சனி, 29 அக்டோபர், 2011

அட்டு ஃபிகர் 7ம் அறிவும் சுமார் ஃபிகர் வேலாயுதமும்ஒவ்வொரு படம் பார்ப்பதற்கும் ஒவ்வோர் மனநிலையில் செல்வோம். அது அந்த படம் சம்பந்தப்பட்டவர்களின் முந்தைய படங்களை வைத்து நாமாக எடுத்துகொண்ட முன்முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது அதன் படைப்பாளிகள் ஊடகங்களில் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையிலோ அமையும். 

விஜய் படம் பார்ப்பவர்கள் யாரும் ஒரு அலாதியான கலையனுபவத்தை பெற வேண்டி திரையரங்கிற்கு செல்வதில்லை. கலகலவென நகைச்சுவை, அசத்தல் நடனத்துடன் அருமையாய் 5 பாட்டு, சண்டை காட்சிகள் என ஒரு ரெண்டரை மணி நேர பொழுதை போக்குவதே பிரதான நோக்கம். அதை சரியாய் பொதி செய்து தரத் தெரியாத இயக்குனர்களிடம் மாட்டி அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் இம்சைப்படுத்தியதே தன் தோல்விகளுக்கு காரணம் எனத் தெரிந்து கொண்டார் போலிருக்கிறது. அவர் ரசிகர்கள் அல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் சுமாராய் ஒரு படம் விஜயிடமிருந்து.

கதையெல்லாம் சொல்லி அலுப்படிக்க போவதில்லை. 7ம் அறிவு அளவுக்கு புதிதாக, நல்ல முடிச்சுள்ள கதையல்ல. ஒரு 100 படங்களிலாவது பார்த்திருக்க கூடிய தீவிரவாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் சாமான்யனின் கதை. ஆனால் ரசிக்கும் விதமாக அதை கொடுத்த விதத்தில் ஏ.ஆர். முருகதாஸை பல மடங்கு விஞ்சியிருக்கிறார் ராஜா.

விஜய் வழமையான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றோடு நகைச்சுவையும் இயல்பாக வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகம். அவரது ரசிகர்களுக்கு இது தாராளம். நமக்கும் பெரிதாய் அலுக்கவில்லை(சில இடங்கள் தவிர்த்து). சலிப்பூட்டும் அவரது முந்தைய சாகசங்களை ஓரளவு தவிர்த்திருக்கிறார். பாராட்டுக்கள். 

ரெண்டு ஹீரோயினும் சும்மா. ஜெனிலியா ம்ம் பெரிதாய் இம்ப்ரெஸ் செய்யவில்லை. தங்கை கல்யாணத்திற்கு வந்த தேங்காய்கள் சிறுத்திருப்பதாய் விஜய் ஆதங்கப்படும் போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் குலுங்கி குலுங்கி வரும்போதும், விஜய்க்கு ஏதோ மருந்து கொடுத்து மேட்டர் பண்ண பார்க்கும் போதும் ஹன்சிகா வசீகரிக்கிறார்.


சந்தானம் எனக்கு பெரிய ஏமாற்றம் அவரை விட பராட்டா சூரி இதில் கவர்கிறார். எம்.எஸ். பாஸ்கர் அவ்வப்போது சொல்லும் ஒன்லைனர்களால் ரசிக்க வைக்கிறார். வில்லன்களுக்கு விஜய்யிடம் அடி வாங்குவது தவிர பெரிதாய் வேலையில்லை.

விஜய் ஆண்டனி பாடல்கள் கேட்கலாம் ரகம். அங்க இங்க சுட்டாலும் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை தந்திருக்கிறார் ஜெயம் ராஜா. இரண்டாம் பாகம் ரொம்பவும் போரடித்தது உண்மை ஆனால் தியேட்டரில் கேட்ட கைதட்டல்களும் விசில் சத்தங்களும் எல்லோருக்கும் அப்படியல்ல என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாமே ராஜா. விஜய் தூக்குடுவை ரீமேக்குவதாக இருந்தால் பிரபுதேவாவை விட ராஜாவை நம்பி கொடுக்கலாம். 


அப்புறம் இந்த படத்தை சலிப்பில்லாமல் என்னைப் பார்க்கச் செய்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. பிறகு அட்டு ஃபிகரை பார்த்துட்டு பார்த்தா சுமாரான ஃபிகரும் பேரழகியா தெரிவது போலத்தான் இதுவும். 

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

நீங்களுமா?ஹன்சிகாவா...ம்ம்ம்

Unknown சொன்னது…

பாஸ்! உண்மைய சொல்லுங்க!
ஸ்ருதி - அட்டு பிகர்
ஹன்சி - சுமாரான பிகர்
இப்பிடித்தானே சொல்ல வாறீங்க? :-)

ஓக்கே பாஸ்! நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க படங்கள் பற்றி!!!

தர்ஷன் சொன்னது…

அனைவருக்கும் நன்றி பாஸ்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails