செவ்வாய், 24 நவம்பர், 2009

தூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு

பொழுது போகாமலிருந்ததலும் கொஞ்சம் ஹிட்ஸ் கூட்ட ஆசைப்பட்டதாலும் இப்படி ஒரு பதிவு. நம் எல்லோருக்கும் பிடித்த கனவுக் கன்னியர்கள் இருப்பார்கள் இல்லையா? கொஞ்சம் அவற்றை மீட்டுப் பார்ப்பதிலும் பகிர்வதிலும் ஒரு அலாதியான சந்தோசம். இதோ எனக்கு பிடித்தவர்கள். இவர்களில் உங்களுக்குப் பிடித்தவைகளையும் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

10. Lesley Ann down


ஒரு மூன்று வருடங்களுக்கு முன் ஆசிரியப்பயிற்சியை முடித்து விட்டு Appointment கிடைக்கும் வரை வீட்டில் இருந்த காலப்பகுதி. பொழுது போகாமல் பகல் நேரத்திலேயே MTV(இலங்கையின் தனியார் ஆங்கில Channel) யில் ஆங்கில தொடர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படிப் பார்த்ததுதான் Sunset beach. அதே தொடரில் ஏகப்பட்ட இளம்பெண்கள் இருந்தாலும் என்னைக் கவர்ந்ததென்னவோ கொஞ்சம் வயசான Lesley Ann down. அந்த கொஞ்சம் வயசு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. just 54 தன கணவனுக்குத் தெரியாமல் ஒரு வாலிபனுடன் காதல் வளர்க்கும் வேடம். அம்மணி அசத்தியிருப்பார். இப்போதெல்லாம் அவர் நடித்த தொடர்கள் ஏதும் போகின்றதா தெரியவில்லை. போனாலும் பார்க்க நேரமாயிருக்கின்றது.

9. ஷில்பா ஷெட்டி

வண்டுகளின் சிறகசைவினால் எழும் சிறு காற்றுக்கும் துவளும் மெல்லிடையாம் தமயந்திக்கு. ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ என யோசிக்கச் செய்தவர் இவர் ஷில்பா ஷெட்டி. Mr. Romeo தான் நான் பார்த்த இவரின் முதற் திரைப்படம். எப்பவோ நன்றாக வந்திருக்க வேண்டியவர் Big brother நிகழ்ச்சியினால் காலம் கடந்துதான் புகழ் இவருக்குக் கிடைத்தது. ம்ம் இப்போதும் பெருமூச்செறியச் செய்யும் அழகுக்கு சொந்தக்காரர். ராஜ் குந்த்ராவைப் பார்த்தால்தான் வயிற்றெரிச்சலாய்இருக்கிறது.

8. ரவீனா தண்டன்


இவர் "ஜீசு படிகே மஸ்து மஸ்து " என ஆடிய ஆரம்பக் காலப்படங்களைப் பார்த்த போதெல்லாம் இவர் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லை. அப்படியே காலச்சக்கரம் உருண்டோடி சில வருடங்களின் பின் அமிதாப்புடன் நடித்த Aks நாகர்ஜுனாவுடன் நடித்த Agni varsha ஆகிய படங்களைப் பார்த்த போது மனம் "ரவீன ரவீனா" எனப் பாடத் தொடங்கியது. பழம் பழுக்க பழுக்கதான் அழகாயிருக்குமாம் இவரை பார்த்தப் போதுதான் அது புரிந்தது. இவரது வெகு சமீபமாய் வந்த படமொன்றைப் பார்த்தேன் ப்ச் பழம்ரொம்பவே பழுத்து விட்டது ரசிக்க முடியவில்லை.

7. Shannon tweed

எல்லோரையும் போல Doctor கனவுடன்தான் நானும் Advanced level ஐ ஆரம்பித்தேன். ஆனால் இன்று வெறும் ஆசிரியனாக ஆகிப் போனதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. அவர் Shannon tweed. கண்டி,மாத்தளை அல்லது மலையகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் கட்டாயம் பேராதேனிய துசித்த படமாளிகையை பற்றியும் அங்கு போடப்படும் படங்களைப் பற்றியும் அறிந்திருப்பார்கள். கண்டியில் எனக்கு சனிக்கிழமை Biology மற்றும் Chemistry வகுப்புகளும் ஞாயிறன்று physics உம நடக்கும். பஸ்,சாப்பாட்டு செலவு போக மிச்சப்படுத்தும் காசை ஒரு மூன்று மாதம் சேர்த்தால் ஒரு படம் பார்ப்பதற்கான காசு ரெடி. அவ்வாறான நாட்களில் physics வகுப்பு முடிய Theater போய் பார்த்த படங்களில் பல இவர் நடித்தவை. Night Eyes,Women Scorned, Indecent Behavior இன்னும் பெயர் ஞாபகத்துக்கு வராத பல. சமீபமாய் கூட அப்படி அப்படி காட்சிகளற்ற அவர் Hulk Hogan உடன் நடித்தப் படம் ஒன்றை TV யில் பார்த்தேன். அவரது படம் பார்க்கும் பரவச அனுபவம் ம்ம் பார்த்தால்தான் தெரியும். Shannon tweed மட்டும் என் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்தால் நிச்சயம் Doctor ஆகி இருப்பேனோ என்னவோ.

6. Bipasha basu

இவரை நான் முதலில் பார்த்தது Ajnabee என்ற படத்தில். அதில் வில்லியாக வில்லன் அக்ஷய்குமாரின் மனைவியாக நடித்திருப்பார். அப்போது அவரை ரசிக்கத் தொடங்கியது அது அப்படியே Jism, Madoshi எனத் தொடர்ந்து No entry இல் அணில்கபூருடன் வரும் ஒரு பாடல் வரை தொடர்ந்தது. அசரடிக்கும் உயரம், அளவான உடலமைப்போடு கண்கொட்டாது பார்க்கச் செய்யும் கருப்பழகி அவர். Christiano Ronaldo வே கவிழ்ந்த பின் நாமெல்லாம் எம்மாத்திரம் ம்ம் John abraham க்குத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.

சரி ஒரு ஐந்தை இங்கே போட்டிருக்கின்றேன். நாளையோ நாளை மறுதினமோ முதல் ஐவரையும் போடுகிறேன். Ok

6 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

பாக்கி உள்ள 5 ஐட்டத்துக்காக வெயிட்டிங்!!

தர்ஷன் சொன்னது…

நன்றி கலையரசன் சீக்கிரம் உங்கள் விருப்பம் நிறைவேறும்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

ஜொல்லோ ஜொல்லு.. நானும் கண்டிதான் இதுவரை துசித்தவில் படம் பார்த்ததில்லை என்று சொல்ல மாட்டேன்...

Unknown சொன்னது…

//என்னைக் கவர்ந்ததென்னவோ கொஞ்சம் வயசான Lesley Ann down. அந்த கொஞ்சம் வயசு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. just 54 //

ஓ! அவரா நீங்கள்? ம்... ம்... உப்பிடியான ஆக்களை வெற ஏதோ எண்டு சொல்லுவாங்கள்....
ஏதோ நடக்கட்டும்...

நான் ஆங்கிலப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை என்பதால் எனக்கு பெரும்பாலானோரைத் தெரியாது.
பெயர் கேள்விபடப்ட ஷில்பா ஷெட்டி போன்றவர்களையும் படங்களில் பார்த்தது குறைவு....

என்னவோ நடக்கட்டும்....


//யோ வொய்ஸ் (யோகா) said...
ஜொல்லோ ஜொல்லு.. நானும் கண்டிதான் இதுவரை துசித்தவில் படம் பார்த்ததில்லை என்று சொல்ல மாட்டேன்..//
ஓ! நீங்க வேறயா?
பாருங்கோ பாருங்கோ....

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....

தர்ஷன் சொன்னது…

//யோ வொய்ஸ் (யோகா) said...

ஜொல்லோ ஜொல்லு.. நானும் கண்டிதான் இதுவரை துசித்தவில் படம் பார்த்ததில்லை என்று சொல்ல மாட்டேன்... //

நன்றி யோகா
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்

//கனககோபி said...
ஓ! அவரா நீங்கள்? ம்... ம்... உப்பிடியான ஆக்களை வெற ஏதோ எண்டு சொல்லுவாங்கள்....//

ஐயோ கோபி அப்படி எல்லாம் இல்லை வயது வித்தியாசப் பாகுபாடின்றி அனைவரையும் ரசிக்கும் உள்ளம் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எல்லாம் நல்லாத்தான் இருக்கு, இந்த பிபாசா பாசுவ மேக்கப்பு இல்லாம நீங்க பாத்தது இல்லையே? பாத்துடாதீங்க, நான் சமீபத்துலதான் பாத்து தொலச்சேன்!

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails