புதன், 23 ஜூன், 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 4


உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
செத்துப் போகிறேன்
தகிக்கும் உன் கண்களில்
எரிந்தோ
உன் கன்னக்குழியில்
புதைந்தோ

என்னைப் பார்த்தால்
கண்சிமிட்டுகிறாய்
அழகாக
நானோ எனக்கு
இமைகள் இருப்பதையே
மறந்துபோகிறேன்

கவிதைகளுடன் கடந்து
போகிறது வாழ்வு
உன் நினைவுகள்
மட்டும் உடனிருப்பதால்
கவிதையாகவே இருந்திருக்கும்
நீயும் உடனிருந்திருந்தால்

பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்

14 கருத்துகள்:

Mohan சொன்னது…

"பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்"

Superb!

Subankan சொன்னது…

Nice one :)

தர்ஷன் சொன்னது…

Thanks Mohan
thanks Subankan

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நைஸ் நல்லா இருக்கு..

தர்ஷன் சொன்னது…

Thanks Vasanth

செந்தில்குமார் சொன்னது…

பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்

நல்ல சிந்தனை தோழர் தர்ஷன்

தொடரட்டும் இன்னும் புதிய சிந்தனை...

இவன்
செந்தில்குமார்.அ.வெ

தர்ஷன் சொன்னது…

Thanks senthil

தமிழ் மதுரம் சொன்னது…

கவிதைகளுடன் கடந்து
போகிறது வாழ்வு
உன் நினைவுகள்
மட்டும் உடனிருப்பதால்
கவிதையாகவே இருந்திருக்கும்
நீயும் உடனிருந்திருந்தால்//


கவிதையின் உயிரோட்டமான வரிகள் இது என நினைத்தபடி கவிதையினைப் படித்தால் அடுத்ததாக வந்து விழுகிறது அனல் பறக்கும் வரி!
//பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்//


என்ன ஒரு தத்ரூபமான வலியின் வரிவடிவம். வாழ்த்துக்கள் தர்சன்.


டேய் என்னை அனத்த விடுங்கடா // இந்த வார்த்தை கொஞ்சம் புரியவில்லை நண்பா.
மற்றும் படி கவிதை சிப்பியில் செதுக்கப்பட்ட வார்த்தையில் மிளிர்ந்த செந்தமிழ்!

தர்ஷன் சொன்னது…

நன்றி கமல்
சற்று மிகையாகவே பாராட்டுகிறீர்கள்

தர்ஷன் சொன்னது…

// //டேய் என்னை அனத்த விடுங்கடா // இந்த வார்த்தை கொஞ்சம் புரியவில்லை நண்பா.//


அனத்தல் என்றால் அர்த்தமின்றிய புலம்பல் நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் புலம்புவதை அனத்துவது என நம்மூரில் சொல்வார்கள். காதலும் ஒரு வகையில் நோய்தானே
போய்சில் விவேக் தண்ணியடித்து விட்டு புலம்பும் போது அவரைத் தவிர்க்கப் பார்க்கும் இளைஞர்களிடம் அவர் சொல்லும் வசனமே மேற்கண்ட தலைப்பு. நான் எழுதுவது கவிதையாக அல்லாமல் அர்த்தமின்றிய புலம்பலாகப் பட்டதால் பயன்படுத்திக் கொண்டேன்.

வால்பையன் சொன்னது…

//பேசாமல் கடவுளை
நம்பித் தொலைக்கலாம்
போலிருக்கிறது
நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம்//


ஓ! இதுக்கு தான் எல்லோரும் கடவுளை நம்புறாங்களா!?

எப்பூடி.. சொன்னது…

//நீ மறுத்ததற்கான
பலியை தூக்கி
அவர் மேல்
போட்டு விடலாம் //

பலியா? பழியா? சரியான சொல்.

எப்பூடி.. சொன்னது…

கடவுள் பேர கேட்டாலே வால் எங்கிருந்தாலும் குதிக்கும் மாயம்தான் என்னவோ ? :-)

அருண் சொன்னது…

கடைசி பந்தி "நச்"

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails