புதன், 19 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 2


குன்றும் குழியுமான
பாதைகளில் கூட
பிரயாணிக்க
பிரியப்படுகிறேன்
உன் கன்னக் குழியில்
விழுந்தெழுந்தப் பின்


உன்னுடன் பேசுகையில்
உன் தோள்களுக்குப் பின்
சிறகுகள் இல்லையென்பதை
நிச்சயித்துக் கொள்கிறேன்
இல்லையென்றால்
ஒரு தேவதையுடன்
பேசுகிறோமோ என
சந்தேகமாய் உள்ளது


மனசாட்சி கேள்வி
கேட்கிறது
ச்சே!
நீயெல்லாம் நாத்திகனா
ஒரு தேவதையை நோக்கி
தவமிருக்கிறாய்


எவ்வளவு வேகமாய்
புரண்டாலும்
விரைவில் விடிவதேயில்லை
உன் நினைவுகளுடன்
நத்தையாய் நகர்கிறது
இரவு10 கருத்துகள்:

VELU.G சொன்னது…

உங்க காதல் நல்லாயிருக்கு தொடருங்கள்

எல் கே சொன்னது…

//ஒரு தேவதையுடன்
பேசுகிறோமோ என
சந்தேகமாய் உள்ளது//
arumai

சுதாகர் குமார் சொன்னது…

அருமை தொடருங்கள் .....

தர்ஷன் சொன்னது…

நன்றி வேலு

நன்றி LK

நன்றி சுதாகர்

மனோரஞ்சன் சொன்னது…

//மனசாட்சி கேள்வி
கேட்கிறது
ச்சே!
நீயெல்லாம் நாத்திகனா
ஒரு தேவதையை நோக்கி
தவமிருக்கிறாய்//
நல்ல வரிகள். தொடரட்டும் உங்கள் காதல்(கவி) பயணம். வாழ்த்துக்கள்.

தர்ஷன் சொன்னது…

நன்றி மனோரஞ்சன்
தங்கள் கவிதைகளையும் வாசித்துள்ளேன்

மார்கண்டேயன் சொன்னது…

தர்ஷன் தாங்கள் தரும் காதலின் தரிசனங்கள் தக்க சான்றுகளாய் உள்ளது காதலுக்கு . . . தக்கவைத்துத் தருவீர் தடையின்றி

ஷஹி சொன்னது…

wow!this is fabulous!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான காதல்க் கவிதை வாழ்த்துக்கள் சகோ .
என் தளத்திற்கும் முடிந்தால் வந்துபார்த்து உங்கள்
கருத்தினை இட்டுச் செல்லுங்கள் .இந்த நட்புத் தொடர
இன்றே உங்கள் வலைத்தளத்தைத் தொடர்கின்றேன் .
நன்றி சகோ பகிர்வுக்கு .

பெயரில்லா சொன்னது…

எவ்வளவு வேகமாய்
புரண்டாலும்
விரைவில் விடிவதேயில்லை
உன் நினைவுகளுடன்
நத்தையாய் நகர்கிறது
இரவு.......................

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails