ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஒரு ஸ்கூல் மாணவனின் காதல் கவிதைகள்

பள்ளிப் படிப்பில் மட்டுமே மூழ்கியிருக்கும் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இன்றைய காதலர் தினத்தை சரியாக பயன்படுத்த நினைத்து எழுதிய சில கிறுக்கல்கள். success ஆகும்னு நினைக்கிறீங்க!

நியூட்டனின் மூன்றாம் விதி

சரியாய்த்தான் இருக்கிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
அளவற்ற என் காதலுக்கு
சமனாய் மட்டுமல்ல
எதிராகவும்
வெறுப்பைத்தானே உமிழ்கிறாய்


சமாந்தரக் கோடுகள்

நெருங்கியும் வராமல்
விலகியும் போகாமல்
அப்படியே தொடர்கிறாய்
நமக்கிடையேயான இடைவெளியை
சளைக்காமல் தொடர்கிறேன் - நானும்
முடிவிலியிலேனும் சேரும்
சாத்தியத்தை உத்தேசித்து

Survival Of fittest

வகுப்பில் மிகையாகவே இருந்தோம்
உன் பின்னால் சுற்றுவோர்
உன்னைக் கவர
நாம் எடுக்கும் முயற்சியில்தான்
எத்தனை மாறல்கள்
உன்னை அடைவதற்கான
காதற் போட்டியில்
தக்கவன் அவனென்ற உன் முடிவில்
சொல்லவும் திராணியற்று
தகாததாய் மடிந்தது
என் ஊமைக் காதல்

6 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

நீங்க 10 வது படிக்கிறீங்களா?

வாழ்த்துக்கள்!

angel சொன்னது…

naanum 10th than

Unknown சொன்னது…

தர்ஷன் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்.. ஆனா ஏன் எல்லாமே சோகத்தையே சொல்லுது?

தர்ஷன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...

நீங்க 10 வது படிக்கிறீங்களா?

வாழ்த்துக்கள்!//

அட நான் அவ்வளவு சின்ன பையன் இல்லை. இது சும்மா கற்பனை

//angel said...

naanum 10th than//

அப்படியா angel அப்ப கொஞ்சம் இந்த மாதிரி விடயங்களில் தள்ளியே நில்லுங்கள் அனுபவஸ்தன் சொல்கிறேன்


//முகிலன் said...

தர்ஷன் ஒவ்வொரு கவிதையும் சூப்பர்.. ஆனா ஏன் எல்லாமே சோகத்தையே சொல்லுது?//

என்ன செய்வது முகிலன் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அப்படி

Unknown சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்தது "சமாந்தரக் கோடுகள்" தான்..அருமை..நல்ல கற்பனை..

தர்ஷன் சொன்னது…

வாருங்கள் கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்
நன்றி

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails