வெள்ளி, 7 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா


தேவதைகள் வெண்ணுடையில்
இருந்திருக்கலாம்
சிறகுகள் சகிதம்
கிரேக்க புராணங்களிலும்
பாரதிராஜா படங்களிலும்

நான் பார்த்தவளோ அப்படியில்லை
பின்னாமல் விட்டக் கூந்தல்
நெற்றியில் குங்குமக் கீற்றுடன்
பல நேரம் சல்வாரிலும்
சில நேரம் skirt and blouse இலும்தான்

என்ன
சமயங்களில் ராட்சசியாகிறாள்
குழி விழச் சிரித்து
கொலை செய்தே

அவ்வப்போது சாபமுமிடுகிறாள்
இரவுத் தூக்கம்
இல்லாமற் போகக்கடவதென

அவசரமாய் அவள் நிழற்படம் தேவை
தேவதை என்பது கற்பனையாம்
சொல்லும் என் நண்பர்களிடம்
காட்ட வேண்டும்


இனி அவ்வப்போது இப்படி புலம்பும் வாய்ப்புகள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே

7 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

தர்ஷன் ஏன் இப்பிடி ஒரு தலைப்பு.கொஞ்சம் அழகு படுதினாலே அழகான கவிதை.

தர்ஷன் சொன்னது…

நன்றி ஹேமா
இருந்தாலும் உங்களைப் போல் எல்லாம் எழுத முடியுமா
வெறும் புலம்பலாகப் பட்டதால்தான் இந்தத் தலைப்பு அவ்வப்போது புலம்புகிறேன் பார்த்து கருத்து சொல்லுங்கள்

Prasanna சொன்னது…

எனக்கு தலைப்பு(ம்) ரொம்பவே பிடித்து இருக்கிறது :)

//இப்படி புலம்பும் வாய்ப்புகள் //

என்ன விஷயம் ஹீ ஹீ

செல்வராஜா மதுரகன் சொன்னது…

நன்றாக இருக்கு தர்ஷன், உங்கள் கசிதைகளை மேலும் படியக ஆவலாக இருக்கிறேன் தேவதைகள் பற்றி எனக்கும் எழுத விருப்பம் இதை ஒருகால் வாசித்துப் பாருங்களேன், எப்படி இருக்கென்று..
இரு கண்களும் சில சூரியன்களும்

தர்ஷன் சொன்னது…

நன்றி பிரசன்னா
விஷயம் ஒன்றும் விசேஷமில்லை ஹீ ஹீ

தர்ஷன் சொன்னது…

நன்றி மதுரகன்

//நன்றாக இருக்கு தர்ஷன், உங்கள் கசிதைகளை மேலும் படியக ஆவலாக இருக்கிறேன் //

என் கவிதைகள்தானே இந்தப் பக்கம் கவிதை என இருக்கும் லேபலை கிளுக்கி வாசியுங்கள் நேரமிருந்தால்

//தேவதைகள் பற்றி எனக்கும் எழுத விருப்பம் இதை ஒருகால் வாசித்துப் பாருங்களேன், எப்படி இருக்கென்று.. //

இதோ படிக்க கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்

ஷஹி சொன்னது…

congrats! work out aagidichchaa?

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails