புதன், 19 ஜனவரி, 2011

ஆடுகளம் - என் பார்வையில்

 சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின்  வாழ்வில் ஆடும்  சதியாட்டமே வெற்றிமாறனின் "ஆடுகளம்".  நீண்ட நாட்களுக்கு  பிறகு தமிழில் ஒரு அருமையான  படம்.  

சேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(. செ. ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.

 தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும்  விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி  கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம். 

வெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா? இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம்  செய்திருக்கிறார்.
அதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் .செ..ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.

. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.

ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.
ஆடுகளம் - அதகளம் 

20 கருத்துகள்:

Bavan சொன்னது…

//ஆடுகளம் - அதகளம் //

இதைத்தவிர மற்றைய ஒன்றும் படிக்கவில்லை, படம் பார்த்திட்டு வந்து படிக்கிறேன்..;)

இப்போதைக்கு வோட்டு மட்டும்..:D

வர்ட்டா..

pichaikaaran சொன்னது…

ரசித்து எழுதியிருக்கிறீர்கள் . சூப்பர்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

கட்டுகஸ்தோட்டை அரீனாவிலா பார்த்தீர்கள்?

Bavan சொன்னது…

//ஆடுகளம் - அதகளம் //

இதைத் தவிர மற்றைய விடயங்கள் படிக்கவில்லை,
ஏனென்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை..:)

பார்த்தவிட்டு வருகிறேன், இப்போதைக்குப் வோட்டு மட்டும்...:D

வர்ட்டா..

Subankan சொன்னது…

ஆடுகளம் - என் பார்வையில் பொங்கல் படங்களில் முதலிடம் :)

தர்ஷன் சொன்னது…

நன்றி பவன் பார்த்து விட்டு திரும்பவும் வாசியுங்கள்

நன்றி பார்வையாளன்

யோ கட்டுகஸ்தோட்டையில் சிறுத்தை அதற்கடுத்த நாளிலிருந்து காவலன் என மாறி மாறி போடுவதாக கேள்வி. அங்கே சிறுத்தைத்தான் ரிலீஸ் நாளில் பார்த்தேன் ஆடுகளம் ஓர் அலுவலாக கொழும்பு சென்ற போது பார்த்தேன்.

நன்றி சுபாங்கன்

மதுரை சரவணன் சொன்னது…

படம் நல்லா இருக்கு ஆனா ஓ(ட்)டாது அப்படீன்னா என்னங்க அர்த்தம்... பார்க்கலாம் ஆனா ...அப்படிசொல்லுகிறமாதிரி இருக்கு.

Jhona சொன்னது…

சூப்பர்.......

ம.தி.சுதா சொன்னது…

நான் இன்னுமே பார்க்கல சகோதரம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

Jana சொன்னது…

//இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான்.//

பெரும்பாலானவர்களின் தகவல் இதுதான். இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. ஆனால் ஆடுகளம் பார்ப்பதே.
பார்ப்போம்.

செல்வராஜா மதுரகன் சொன்னது…

அருமையான படம்... இது போன்ற படங்களின் வரவு தமிழ் சினிமாவில் யதார்த்தை இன்னும் பேணிக்கொண்டிருக்கிறது..
யார் யார் என்று இல்லாமல் ஒட்டுமொத்த குழுவே நான்றாக இயங்கியுள்ளது...

தர்ஷன் சொன்னது…

நன்றி சரவணன்
படம் அருமையான படம் இரண்டரை மணிநேரம் பொழுதுபோக்கி விட்டு வர நினைப்பவர்கள் காவலன் ஆல்லது சிறுத்தைக்கே செல்ல விரும்புவர். அதிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் படத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாது அதனால்தான் வெற்றி கேள்விக்குறி என சொன்னேன்.

நன்றி ஜோனா

நன்றி மதி சுதா

நன்றி ஜனா அண்ணா

நன்றி மதுரகன்

R. Gopi சொன்னது…

நல்ல விமர்சனம்

KANA VARO சொன்னது…

சினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது.///


Super...
'பல துறைகளில் உள்ளோர் புதிதாக வரும் திறமையாளர்களை, தங்களுக்கு பிறகு இவன்... என்று தான் கூறுவார்களே தவிர, தன்னைவிட இவன் சிறந்தவன் என்று கூறமாட்டார்கள். படக்கதையும் இதையே உணர்த்துகிறது.

ஷஹன்ஷா சொன்னது…

படம் இன்னமும் பார்க்கல.......தனுஸ் வெளுத்திருப்பாரு...நம்பிக்கை...!
பார்ப்போம்....

கார்த்தி சொன்னது…

பொங்கல் படங்களில் ஆடுகளம் மட்டுமே இப்போது பார்த்துள்ளேன்! அடுத்த கிழமைதான் அடுத்த இரண்டும்.
ஆடுகளம் நல்லபடம் எனக்கு!
இலங்கை கலைஞர் ஜெயபாலன் பற்றி பலருக்கு ரெரிந்திருக்கவில்லை. ஞாபகமூட்டயமைக்கு நன்றி. இவர் எனது நண்பரின் மிக நெருங்கிய உறவினர். நீங்கள் கூறியதுபோல் Entertainmentஐ மட்டும் இலக்காக கொண்டு தியேட்டர் செல்வோருக்கு இப்படம் பிடிக்காது!

தர்ஷன் சொன்னது…

நன்றி வரோ
நன்றி ஜனகன்
நன்றி கார்த்தி

சாமக்கோடங்கி சொன்னது…

படம் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்.. நன்றி..

//ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். //

என்னுடைய நண்பர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.. சன்டிவியின் விளம்பரமும் அப்படி ஒரு மாயையை அதிகப் படியாக உண்டு பண்ணுகிறது.. காவலன் பட விளம்பரம் டிவியில் நான் இன்னும் பாக்கலை.

ம.தி.சுதா சொன்னது…

என்னங்க ஆடுகளத்தோட ஆளை காணவே இல்ல எஸ்கேப்பா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

மாலதி சொன்னது…

அருமையான படம்... இது போன்ற படங்களின் வரவு தமிழ் சினிமாவில் யதார்த்தை இன்னும் பேணிக்கொண்டிருக்கிறது..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails