திங்கள், 6 ஏப்ரல், 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்


நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.

நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார்.
இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன்.9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை
My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால்
M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Plutoஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு
முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது.
Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது
H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம்
சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு)இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம்.
B.B. ROY of Great Britain had a Very Good Wife
இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது.ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம்.வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள்.

மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது.
" பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்"
முதல் எழுத்துகளின் படி
மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம்
இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.

நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள்
எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.

10 கருத்துகள்:

Raju சொன்னது…

ada Poppaa....
Naan ennomoo ninaissa nee ennomo solra...

Gajen சொன்னது…

எங்க? எங்க??? சிம்ரன் எங்க???? ஓடி வந்த வேகத்துல முடி கூட கலைஞ்சிரிச்சு சார்...எங்க சிம்ரன்???? கிகிகி...

ஆவர்த்தன அட்டவணையையும் , தாக்க வீதத்தையும் ஞாபகம் வச்சிருக்கேன்...இந்த தடைகள பட்டி தான் அவ்வளவு ஆழமா படிக்கல...நல்ல தொகுப்பு

kuma36 சொன்னது…

ஆஹா ஹா விஞ்ஞான ஆசிரியர் வந்துடாராய்யா வந்துட்டாரையா

ஆவர்தன் அட்டவனையை படிக்கும் போது இதே பாடல் தான் நானும் படித்தேன். மற்றவை புதுசு சார்!

தர்ஷன் சொன்னது…

//டக்ளஸ்....... said...
ada Poppaa....
Naan ennomoo ninaissa nee ennomo solra...//

விடுங்க டக்லஸ்
வாழ்க்கைனா ஏமாற்றங்களும் இருக்கத்தான் வேண்டும்

//தியாகி said...

எங்க? எங்க??? சிம்ரன் எங்க???? ஓடி வந்த வேகத்துல முடி கூட கலைஞ்சிரிச்சு சார்...எங்க சிம்ரன்???? கிகிகி...//

வாங்க தியாகி பரவால்ல ரொம்பவும் நொந்துற கூடானுத்தான் ஒரு படம் போட்டிருக்கேன்

//கலை - இராகலை said...

ஆஹா ஹா விஞ்ஞான ஆசிரியர் வந்துடாராய்யா வந்துட்டாரையா

ஆவர்தன் அட்டவனையை படிக்கும் போது இதே பாடல் தான் நானும் படித்தேன். மற்றவை புதுசு சார்!//

நன்றி கலை
சிம்ரன் பேரை போட்டவுடன் திரும்ப படிக்க ஆசையா இருக்குதானே

பெயரில்லா சொன்னது…

in engineering one formula we have regarding to kinetic energy
M/I:K/Y:E/R the easy way to remind this formula "May I Kiss you Elezapath Rani"

Joe சொன்னது…

நான் பாக்கலைங்க!

சி தயாளன் சொன்னது…

haahaa....தலைப்பு ஏதனதமா இருந்தாலும் விடயம் என்று ...நாங்களும் உத வைச்சு தான் பாடமாக்கி தள்ளினாங்கள்..:-)

தர்ஷன் சொன்னது…

வருகைக்கு நன்றி
டான் லீ
Joe

தர்ஷன் சொன்னது…

//Anonymous said...

in engineering one formula we have regarding to kinetic energy
M/I:K/Y:E/R the easy way to remind this formula "May I Kiss you Elezapath Rani"//

thanks

Jana சொன்னது…

இப்படித்தான் பலவற்றை பாடமாக்கினோம். சிம்ரன் மாட்டர் ஏற்கனவே கேள்விப்பட்டதால், நான் ஒன்றும் ஏமாறவில்லை!!! (மீசை இருந்தால்த்தானே மண் ஒட்டும்)

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails