வியாழன், 14 ஜனவரி, 2010

தல போல் நடக்கும் தளபதிநண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்து தான் ஆடிய பத்தாவது இறுதிப் போட்டியிலும் தோற்றிருக்கிறது இந்தியா. முதலில் 150 ஓட்டங்களுக்கு சுருட்டி விடலாம் என நினைத்தாலும் ரைனாவின் அபாரமான ஆட்டத் திறமையால் 246 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி எப்போது சொதப்புவார்கள் எனத் தெரியாததால் மிகுந்த அவநம்பிக்கையுடன்தான் டிவி முன் அமர்ந்தேன். நல்லவேளை சங்கக்கார அன் கோ என்னை ஏமாற்றவில்லை. ஆனாலும் 48 ஆவது ஓவர் வரை கடும் போட்டியைக் கொடுத்த இந்திய அணியை பாராட்டத்தான் வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் போட்டியைக் கைவிட வில்லை இந்தியா. இந்திய அணியின் பழைய போட்டிகளை நினைத்துப் பார்த்தேன். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களது Body Language ஏ எதிரணியினருக்கு உதிரி உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து விடும். தோனியின் தலைமையில் ஏற்பட்ட நல்லதொரு முன்னேற்றம் இது. இலங்கையைப் பொறுத்தவரை புதுமுகங்களுடனான அணியின் வெற்றி இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அறிகுறி. வாசுக்கு சொல்லாமலே கல்தா கொடுத்தாயிற்று. சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.

ஜனாதிபதித் தேர்தல் நாளொரு கொலையும் பொழுதொரு சச்சரவுமாய் உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் பிரச்சாரம் சப்பென இருக்கிறது. போர் வெற்றி ஒன்றைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நிலை அவர்களுக்கு. இதில் ஆளுங்கட்சி தொ(கு)ண்டர்கள் பாவம் பிரியாணிக்கும் அன்றைக்குத் தரப்போகும் காசுக்கும் ஆசைப்பட்டு ஐதேகவின் பிரச்சாரத்திற்கு போகவென வண்டியேறிய ஐந்துப் பிள்ளைகளின் ஏழைத் தாயை போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். முன்பு ஐதேக ஆட்சியில் இருந்தக் காலத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகமாகவே இருக்கும். பின் சந்திரிக்கா அரசில் ஒப்பிட்டளவில் வன்முறைகள் குறைந்தாலும் மகிந்த மீண்டும் பழைய கலாசாரத்தை கொண்டு வர முயல்கிறார். மகிந்தவின் பிரசாரம் வேடிக்கையாக இருக்கிறது. போரை வென்ற நன்றிக் கடனாக அவருக்கு வாக்களிக்கவாம். பிரித்தானியாவில் உலகப் போரை வென்ற சர்ச்சிலுக்கே அடுத்த தேர்தலில் கிடைத்தது தோல்விதான். ஜெனரலின் விளம்பரம் ஒன்றில் முதலில் வீரத்தளபதி (அப்படித்தான் போடுகிறார்கள்) சீருடையில் வருகிறார் பின் தேசிய உடைக்கு மாறுகிறார். நடக்கிறார் நடக்கிறார் விளம்பரம் முடியும் வரையில் நடக்கிறார். தளபதி தலயின் படம் ஏதும் பார்த்தாரோ தெரியாது.


நல்லப் பாடல்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. சந்தேகமில்லாமல் முதலிடம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குத்தான். "ஹோசானா" பச்சக் என மனதில் ஒட்டிக் கொண்டு போக மறுப்பதில் மற்ற பாடல்களை அடிக்கடி கேட்க முடியவில்லை. "மன்னிப்பாயா" பாடலில் ஸ்ரேயா கோஷலின்(இன்னுமொரு முன்பே வா ஸ்ரேயாவுக்கு) குரல் இனிமை. கூடவே ஈடு கொடுத்திருக்கிறார் இசைப்புயல்.
கோவாவில் ஏழேழுத் தலைமுறைக்கும் பாடல் கேட்டப் போது பழைய ஈஸ்ட்மன் கலரும் தொடர்ந்து மக்கள் நாயகன் ராமராஜன், கௌண்டமணி,செந்தில் என டைட்டில் போடுவதுமாக எல்லாம் ஒரு பிரமை. அதில் எனக்குப் பிடித்தது "இதுவரை" பாடல் அன்றியாவின் குரலில்.


ம்ம் இதை இப்போது பதிவிட்டப் பின் ஆயிரத்தில் ஒருவன் பார்க்கப் போவதாய் ஒரு ஐடியா. போய் பார்த்து விட்டு மாலை என் கருத்துக்களைப் பதிவிடுகிறேன்.

9 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

// சனத்,முரளி போன்ற ஏனைய கிழடுக் கட்டைகள் கௌரவமாய் ஓய்வுப் பெறுதல் உத்தமம்.//

இன்னமும் சனத்தின் ஃபிட்னஸுக்கு ஈடாக இலங்கையில் யார் உண்டு? முரளிக்கு ஈடாக தில்ஷன் ஃபீல்டிங் செய்கிறார். இளைஞர்கள்? கிழடு கட்டை என்ற வார்த்தை உங்களுக்கே ஓவரா தெரியலையா சகா?ஒரு மேட்ச் ஜெய்த்தார்கள். சமீபத்தில்இதுக்கு முன்னர் எத்த்னை மேட்சில் இந்தியாவிடம் மரண அடி வாங்கினார்கள். மறந்தாச்சா? :))

Jay சொன்னது…

கொன்கோடில் என்ன திரைப்படம் ஓடுகின்றது??
தைப்பொங்கல் வாழ்த்துகள்

இலங்கன் சொன்னது…

பொங்கல் வாழத்துக்கள்....

இலங்கன் சொன்னது…

ஆயிரத்தில் ஒருவன் பாத்தாப்பிறகு விரைவில் விமர்சனத்தை இடுங்கள். இப்பொல்லாம் பதிவர்களின் விமர்சம் தான் நம்பிக்கையோடு படங்களை பாரக்க வைக்கிறது...

Admin சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்த்துக்கள்

Muruganandan M.K. சொன்னது…

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

தர்ஷன் சொன்னது…

சகா தளபதி என்றவுடன் வேறு யாரையும் நினைத்து விட்டீர்களோ

//கிழடு கட்டை என்ற வார்த்தை உங்களுக்கே ஓவரா தெரியலையா சகா?//

சரி கிழடுக் கட்டைகள் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கி விடுகிறேன்

//ஒரு மேட்ச் ஜெய்த்தார்கள். சமீபத்தில்இதுக்கு முன்னர் எத்த்னை மேட்சில் இந்தியாவிடம் மரண அடி வாங்கினார்கள். மறந்தாச்சா? :))//

மறக்கவில்லை சகா அதனால்தானே அவநம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கினேன் என சொல்லியிருக்கிறேன்.

தர்ஷன் சொன்னது…

தெரியவில்லையே மயூரேசன் நான் இங்கே கண்டியில் படம் பார்த்தேன்

நன்றி இலங்கன் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்னை நம்பி படம் பார்க்க காத்திருக்கிறீர்கள் நன்றி

வாழ்த்துக்கள் சந்துரு உங்களுக்கும்

நன்றி டாக்டர் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

Why are u commenting Thala

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails