வியாழன், 12 பிப்ரவரி, 2009

என் முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்
இணையத்தில் உலாவிய பொது பார்த்த, ரசித்த பல வலைப்பூக்கள் ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக அவசர அவசரமாகவே வலைப்பூவொன்றை ஆரம்பித்தேன். முதற்பதிவாக எதை பதிவிடலாம் கதை, கவிதை, பத்திகள் (ஐயாவிடம் அவ்வளவு சரக்குகள் ????) அல்லது ஏதேனும் copy past சமாசாரம் என பலதையும் தலை வலிக்க யோசித்துதான் மிச்சம் எவையும் சிக்காத போதுதான் புரிந்தது வலைப்பதிவர்கள் படும் கஷ்டம்.
பல வலைப்பூக்கள் மாதக்கணக்கில் இற்றைப்படுத்த படாமல் இருக்கும் நிலையில் நாள் தவறாமல் பதிவிடும் வலைப்பதிவர்கள் ஆச்சரியத்துக்குரியவர்கள் அதிலும் சீரியசான விடயங்களையும் ஹாஷ்யம் ததும்ப பதிவிடுபவர்களே காலையில் நான் பஸ்ஸை தவற விட காரணகர்த்தாக்கள்.
ஏதோ ஆர்வக்கோளாரில் எழுத வந்திருக்கும் என் பதிவுகளும் அதிகம் பேரால் பார்க்கப்படும் என் எழுத்துக்களை திருத்தும் விதமாக சிறப்பான பின்னூட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எழுத ஆரம்பிக்கிறேன்.
வாழ்த்துவீர் வரவேற்பீர்

4 கருத்துகள்:

kuma36 சொன்னது…

வாங்க சார். இனிமையான வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்.

தர்ஷன் சொன்னது…

நன்றி கலை தங்கள் வரவேற்புக்கு
கொஞ்சம் தாமதமாய் Response செய்ததற்காய் மன்னிக்கவும்

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

ம்ம்ம்.... எமது மண்ணின் மற்றுமொரு மைந்தர். நினைக்கையில் பார்க்கையில் பெருமிதம் கொள்கிறேன்.
இணையமென்றால் காமம் என்று எம்மில் பாலர் தவறான வழிக்கொள்கைக்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தங்களைப் போன்றவர்களின் தரமான படைப்பும் முயற்சியும் பாராட்டத்தக்கது.
உங்களால் தான் நிறைய சாதிக்க முடியும். மகத்தான ஆசிரியப்பணியுடன் மேலும் சமூகப் பணிக்கு இறையருள் துணை நிற்கட்டும்.

எமது வேதனைகள் அனைத்தும் மேடுகளாகட்டும். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் படைப்போம்.

வாழ்த்துக்கள்.
தொடருங்கள். துயரென்றால் தோள்கொடுக்க நாம் இருக்கிறோம்.

அன்புடன்
நிர்ஷன்
(முடியுமாயின் தொடர்புகொள்ளுங்கள் ramnirshan@gmail.com)

தர்ஷன் சொன்னது…

நன்றி நிர்ஷன்
எம்மினத்தவரைப் பற்றி மற்றவரும் அறிய தாங்கள் இணையமூடு செய்யும் பணிக்கு பாராட்டுக்கள். உங்களின் வாழ்த்து மிகவும் மகிழ்வளிக்கிறது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails