புதன், 19 அக்டோபர், 2011

பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்


பிரபஞ்ச சூப்பர் ஸ்டார்(அகில உலக என யாரோ ரஜினி என்பவரை அழைக்கிறார்களாம்) பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் திருவடி பணிந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.

தலைவர் ஓர் அக்குபஞ்சர் டாக்டர். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தவர் , கலையார்வம் கொண்ட தமிழ் ரசிகர்கள் தமிழில் தரமான சினிமாக்களின் வருகையின்மையால் வெதும்பிக் கொண்டிருந்ததை, எதேச்சையாக தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டிய ஒரு கணப்பொழுதில் ஞானத் திருஸ்டியால் அறிந்தார். ரசிகர் தம் குறை தீர்க்க அவர் எடுத்த உடனடி நடவடிக்கைத்தான் ”லத்திகா”.  தமிழ்நாட்டில் பெரம்பலூரில் 200 நாட்களைக் கடந்து இன்னமும் வெற்றி நடைப் போடும் அரியக் கலைப் பொக்கிஷம். அதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்காகவே சுரங்கப்பாதை, மூலக்கடை முருகன், மன்னவன், திருமா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை என ஒரே நேரத்தில் 6 படங்களில் ஓய்வொழிச்சலின்றி நடித்து வரும் ஒப்பற்ற திரைக்கலைஞன். ”எழுச்சித் தமிழன்” திருமாவளவன் அவர்களால் “பவர் ஸ்டார்” எனப் பட்டமளிக்கப்பட்டு இன்று ரசிகர்களாலும் அவ்வண்ணமே அழைக்கப்படுபவர்.


காற்றடைத்த பலூன்களான இன்றைய தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களையெல்லாம் தன் அக்குபஞ்சர் ஊசியால் குத்தி காத்துப் போன ஸ்டார்களாக்கிய நம்ம பவர் ஸ்டார் பெருமைதனை அகில உலகுக்கும் பரப்பும் நோக்குடன் ஹன்சிகாவின் காதலனும் இலங்கைப் பதிவருமான மைந்தன் சிவாவினால் ஆரம்பிக்கப் பட்ட முகப்புத்தக குழுமம் இன்று 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு வீறுநடைப் போடுகின்றது. அவரது இவ்வரியப் பணிக்கு ஓர் அணிலாக நானும் ஓர் பதிவின் மூலம் கைக்கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

3 கருத்துகள்:

சித்திரவீதிக்காரன் சொன்னது…

ஆனந்தவிகடனில் பவர்ஸ்டார் பேட்டி படித்த அன்றிலிருந்து நானும் டாக்டர்.சீனிவாசனின் தீவிர ரசிகராகிவிட்டேன். மதுரையில் 150வது நாள் விழா கொண்டாடிய போது மதுரை ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க லத்திகா திரைப்படம் சினிப்பிரியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அவரது மன்னவன் வெளிவந்து வெற்றிகரமாக 500 நாட்கள் ஓடும் என்பதை தலைவரின் தீவிர விசிரியாக கூறிக்கொள்கிறேன். நன்றி.

Unknown சொன்னது…

நன்றி நண்பரே!!
உங்களை போன்ற தீவிர விசிறிகள் தான் தலைவருக்கு தேவை!!
கொல கொலயா முந்திரிக்கா இந்த பவர் ஸ்ரார் அடிச்சா கத்தரிக்கா கத்தரிக்கா......"!!!

maruthamooran சொன்னது…

வாத்தியரே........!
என்னது இது. ஆனாலும், இந்த பவர் ஸ்டாரை நினைச்சாலே மனது லேசாகிவிடுகிறது!! ஹிஹிஹி.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails