
எனது சக ஆசிரியர் ஒருவர், அத்தனை கல கல பேர்வழி இல்லையென்றாலும் கடு கடுவென இருக்கும் ரகமும் இல்லை. ஆனால் அன்றொரு நாள் அவரைப் பார்த்த போது இஞ்சி தின்ற ஏதோ போல் வழமையை விடவும் அகோரமாய் இருந்தார்.
சரி வீட்டில் ஏதோ உள்நாட்டு கலவரம் போலும் என எண்ணியவாறே அவரைப் பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு சிரிக்க மறுத்தவர் ஆவேசமாக
" பாருங்க sir அநியாயத்த" என்றார்.
இலங்கையில் அநியாயத்துக்கா பஞ்சம் அதில் ஏதோதான் இவர் மனதை வாட்டியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தோடு
" என்ன sir ஏதும் பிரச்சினையா? " என்றேன்.
" பாருங்க sir இந்த லயத்தான்களே இப்படித்தான் காசு கொடுத்தா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பாங்க போல"
ஆஹா ஆள் ஆவேசப்படுவதைப் பார்த்தால் மேட்டர் பெருசா இருக்கும் போல என எண்ணியவாறே
"என்ன sir" என்றேன்.
" கொஞ்ச நாளா ஏதோ ஒரு கிருத்துவ அமைப்பால இங்க வந்து போதனை எல்லாம் பண்ணுனாங்க இல்ல இப்ப கொத்தா ஒரு இருபது குடும்பம் அப்படியே மதம் மாறிட்டாங்க"
என தலையில் கை வைத்தார்.
அட இதுக்கா இந்த ஆள் ஏதோ தன் வீட்டில் எழவு விழுந்தது போல் பதறினார் என நினைத்த போது சிரிப்புத்தான் வந்தது. உதட்டோரம் அரும்பிய புன்னகையோடு
" இவ்வளவுதானா இதுக்கு போய் நீங்க ஏன் இவ்வளவு கவலைப் படுறீங்க நானும் ஏதோ உங்களோடுதான் ஏதோ பிரச்சினைன்னு நினைத்தேன்"
"என்ன sir கொஞ்சமும் பொறுப்பில்லாம பேசுறீங்க நீங்க எல்லாம் ஒரு ஹிந்துவா எங்கட கலாச்சாரம் என்ன ஆகுறது"
பாவம் ஆரியர் எம்முள் புகுத்திய இந்த மதம்தான் திராவிடராகிய நம் கலாசாரத்தின் அடிப்படை என்ற கருத்தில் அவர் இருந்தார். எங்கே தமிழர்கள் எல்லாம் மதம் மாறி கோடு சூட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக தேவாலயங்களுக்கு செல்லத் தொடங்கி விடுவரோ என்ற ரீதியில் அதீதமாய் கற்பனை செய்து பயந்தார்.
திடீரென கசிப்பு அடித்தவரை போல் தகாத வார்த்தைகளால் தோட்ட மக்களையும் ஏனைய மதங்களையும் தூஷிக்க தொடங்கினார்.
எப்போதும் தனது மதம் தனக்கு நல்ல விழுமியங்களை கற்றுத் தந்திருக்கிறது என்று பிதற்றும் அவருக்கு சகிப்புத்தன்மை என்று ஒன்று இருப்பது தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.
மதம் இத்தனை sensitiveவான விடயமா? அவரது ஆவேசம் சிவசேனா போன்ற கட்சியினரையும் தோற்கடிக்கும் விதத்தில் இருந்தது. ஒரு கணம் பால் தாக்கரே உடன் பேசுவதாகவே உணர்ந்தேன். இவர் என்ன வேதங்களையும் உபநிஷதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்து அனுபவ வாயிலாக கடவுளை உணர்ந்து அக்கடவுளின் அருட்கடாட்சம் உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படும் அற்புதத்தை உணர்ந்தவர் போல் பேசுகிறாரே என நினைத்த போது கோபம்தான் வந்தது.
" ஏன் அவர்கள் செய்ததில் என்ன தப்பு தனக்கு நிம்மதியை தரவல்லதை கடவுள் என்கிறார்கள். தான் சார்ந்த மதத்தில் அது கிடைக்காத போது மதம் மாறுகிறார்கள். மதங்களால் அழிவுகளேயல்லாமல் ஏதேனும் உபயோகமாய் நடந்ததாய் கேள்விப்பட்டிருப்போமா. அப்படியிருக்க இதை ஏன் இத்தனை பெரிது படுத்த வேண்டும். அதுவும் ஒரு ஆசிரியர் இந்த மாதிரி super natural powerஐ நம்பி சக மனிதர்களை தூஷிப்பது சரியா?"
என்றேன்.
" science teachersஏ இப்படித்தான் சாமியை கிண்டல் பண்றதுல ஒரு பெருமை போங்க sir உங்க விஞ்ஞானத்தால எல்லாம் கடவுளை உணர முடியாது"
" சரி அப்படியே வைத்துக் கொள்வோம் எம்மால் உணர முடியாத கடவுள் பெயரால் சதுர்வர்ணங்கள் ஏற்படுத்தப் பட்டு அதன் பெயரால் இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டோர் அதை மீறத் துணிவதில் என்ன குறையைக் கண்டீர்கள். கஷ்ட படுபவனை கைத் தூக்கி விடாது விதி, சஞ்சிதம், ப்ராப்தம், ஆகாமியம் என அவன் துயரத்தை ஞாயப் படுத்துவீர்கள். எங்கேயடா கடவுள் என்றால் இது கலியுகம் வரமாட்டார் அது இது என மழுப்புவீர்கள். ஏதோ ஒரு காட்டுமிராண்டி காலத்தில் சொல்லப்பட்ட படு பிற்போக்கான சாத்திரங்கள் எல்லாவற்றையும் ஆதி அந்தம் இல்லா ஆண்டவன் அருளியது என தலையில் வைத்து கொண்டாடுவீர்கள். அர்த்தமே தெரியாத மொழியில் யாரோ அர்ச்சிக்க தட்சனை மட்டும் போட்டுவிட்டு வருவீர்கள்.
குறைந்த பட்சம் அங்கே ஞான ஸ்நானம் செய்வித்து தன் மதத்திலாவது சேர்த்துக் கொள்கிறான். நீ சூத்திரன் ஒரு பிறப்பாளன் தீட்சை எல்லாம் பெற முடியாது என சொல்லும் மதத்தில் என்னா மயிருக்கு sir இருக்கணும்."
இத்தனை ஆவேசத்தை அவர் என்னிடம் எதிர்பார்க்க வில்லை. என்னை மிக வெறுப்பாய் பார்த்தவர் சொன்னார்.
" நம்ம அம்மா ஒரு ****** ஆகவே இருந்தாலும் அம்மா அம்மாதானே"
இதனை கேவலமாய் ஒரு உவமை சொல்லவும் அவருக்கு மதம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது போல. இதற்கு மேல் அவருக்கு விளக்கம் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனக்கென்றால் புரியவில்லை இதற்கெல்லாம் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று. என் மனம் சொன்னது இங்கேயும் தேவை உடனடியாய் ஒரு பெரியார்
6 கருத்துகள்:
//இங்கேயும் தேவை உடனடியாய் ஒரு பெரியார்//
வேணாம்பா... பெரியாருடைய கொள்கைகளைவிட அவருடைய பெயரை வைத்தே பிழைப்பு நடத்தும் கூட்டந்தான் அதிகமாக இருக்கிறது. போகிறபோக்கில பெரியார் சாமின்னு அவரையும் கும்பிடப்போறாங்க..
மதம் மாறுவதை போய் ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டாறா அந்த ஆசிரியர். என்ன இது சின்ன பிள்ளை தனமா இருக்கு. யாரையும் நீ இந்த சாமி கும்பிடனும் இந்த கோயிலுக்கு தான் போகனும் என்ற சொல்ல முடியாது. அவரவர் நம்பிக்கையில் அவரவர் செய்வதை நாம் தடுக்க வேண்டும். ஒருவர் மதம் மாறுவதால் யாருக்கு என்ன தீங்கு ஏற்பட போகுது?
உண்மையாகவே அவர் ஒரு ஆசிரியரா தர்ஷன் ? கோபிக்காதிங்க ஏன்னா
//" நம்ம அம்மா ஒரு ****** ஆகவே இருந்தாலும் அம்மா அம்மாதானே"
இதனை கேவலமாய் ///
இப்படி கூறியதாய் நீங்கள் எழுதியிருந்திங்க அதான்! ம்ம்ம்ம்ம்ம்ம்
//வேணாம்பா... பெரியாருடைய கொள்கைகளைவிட அவருடைய பெயரை வைத்தே பிழைப்பு நடத்தும் கூட்டந்தான் அதிகமாக இருக்கிறது. போகிறபோக்கில பெரியார் சாமின்னு அவரையும் கும்பிடப்போறாங்க.//
அவர் காலத்திலேயே நடந்தது மலேசியாவில்
இனி மேலும் நடந்தால் ஐயாவின் அர்ப்பணிப்புக்கு அர்த்தமேயில்லாமல் போய் விட்டதா
என்ன கலை செய்வது
அவர் போன்றோரால்தான் ஆசிரிய வான்மைத்துவமே கேவலப்படுகிறது.
'கசிப்பு'என்றால் என்ன?...இலங்கைத் தமிழ் ரொம்பவும் அழகு...ஒரு சில வார்த்தைகள் புரியத்தான் இல்லை!..மதத்தை விடவும் மனிதம் முக்கியம் என்கிறீர்கள்...ஒப்புகிறேன்.
@ஷஹி
கசிப்பு என்பது கள்ளச்சாராயம் / நாட்டு சரக்கு / பட்ட சாராயம் என பொருள் படும்.அதாவது பானைய அடுக்கி வச்சு காச்சுறது,சிறு கைத்தொழில் முயற்சி :}
கருத்துரையிடுக