வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன்- என் பார்வையில்

கதையை நான் சொல்லப் போவதில்லை So பயமில்லாமல் படியுங்கள்


செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே.


இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில்.
கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன்.
தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள்.


கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன்.


அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும்.


இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும்.


தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.


படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

ஆயிரத்தில் ஒருவன் - ஆயிரத்தில் ஒரு படம்

31 கருத்துகள்:

Subankan சொன்னது…

ஆவலைத் தூண்டும் விமர்சனம். கண்டிப்பாகப் பார்த்துவிடுகிறேன்!

வெற்றி சொன்னது…

பதிவு பெருசா இருக்கறத பார்த்தா படத்த பத்தி நெறைய சொல்லிருப்பீங்கன்னு தெரியுது..சோ படம் பார்த்துட்டு வந்து உங்க விமர்சனம் படிக்கிறேன்..

வெற்றி சொன்னது…

:)

பின்னோக்கி சொன்னது…

நல்ல விமர்சனம்

தர்ஷன் சொன்னது…

நன்றி சுபாங்கன்
கட்டாயம் படத்தைப் பாருங்கள்

ம்ம் வாருங்கள் வெற்றி
படத்தைப் பார்த்து விட்டு வாசித்து கருத்து சொல்லுங்களேன்

நன்றி பின்னோக்கி வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

PPattian சொன்னது…

நல்ல கவரேஜ் தர்ஷன்.. ம்.. ரீமா சென் எப்பொதுமே எனக்கு பிடித்த நடிகை.. மின்னலே, கிரி etc.

படம் இன்னும் பாக்கலை..

தர்ஷன் சொன்னது…

கண்டிப்பாய் பாருங்கள் புபட்டியன்
ரீமா சென்னை இன்னமும் பிடித்துப் போகும்.

கோப்பாய் பொடியன் சொன்னது…

இடைவேளைக்கு பிறகு முதல் இருந்த சுவாரசியத்தையும் குறைக்குமளவுக்கு செய்துவிட்டார்..
பதமிழில இப்படி ஒரு படமா

kailash,hyderabad சொன்னது…

நல்ல விமர்சனம்.
நல்லவேளை.கதையை சொல்லவில்லை. படம் வித்தியாசமா இருக்கும்னு தெரியுது. கண்டிப்பா பாத்துடுவோம்.

ஜெட்லி... சொன்னது…

நல்ல அலசல் நண்பரே

துபாய் ராஜா சொன்னது…

பொங்கலோ பொங்கல்...

தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Robot சொன்னது…

நல்ல அலசல் .
//படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு.//
உங்களின் கடைசி பத்தியில் சொல்லி இருபது தான் என் கருதும் கூட . இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்வடைகிறது படம். ஆனால் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான படம் தான் என்பதை மறுக்க முடியாது .

முடிந்தால் நேரம் கிடைக்கும் போது இதை படித்து விட்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.

http://thiraithuli.blogspot.com/2010/01/blog-post.html

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

karthi, andriya, editing - we have shared common thoughts boss..:-)))

அண்ணாமலையான் சொன்னது…

நல்ல விமர்சனம்... வாழ்த்துக்கள்....

தர்ஷன் சொன்னது…

நன்றி கோப்பாய் பொடியன்
நன்றி ஜெட்லி
நன்றி துபாய் ராஜா
நன்றி ரோபோட் இதோ வந்து வாசித்து விடுகிறேன்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி அண்ணாமலையான்

வந்தியத்தேவன் சொன்னது…

அருமையான விமர்சனம் தர்ஷன்

ரீமா சென் தமிழ்த் திரையுலகத்தினால் அதிகம் கவனிக்கப்படாத அழகிய நடிகை. மின்னலேயிலிருந்து எனக்கு அவரைப் பிடிக்கும் ஆனாலும் ஒருதரும் அவரிடம் அதிகம் வேலை வாங்கவில்லை உங்கள் விமர்சனத்தைப் பார்க்கும் போது செல்வா நல்லா வேலை வாங்கியிருக்கின்றார் என்பது தெரிகின்றது. வார இறுதியில் படத்தைப் பார்த்துவிடவேண்டியதுதான்.

தர்ஷன் சொன்னது…

நன்றி வந்தி அண்ணா
இந்த முறை ஹாட் அண்ட் சவர் சூப்பில் ரீமா அக்காவின் படத்தை போட்டு விடுகிறீர்களா?

naaivaal சொன்னது…

////தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும்////

unmayana varthaigal darshan

குடுகுடுப்பை சொன்னது…

கண்டிப்பாக பார்க்கப்படும்.

CS. Mohan Kumar சொன்னது…

உங்களுக்கு பிடித்த அளவு எனக்கு பிடிக்க வில்லை நண்பா. இதை விட கொடுமை . படம் பார்க்காத சிலர் கதை outlineயை மட்டும் கேட்டு விட்டு இந்த மாதிரி வித்தியாச கதையை சப்போர்ட் செய்யா விட்டால் எப்படி என்கிறார்கள். அவர்கள் இந்த தண்டனையை முழுதும் (தியேட்டர்களில் some scenes கட் செய்யும் முன்) அனுபவித்து பார்க்கட்டும். நானும் கூட விமர்சனம் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்

தர்ஷன் சொன்னது…

நன்றி நாய்வால்

நன்றி குடுகுடுப்பை கட்டாயம் பாருங்கள்

வருகைக்கு நன்றி மோகன் குமார்
படம் முழுமையாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை என்பது உண்மைதான் எனினும் படத்திற்கு வழங்கப்படும் ஊக்கம் வித்தியாச முயற்சிகளை பெரும் செலவில் முன்னெடுக்க ஊக்குவிப்பாக இருக்கும்அல்லவா

நர்சிம் சொன்னது…

மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாஸ்.. இது போல எழுதுவது கொஞ்சம் கஷ்டம். நல்லா எழுதி இருக்கீங்க.

வெற்றி சொன்னது…

படம் பார்த்தாச்சு..நிச்சயமா தமிழ் சினிமாவ புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி!!

தர்ஷன் சொன்னது…

நன்றி நர்சிம்
வரவுக்கும் பாராட்டுக்கும் உங்கள் முதல் வரவு
உங்கள் பாராட்டு உண்மையில் பெரிய அங்கிகாரம் நன்றி

வாங்க வெற்றி
படம் பிடித்ததில் மகிழ்ச்சி

Ganesh சொன்னது…

super review. i have seen the movie twice in 2 days. its definitely a never-made-before movie in tamil.

completely agree with you abt reema sen.

மாதேவி சொன்னது…

நல்ல விமர்சனம் தர்ஷன்.படம் பார்கலாம் என நினைக்கிறேன்.

Karthikeyan G சொன்னது…

அருமையான கட்டுரை.. தொடருங்கள்..

நேற்றே உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டேன் :)

தர்ஷன் சொன்னது…

thanks Ganesh
thanks Madevi
Thanks karthikeyan

வெற்றி சொன்னது…

my view on aayirathil oruvan
http://nenjinadiyil.blogspot.com/2010/01/blog-post_16.html

திவ்யாஹரி சொன்னது…

ரீமாசென் எனக்கு பிடிக்கும். உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது .. படம் வித்தியாசமா இருக்கும்னு நெனக்கிறேன்.. கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்..

k7smart சொன்னது…

தமிழ் படம் விமர்சனம்
http://tamilmoviesong4u.blogspot.com/2010/01/tamil-padam.html

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails