வர்ணாசிரம தர்மத்தை முக்கிய கோட்பாடாக கொண்டு அதன் வழி இன்றும் சாதியக் கொடுமைகள் எல்லா இடங்களிலும் நடைபெற காரணமாக உள்ளது இந்து தர்மம்.
1930 களில் முதலாளியம் சரிவை சந்தித்த போது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் லத்தின் அமெரிக்காவிலும் மக்கள் பட்டினியில் இருந்த போது தாம் மிகையாய் உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை மண் தோண்டி புதைக்கும், கடலில் கொட்டவும் செய்தனர் முதலாளித்துவ நாடுகள். அதற்கு சற்றும் குறையாத விதத்தில் இன்று போர்களாலும், பஞ்சத்தாலும் மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவிக்கையில் கோயில் திருவிழாக்களிலும் காணிக்கையாகவும் பெருந்தொகைப் பணமும் ,நேரமும், மனித உழைப்பும் கொட்டப்படும் அவலம் நிறைந்த மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையை வாழப் போதிப்பது இந்து மதம்.
இத்தனை அவலங்களும் தலை விரித்தாடும் ஒரு மார்க்கத்தில் மனிதனுக்கு எவ்வித நிம்மதியும் கிட்டாது என்பது வெளிப்படையானதால்தான் பெரியார் துவங்கி பல பகுத்தறிவாளர்கள் நம் சமூகத்துக்கு ஒவ்வாத இம்மார்க்கத்தை தூக்கியெறியும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். ஏன் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் நட்ட கல்லை சுற்றி வரும் அபத்தத்தை பற்றியும் பறைச்சி , பனத்தி என சாதி பார்க்கும் வழக்கத்தையும் கண்டித்தே இருந்தனர்.
இத்தனை அநியாயங்களும் அவலங்களும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த ஒரு சமயத்தில் நித்தியானந்தன்கள் தவிர்ந்த வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும். ஆக ஆச்சரியமில்லைதான் புலனடக்கம் பற்றி போதித்த ஒருவன் கதவை திறந்து வைத்துக் கொண்டு காம லீலையில் ஈடுபட்டது.
ஏன் அவனுக்கு உணர்ச்சி இல்லையா? அவன் பாவம் இல்லையா? என்ற கேள்விகளெல்லாம் சிலர் கேட்டிருந்தனர். காமம் என்பது இயற்கையின் நியதி. பெண்களை சுகிப்பதற்கு ஆர்வமும் விருப்பமும் அனைவருக்கும் இருக்கும் அது தவறுமில்லை. ஆனால் தன குடும்பத்திற்காக 35 வயது மட்டிலேனும் திருமணமே செய்யாமல் கழிப்பறையிலே கைமைதுனம் செய்தே காலம் கழிக்கும் எண்ணற்ற இளைஞர்களுக்கு இருக்கும் புலனடக்கம் கூடவா இல்லாமற் போனது மற்றவனுக்கு புலனடக்கத்தை போதிக்கும், மிகையான காம உணர்ச்சியால் வெதும்பிக் கொண்டிருந்த ஒரு ஏழை எழுத்தாளனின் உணர்ச்சி பெருக்கை ஒரு தொடுகையால் அற்றுப் போகச் செய்த பரமஹம்சனுக்கு. ஆக இயற்கை உந்துதல் என்றெல்லாம் சாட்டு சொல்வது இந்த நாயின் செயலை பொறுத்தவரை பொருத்தமே அற்றது.
தன மதம் இப்படி வெட்ட வெளியில் கற்பழிக்கப் பட்டதை பார்த்த பின் இவன் எங்கள் மதத்தின் பிரதிநிதி அல்லன் என்ற கோஷம் அம்மதத்தின் காவலர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அப்படியானால் எது இந்து மதம்? அதன் தத்துவம், தாற்பரியங்கள் என்ன? எவனெல்லாம் போலி என்று விளக்கி முறைப்படுத்த வேண்டியதுதானே.
இன்னும் சில பேர் ஊடக தர்மம் பற்றி பேசுகிறார்கள். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடியவாறு இத ஒளிபரப்பியது தவறென்றாலும் அவ்வாறு செய்யாவிடில் இதையே கிராபிக் என்பவர்கள் நம்பியே இருக்க மாட்டனர். ஆனாலும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது தவறே. இருந்தாலும் இதோடு ஒப்பிடும் பொது நித்தி செய்தது ஒன்றுமே இல்லை என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.
அடுத்து சில பேர் உங்களுக்கு எங்கேயடா போச்சு அறிவு? அவன் பிரமச்சாரி என்றானா? என எதிர் கேள்வி கேட்டு அவனை ஞாயப்படுத்துகின்றனர். அவன் மற்றவனுக்கு யோகமும், தியானமும் , பிராமச்சாரியமும் கற்பிக்கிறேன் என காசு பறிக்க கிளம்பாத வரையில் அவன் என்ன செய்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. தான் பிரமச்சாரி அல்ல என்று சொல்லாத இந்த சத்தியவான் " நான் இப்படித்தான் இருப்பேன் போங்கடா" என சொல்ல வேண்டியதுதானே ஏன் ஓடி ஒளிந்தான்.

இன்னுமொரு சாரார் செயற்பட்ட முறைதான் ரொம்பவும் அருவருக்கத் தக்கதாய் போய்விட்டது. அதாவது இவனை ஞாயப்படுத்துவதற்காய் தன தொன்னூறு வயதிலும் மூத்திர சட்டியை சுமந்துக் கொண்டு கொண்டு ஊருராய் சென்று பிரசாரம் செய்தவரை இழுத்திருக்கிறார்கள். அவர் அந்திமக் காலத்தில் செய்த பொருந்தாத் திருமணம் சரி என்றால் இதுவும் சரியாம். தன் கட்சியினரிடம் நம்பிக்கை அற்ற ஒரு நிலையில் பார்ப்பனிய இந்து மதத்தின் கொடுமைகளில் இருந்து தன் மக்களை மீட்கும் அரும்பணிக்கு தான் உயிருடன் இருக்க வேண்டிய அவசியத்தை மணியம்மையே உணர்த்தி அவரை கவனித்துக் கொள்வதற்காக மட்டுமே செய்த திருமணமே இது. இத்தனைக்கும் மணியம்மை அவரை அப்பா எனத்தான் அழைப்பார். வளர்ப்பு மகளுக்கு சொத்து சேர முடியாது என்ற நிலையில் வாரிசுரிமைக்காக இதை செய்தார் என்றும் சொல்வார்கள்.
நம்மூரில் சொல்வார்கள் "கந்தனுக்கு புத்தி கவட்டிக்குல்லன்னு " பாருங்கள் பெரியார் மணியம்மைக்கு என்ன சுகம் கொடுத்திருக்க முடியுமென புலம்புகிறார். இவருக்கு எது பிரதானமாய் பட்டிருகிறது பார்த்திர்களா? ஆன்மீகப்பணி புரியும் இந்து மதத் தலைவர்கள்ளான பிரேமானந்தா தொடங்கி நித்யானந்தா (பட்டியல் பெரிதென்பதால் பெயர் தனித் தனியே பெயர் போட முடியவில்லை) வரையிலானவர்களுக்கு வேண்டுமென்றால் செக்ஸ் பெரிதாய் இருக்கலாம். ஆனால் மக்கள் விடுதலை என்ற பெரும்பணியில் ஈடுப்பட்டிருந்த பெரியாருக்கும் மணியம்மைக்கு அந்த எண்ணமே வந்திருக்காது. என்ன செய்வது இவங்க சாமி பிள்ளையாரே இங்கே பிரமச்சாரி என படம் காட்டி விட்டு வடக்கில் ரெண்டு சின்ன வீடு வைத்திருக்கையில் நித்தியும் அதைத்தான் செய்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை இப்பிரச்சினைகள் களையப்பட வேண்டுமெனின் கொடியவர்களின் கூடாரமாய் போய் விட்ட சகல மடங்களும் அரச கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அவர்களது கணக்கு வழக்குகள் பரீட்சிக்கப் பட வேண்டும் . அவர்கள் ஆன்மீக வழி பெற்ற சித்திகள் என்ன மக்களுக்கு அதில் எதை வழங்குகிறார்கள் என்பவற்றில் ஒரு வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். ஜோதிடம், சாஸ்திரங்கள் என்பவற்றில் உள்ள விஞ்ஞான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அவை அவ்வாறான உண்மைகளை கொண்டிராவிடின் அவை மக்களை ஏமாற்றும் பிராடுத் தனங்களாகக் கருதி தடை செய்யப்பட வேண்டும். அப்புறம் இவ்வாறான ஏமாற்றுத் தனங்களில் ஈடுபட்டோரை கடுமையாய் தண்டிக்க வேண்டும். இவையெல்லாம் என் ஆசைகளான போதும் இவற்றின் நடைமுறை சாத்தியமின்மை தொடர்பில் அறிகிறேன். இவ்வளவு ஏன் நித்தியே இப்போது கோர்ட்டுக்கு கொண்டு போகப்பட்டால் விடுவிக்கப்படவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஒரே ஒரு ஆசை இவன் கோபம் கொண்ட பக்தர்களின் கும்பலுக்கிடையில் மாட்டிப்பட்டால் நினைத்தாலே இனிக்கிறது







