திங்கள், 24 அக்டோபர், 2011

சுவரில் கிறுக்கியவை

சும்மா இருக்க முடியாமல் என் ஃபேஸ்புக் சுவரில் அவ்வப்போது கிறுக்கியவைஉனக்கு புரியாதென்றப் போதும்
தொடர்கிறேன்
கவிதை எழுதுவதையும்
உன்னைக் காதல்
செய்வதையும்……..

தண்ணீருக்கு பதிலாய்
கண்ணீரால் துவைக்கிறேன்
நீ வாங்கித் தந்த
ஆடையை

கொடுத்ததெல்லாம்
திரும்பக் கேட்டவள்
மறந்து விட்டாள்,
அவள் நினைவுகளையும்
தந்த முத்தங்களையும்
திரும்பப் பெற

உன்னால்
இழப்புகளேதுமில்லை
வரவுதான்
இன்னமும் மிச்சமிருக்கிறது
உன் நினைவுகளேனும்


உன்னிடம் பேசிக்களித்த
நீண்ட இரவுகள்
இன்னமும் தொடர்கின்றன
என்ன? சம்பாஷணையெல்லாம்
என் தலையணையுடன்தான்

இப்போதுதான் புரிகிறது
எப்போதும் உடனிருப்பேன்
என நீ சொன்னதன் அர்த்தம்
அழகாய் எதைப்பார்த்தாலும்
உன் ஞாபகம்

காம்ப்ளான் அருந்தாமலே
தினம் வளர்கிறது
 உன் மீதான என் காதல்

2 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>காம்ப்ளான் அருந்தாமலே
தினம் வளர்கிறது


உன் மீதான என் காதல்

haa haa

பெயரில்லா சொன்னது…

அழகாய் எதைப்பார்த்தாலும்
உன் ஞாபகம் ........ Nice.. -ஜனனி-

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails