சனி, 15 ஜனவரி, 2011

சிறுத்தை - என் பார்வையில்


"அன்புக்கு நான் அடிமை" என்று பல வருடம் முன்பு தலைவர் நடித்த படம் ஒன்று பார்த்திருக்கிறேன். சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்து திருடர்களிடம் வளரும் பலே திருடனான ரஜினி ஒரு சந்தர்ப்பத்தில் தெரியாத்தனமாக  போலீஸ் அதிகாரியான தன் அண்ணனையே  கொலை செய்து விட்டு அந்த போலிஸ் வேடத்தில் அண்ணன் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர் செல்கிறார். அங்கே அராஜகம் செய்து வரும் கராத்தே மணி உள்ளிட்டோரின் கொட்டத்தை அடக்கும் ரஜினியை ஊரே கொண்டாடுகிறது. ஊருக்கு நல்லது செய்வதால் போலிசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இறுதியில் சாகாமல் இருக்கும் அண்ணன் விஜயனும் தலைவரும் உண்மை உணர்ந்து சேர்வார்கள் சுபம்.


"சிறுத்தை " கிட்டத்தட்ட அதேதான். திருடனான ராக்கெட் ராஜா தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஞானவேல் பாண்டியனின் மரணத்தின் பின்  அவனது இரு பெரும் பொறுப்புக்களான ஊராரை வில்லனிடம்ருந்து காத்தல், அவனது மகளுக்கு தந்தையாதல் ஆகிய இரு பொறுப்புக்களையும் சிரமேற் கொண்டு நிறைவேற்றி முடிப்பதே படத்தின் கதை. ஆனால் இதெல்லாம் நடப்பது படத்தின் இரண்டாம் பாதியில் . முதற் பாதியில் சந்தானத்தோடு சேர்ந்து திருடுவதும், தமன்னா இடுப்பைக் கிள்ளுவதுமாக கலகலப்பாக படம் நகர்கிறது. படத்தின் முதற்பாதி கலகப்பு என்றால் இரண்டாம் பாதி வேகம்.

படத்தை தனியொருவராய் தாங்குகிறார் கார்த்தி. இவ்வளவு காலமும் அலட்சியமான போக்குடைய ஒரு அழுக்குப் பையனாக மட்டுமே இருந்த கார்த்தி முதற்றடவையாக ஒரு கம்பீரமான போலிஸ் அதிகாரி வேடத்தில் அவரது மிடுக்கான நடிப்பிற்கு ஒரு சால்யூட். பருத்தி வீரனில் அமீர் சொல்லிக் கொடுத்ததை கப்பெனப் பிடித்து அதையே ரிப்பீட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற என் எண்ணத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறார். ராக்கெட் ராஜா வழமையான கார்த்தி. ஆனால் ராக்கெட் ராஜா  ஞானவேல் பாண்டியனாக வருகையில் கலக்கலாக இருப்பதும் உண்மை. சந்தானம் முதற்பாதி கலகலப்புக்கு கார்த்தியோடு துணை நிற்கிறார். தமன்னாவின் இடுப்பும் ஆங்காங்கே நடிக்கிறது.


பாடல்கள் பெரிதாய் சொல்லுமளவுக்கு இல்லை. பின்னணி இசையும் அவ்வளவே. படத்தில் மசாலா நெடி ரொம்பவே தூக்கல். மூளையை கழட்டி வைத்து விட்டுத்தான் படம் பார்க்கவே ஆரம்பிக்க வேண்டும். ரெண்டரை மணி நேரம் டைம் பாஸ் பண்ண நினைப்பவர்கள் மட்டும் பார்ப்பதற்கு பொருத்தமான படம் சிறுத்தை.

12 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

படம் பார்க்கப் போகிறேன்....

Jana சொன்னது…

இன்னும் பார்க்கவில்லை பார்க்கனும்.1 வயதான என் அழகிய மகளின் அபிமான ஹீரோ கார்த்தி.

Lenard சொன்னது…

இன்னும் பார்கள
பார்க்கணும் நன்றி பகிர்வுக்கு

ஷஹன்ஷா சொன்னது…

பார்க்கத்தான் வேண்டு்ம்....ஆனால் முதலில் அண்ணரின் காவலன்....பின்னர்தான் சிறுத்தை, ஆடுகளம்....

சூர்யாவுக்கு போட்டியாக சிவகுமாரின் இளைய வாரிசு...!!

தமன்னா இடுப்பா???? இதிலுமா....!

ஷஹன்ஷா சொன்னது…

///ரெண்டரை மணி நேரம் டைம் பாஸ் பண்ண நினைப்பவர்கள் மட்டும் பார்ப்பதற்கு பொருத்தமான படம் ////

அப்போ நமக்கு ஏற்றதுதான்....

KANA VARO சொன்னது…

தமன்னா இடை மேல் கண்வைக்கும் தர்ஷனை கன்னாபின்னா என கண்டிக்கிறேன். விமர்சனம் நன்று

டிலீப் சொன்னது…

படம் பார்த்த Feeling
விமர்சனம் சூப்பர் தர்ஷன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

விமர்சனம் சூப்பர்..
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தர்ஷன் சொன்னது…

நன்றி ம.தி.சுதா உங்களுக்குத்தான் சுடு சோறு

நன்றி ஜனா அண்ணா உடன மகளை கூட்டிக் கொண்டு போங்க

நன்றி லெனார்ட்

நன்றி ஜனகன்

நன்றி வரோ
ச்சே ச்சே கண்ணெல்லாம் வைக்கல அந்த வெள்ளைப் பல்லிட இடுப்பை மட்டும்தான் காட்டுறாங்கன்னு சொன்னேன் (அடடா இந்த வரில வேறெதையும் காட்டலங்கர ஆதங்கம் தொக்கி நிற்கிறதோ)

நன்றி கருண்

நன்றி டிலிப்

Unknown சொன்னது…

ஜனா அவர்களால் இந்த வார பதிவராக தெரிவு செய்யபட்டமைக்கு வாழ்த்துக்கள். மேலும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

//ஞானவேல் பாண்டியனின்//
அது ரத்தினவேல் பாண்டியன்

செல்வராஜா மதுரகன் சொன்னது…

இந்தப் படம் எனக்கு நினைவு படுத்தியது
1. ரஜினியின் மூன்றுமுகம் அங்கு அலெக்ஸ் பாண்டியன் இங்கு ரத்னவேல் பாண்டியன்.. மற்றபடி உடல் மற்றும் குரல் மொழிகளிலும் நிறைய பிரதி பண்ணி இருக்கிறார்.
2. பில்லா ஆள் மாறாட்டம்
3. சிங்கம் சூர்யா.. இந்தப் படத்துக்கு சிறுத்தை என்று பெயர் வைக்க வேற என்ன காரணம் இருக்க முடியும்...

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails