செவ்வாய், 15 டிசம்பர், 2009

எதிர்பாரா சந்திப்பு

தான் பிரிந்த பழைய காதலியை எதேச்சையாய் சந்தித்த இளைஞன் ஒருவனின் மனப் பதிவுகள்

எதிர்பார்ப்பேயில்லாமல்
ஏதோ சென்று
கொண்டிருந்தவன்
எதிர்பார்ப்பின்றி
திரும்பிப் பார்த்தேனே
எது சொன்னது
எதிரே நீயிருப்பதாய்

நெருங்கி வர மனம்
துடித்தும்
இறுக்கமான மனதுடன்
நான்
இருந்தும் முடியவில்லை
அலையும் மனதைக்
கட்டுப்படுத்த

எனக்கு முன்னே
என்னைக் கண்டு கையசைத்தவளே
இதுபோலவே
கண்டுகொண்டிருக்கக்கூடாதா?
உன் மீதான என் காதலை

"எப்படி இருக்கறீங்க?"
ஆச்சரியப்பட்டுத்தான் போனேன்
நாம் ஒன்றாய்
கேட்டுக்கொண்ட போது
என் இல்லாமல்
போயிற்று
காதல் என்ற புள்ளியில்
மட்டும் இந்த ஒற்றுமை





6 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

//"எப்படி இருக்கறீங்க?"
ஆச்சரியப்படுத்தான் போனேன்
நாம் ஒன்றாய்
கேட்டுக்கொண்ட போது
என் இல்லாமல்
போயிற்று
காதல் என்ற புள்ளியில்
மட்டும் இந்த ஒற்றுமை//


அருமையான கவி வரிகள். வாழ்த்துக்கள்

கலையரசன் சொன்னது…

பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?

தர்ஷன் சொன்னது…

நன்றி சே.குமார்
நன்றி கலையரசன்

பெயரில்லா சொன்னது…

நல்லாருக்கு.

இருக்கும் சில எழுத்துப்பிழைகளை நீக்கினால் எளிதாகப் புரியும்.

தர்ஷன் சொன்னது…

நன்றி நண்பரே இப்போது நீக்கி விட்டேன். இனிமேல் பதிவிட முன் ஒருமுறை சரிப் பார்க்க வேண்டும்

பெயரில்லா சொன்னது…

vanakkam tharsan. unkal intha kavithai unmai unarvukal. innum nenkal kavithai padaikka vaalththukal tharsan.

anpudan
sivamohan
srilanka
m_sivamohan@yahoo.co.in

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails